சில தினங்களுக்கு முன்பு சீர்மரபினர் நலச் சங்க நிர்வாகி மருத்துவர்
திரு ஜெபமணி அவர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் பிறமலைக் கள்ளர்களுக்கு
அரசு வழங்கிய சீர் பழங்குடியினர் அந்தஸ்தை பெற்றுத் தர தங்களது சங்கம் எடுத்து வரும்
முயற்சிகளை பற்றி விளக்கிக் கூறினார்.
மேலும்
நலிவடைந்து வரும் கள்ளர் பள்ளிகளை மேம்படுத்த முயன்று வருவதாகவும் சொன்னார். அப்போது
நான் எங்கள் ஊரில் உள்ள கள்ளர் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மழலையர் வகுப்புகளை
தொடங்கி அதில் 20 மாணவர்கள் வரை சேர்த்துள்ளதையும் இரண்டாவது ஆண்டாக வெற்றிகரமாக நடத்தி
வருவதையும் பற்றிச் சொன்னேன்.
உடனே
26-10-2015 அன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் தங்கள் சங்கம் நடத்தும் தேவர் திருவிழாவிற்கு
அந்தக் குழந்தைகளை அழைத்து வந்து பேசச் சொன்னார். அதற்கேற்ப நான் எங்கள் பள்ளியைச்
சேர்ந்த மழலையர் வகுப்பு ஆசிரியைகள் ராஜேஷ்வரி, ஜெயபாண்டியம்மாள் மற்றும் நான்கு குழந்தைகளை
அழைத்துச் சென்றோம்.
குழந்தைகள்
ஆசிரியைகள் கேட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்திலேயே பதில் சொன்னார்கள், தமிழில் கேட்ட கேள்விகளுக்கு
ஆங்கிலத்தில் பதில் சொன்னார்கள். அது அவர்களது பொது அறிவுத் திறனும் காட்டும் வகையில்
அமைந்தது. அவர்களின் பதில் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இணையான அறிவுத்
திறனைக் காட்டியது. விழாவிற்கு வந்திருந்த அனைவரும் குழந்தைகளைப் பாராட்டினர்.
இந்த
விழாவில் கவிஞர், எழுத்தாளர் கே. ஜீவபாரதி, டாக்டர் சுதாசேஷையன், தேவர் களஞ்சியம் வி.எஸ்.
நவமணி, கவிஞர் சினேகன், மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், மறத்தமிழர்
சேனை கட்சியின் தலைவர் புதுமலர் பிரபாகரன் மற்றும் சீர்மரபினர் நலச் சங்க நிர்வாகிகள்
ஆகியோர் கலந்துகொண்டனர்.
http://perumalthevan.blogspot.in/2014/01/blog-post_5289.html
http://perumalthevan.blogspot.in/2013/07/blog-post_20.html
No comments:
Post a Comment