Sunday, August 6, 2017

முதலாளித்துவத்தின் கோர முகம் பாஜக




இன்று மதியம் மதுரை அருகே ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு மூதாட்டியைச் சந்தித்தேன். காலையில் முப்பது ரூபாய்க்கு 4 இட்லிகள் சாப்பிட்டேன் வயிற்றில் கடவுக்கும் போதவில்லை என்று கிராமிய மொழியில் சொன்னார்.

மேலும் என்னப்பா, இது இந்த மோடி என்னென்னவோ செய்கிறார். முதலில் பணத்தை மாற்றுகிறேன் என்று மக்களை அலைக்கழித்தார். இப்போது ரேஷன் கிடைக்காது என்கிறார். சிலிண்டர் விலை உயரும் என்று சொல்கிறார். ஒண்டிக் கட்டைதானே, அவருக்கென்ன கவலை என்று அங்கலாய்த்துக் கொண்டதோடு, இதற்கெல்லாம் முடிவு வருமா என்று அப்பாவியாகக் கேட்டார். தான் இறங்கப் போகும் ஊரிலிருந்து 4 கிமீ நடக்க வேண்டும் என்றும் கவலைப்பட்டார்.

கரிய நிறத்தில் மண்ணின் மகளாக இருந்த பெண்ணின் தலை முடிகள் பரட்டையாக இருந்தன. காலில் அணிந்திருந்த செருப்பில் ஒன்று அறுந்து எப்படியோ கட்டப்பட்டிருந்தது. அவரைக் கண்டு அவரது பேச்சைக் கேட்டு பரிதாபப் பட்டேன்.

மோடி என்ற அறிவாளி அம்பானி, அதானிகளால் உருவாக்கப்பட்டவர். அவர் முதலாளிகளுக்குத்தானே விசுவாசமாக இருப்பார்? முதலில் இத்தனை லட்சம் பேருக்கு இலவசமாக சிலிண்டர் கொடுத்தோம் என்று பெருமை பேசிய பாஜகதானே இன்று சிலிண்டர்களுக்கு மானியம் கிடையாது என்று சொல்லி இருக்கிறது? முதலில் பெட்ரோல் டீசல் விலையை இரு வாரங்களுக்கு மாற்றியமைக்க அனுமதித்த பாஜகதானே இன்று தினமும் மாற்றிக்கொள்ள அனுமதித்துள்ளது.

பாஜக இந்து ஆதரவு என்றுதானே சொல்லி ஆட்சியைப் பிடித்தது? இப்போது இந்துக்களுக்கு ஆதரவாகத்தான் இதையெல்லாம் செய்கிறதா? இப்படியெல்லாம் சிக்கனம் பிடிக்கும் பணத்தை என்ன செய்யப் போகிறது? அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் கொட்டிக் கொடுக்கப் போகிறதா? இதில் இந்தியா, அகண்ட பாரதம், தேசப்பற்று என்ற பிதற்றல்கள் வேறு.

காங்கிரஸ் கட்சியை முதலாளிகள்தான் ஆக்கிமித்து வருகிறார்கள், ஏழைகள் வெள்ளையருக்கு எதிராக போராடி சுதந்திரம் வாங்க தயாராக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில்தான் காந்திக்கும் சுபாஷ் சந்திர போஸூக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி மறைமுகமாக முதலாளிகளுக்கு ஆதரவாக இருந்து வந்தது. பாஜக முதலாளிகளின் நேரடி பிரதிநிதியாக இருந்து அதன் கோரமுகத்தைக் காட்டி வருகிறது.

(படம் - இணையத்தில் கிடைத்தது)

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...