சர்வதேச சட்டங்களின்படி நதிநீர் உரிமையை தராமல் சுற்றியுள்ள
இனத்தவரால் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். மத்திய அரசு அதை வேடிக்கை
பார்த்து வருகிறது.
காவேரி நதிநீர் விஷயத்தில் காவேரி தீர்ப்பாயம்
உத்தரவிட்டும் கர்நாடக அரசு அதை மதிக்காமல் தண்ணீர் தர மறுத்து வருகிறது. உச்ச
நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இது
இந்திய இறையாண்மைக்கு எதிரானது இல்லையா?
காவேரி மேலாண்மைக் குழுவை அமைக்க உச்ச நீதி மன்றம்
உத்தரவிட்டு இன்னமும் மத்திய அரசு அதை அமைக்காமல் இருக்கிறது. இது நீதிமன்ற
அவமதிப்பு இல்லையா?
உங்க உச்ச நீதிமன்றத்தை நீங்கள் மதிக்காவிட்டால் பின்னர்
யார் மதிப்பார்கள்?
இதற்கிடையில் சில கோமாளிகள் நதிநீர் இணைப்பு குறித்தும் மழைநீர்
சேமிப்பு குறித்தும் பேசுகிறார்கள். காவேரி நதிநீரில் நமக்கு உள்ள உரிமை, மழைநீரைச்
சேகரிப்பது, நதிநீர் இணைப்பு இது மூன்றும் தனித்தனி விஷயங்கள் ஆகும்.
மழைநீரை சேமிக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்
கருத்தும் இல்லை. ஆனால் அதற்காக காவேரியில் நமக்குள்ள ஆற்று நீர் உரிமையை விட்டு
விடச் சொல்வது அறிவீனம் ஆகாதா?
காவேரி விஷயத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே நீர் வரத்துள்ள ஆற்று
நீர்ப்பாதையாக உள்ளது. அதில் வரும் நீரில் பங்கு தாராமல் மறுப்பதுதான் பிரச்சனை.
ஆனால் இந்த கோமாளிகள் என்ன சொல்கிறார்கள் என்றால் தேசிய நதிகளை இணைத்தால் அதன் மூலமாக
இதுபோன்ற நதிநீர் பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடுமாம்.
ஐயா அறிவாளிகளா,
இருக்கிற நதிநீர் பாதையில் வரும் தண்ணீரை தரச் சொல்லி
உங்கள் நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை தர முடியாத உங்களால் இல்லாத
பாதையில் எவ்வாறு தண்ணீரைக் கொண்டு வந்து தரமுடியும்?
இது எப்படி இருக்கிறது என்றால் எனக்கு கிடைக்க வேண்டிய
தண்ணீரை தராமல் பக்கத்து வீட்டுக்காரன் தடுக்கிறான். நாலைந்து ஊர்க்கோடியில்
இருக்கும் தண்ணீரை கொண்டு வந்து இவர்கள் தருவார்கள் என்று சொல்வார்களாம். அதை நாம்
நம்ப வேண்டுமாம். கேட்கிறவன் கேனையனாக இருந்தால் எருமைமாடு ஏரோபிளேன் ஓட்டுமாம்.
ஆமா,
அந்தக் கோமாளிகள் யார் என்று கேட்கிறீர்களா? ஒருத்தர்
விஜயகாந்து, இன்னொருத்தரர் ரஜினி காந்து.
No comments:
Post a Comment