Tuesday, August 8, 2017

மோதி சீனாவுடன் போர் செய்வாரா?



சீனாக்காரன் ஏன் மீண்டும் மீண்டும் போருக்கு வா, வா என்று அழைக்கிறான். போர் நடைபெற்றால் அவனுக்கு இழப்பே ஏற்படாதா?

- வாஜ்பாய், கார்கில் போரை நடத்திக் காட்டினார். ஆனால்
மோதி எந்தப் போரையும் நடத்த மாட்டார். ஏன்? ஏனெனில் அவர் கார்பரேட்களின் பிரதமர். போர் நடத்துவதால் ஏற்படும் இழப்புகளை விட போர் காலத்தில் வியாபாரம் செய்ய முடியாமல் போனால் ஏற்படும் இழப்புகளே அதிகமாக இருக்கும். கார்பரேட்களுக்கு.

ஆகவே, சில பல நூறு கிமீ நிலம் போனாலும் பரவாயில்லை, ஆனால் வியாபாரம் மட்டும் படுத்து விடக் கூடாது. அதனால் அடிவாங்கினாலும் கூட சத்தம் போட்டு அழக் கூடாது. ஏன்னா, அமைதிதான் வியாபாரத்திற்கு உகந்த சூழல்.

ஆகவேதான், சீனாக்காரன் வா, வா என்று அழைக்கிறான். இவன் அகிம்சை பேசுகிறான். சீனாக்காரனுக்கு எப்படியாவது நிலத்தைக் கைப்பற்ற வேண்டும். ஆனால் இவனுக்கு நிலம் போனால் பரவாயில்லை. வியாபாரியின் நோக்கம் லாபம் மட்டுமே, அது இழவு வீடாக இருந்தாலும் சரி, கல்யாண வீடாக இருந்தாலும் சரி.

மோதி ஜென்மத்திற்கும் போருக்கு சம்மதிக்க மாட்டார். காந்தியின் மறு உருவமாக திகழுவார். ஏன்னா, காந்திக்கு ஒரு வாடிக்கையாளரின் முக்கியத்துவம் என்னவென்று தெரியும். அதனால் அகிம்சை வாழ்க.

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...