நாம் இன்று சட்டமன்றங்களில்
நடைபெறும் ஜனநாயக மீறல்களைப் பற்றி பேசுகிறோம். 1952 தேர்தலிலேயே தமிழகச் சட்டமன்றத்தில்,
அதாவது அப்போதைய சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் ஜனநாயகப் படுகொலையை நடத்தித்தான் காங்கிரஸ்
கட்சி ஆட்சிக்கு வந்தது.
அது பற்றி பார்ப்போம்.
அப்போதைய சென்னை
மாகாணத்தில் மொத்தம் 375 தொகுதிகள் (கேரளா, கர்நாடகா, ஆந்திரா பகுதியைச் சேர்ந்த தொகுதிகளை
உள்ளடக்கியது) இருந்தன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கம்யூனிஸ்ட், ஃபார்வேர்டு
பிளாக் கட்சிகள் கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டன.
பெரியார், காங்கிரஸ்
எதிர்ப்பு என்பதை மட்டுமே கொள்கையாகக் கொண்டிருந்ததால் எந்தவித நிபந்தனையும் விதிக்காமல்
மேற்கண்ட கட்சிகளோடு சுயேட்சைகளுக்கும் ஆதரவளித்தார். இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது
முத்துராமலிங்கத் தேவரும் பெரியாரும் பல இடங்களில் ஒரே மேடையில் பேசியுள்ளனர்.
கட்சி ஆரம்பித்து
3 ஆண்டுகளே ஆகியிருந்த நிலையில் திமுக, கம்யூனிஸ்ட்களுக்கு ஆதரவளித்தால் அவர்கள் பிரிவினைக்கு
ஆதரவு தரமாட்டார்கள் என்பதால் சுயேட்சைகளை ஆதரித்து கட்சியின் நிதிநிலையை வலுப்படுத்திக்
கொள்ள திட்டமிட்டது. மேலும் பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பம் இடுபவர்களுக்குத்தான்
ஆதரவு தெரிவிப்போம் என்று அறிவித்தது.
இந்த நிலையில்
நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 375 தொகுதிகளில் 152 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி
படுதோல்வி அடைந்தது.
ஃபார்வேர்டு பிளாக்
கட்சியின் தலைவரான தேவர், எதிர்க்கட்சி ஆட்சியமைக்க ஏற்பாடு செய்தார். ஆந்திர பிரகாசம்
தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி அமைக்கப்பட்டது.
கம்யூனிஸ்ட் தலைவர்களான
ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி ஆகியோர் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தனர்.
காங்கிரஸ்க்கு
இவ்வளவு பெரிய தோல்வி ஏற்பட்டதும் காமராஜர் ஓடோடிச் சென்று ராஜாஜியிடம் சரணடைந்தார்.
“தாங்கள்தான் சென்னை மாகாணத்தை காப்பாற்ற வேண்டும்” என்று மன்றாடினார். உடனே ராஜாஜி
அதற்கு ஒப்புக் கொண்டு அதற்கான வேலைகளைச் செய்தார்.
பிரகாசம் தலைமையில்
அமைக்கப்பட்ட ஐக்கிய ஜனநாயக முன்னணி 168 சட்டமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்தைப் பெற்று
தங்களைத்தான் அமைச்சரவை அமைக்க அழைக்க வேண்டும் என்று கவர்னரிடம் கேட்டுக் கொண்டது.
ராஜாஜியிடம் காங்கிரஸ் கட்சியின் 152 சட்ட மன்ற உறுப்பினர்கள்தான் இருந்தனர்.
கவர்னர் ஸ்ரீ பிரகாசா
ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவர் பிரகாசத்தை அழைக்காமல் ராஜாஜியை அழைத்து அமைச்சரவை
அமைக்க கூறினார்.
இவ்வாறு காங்கிரஸ்
கட்சி 1952-ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் முதல் ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றியது.
“168 பெரிதா?
152 பெரிதா? என்று கேட்டபோது, 152-தான் பெரிது என்று கவர்னர் பதில் அளித்தார். அதற்கு
அவர் கூறிய காரணம் காங்கிரஸ் கட்சியில்தான் ஒரே சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற
அதிக உறுப்பினர்கள் உள்ளனர் என்பதே.
“168 பேர் பல கட்சி
சின்னங்களிலும் சுயேட்சைகளாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், எனவே அவர்களை ஒரே
கட்சியாக கருத முடியாது” என்று அவர் கூறினார்.
இவ்வாறான ஜனநாயகப்
படுகொலையை அடிப்படையாகக் கொண்டுதான் அன்று ராஜாஜி, காங்கிரஸ் அரசாங்கத்தை அமைத்தார்.
தேர்தல் தோல்வி காமராஜரை, தனக்கு எதிரான, காந்தியால் “க்ளிக்” என்று கிண்டலாக சுட்டிக்
காட்டப்பட்ட ராஜாஜியின் காலில் விழ வைத்தது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படாத உறுப்பினரான
ராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமர் (முதல்வர்) ஆனார்.
அதன் பிறகு ராஜாஜி,
எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியின் உழைப்பாளர் கட்சி, மாணிக்கவேல் நாயக்கரின் காமன் வீல்
கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்தார். அவர்களில் மாணிக்கவேல் நாயக்கரை மட்டும்
அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார்.
இந்தச் சதியை அரங்கேற்றாதிருந்தால்
காங்கிரஸ் அன்றே தமிழக மண்ணிலிருந்து ஒழிந்திருக்கும்.
-ஆதாரம்
1. முடிசூடா மன்னர்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
2. http://en.wikipedia.org/wiki/C._Rajagopalachari
--------------------------------------------
No comments:
Post a Comment