Monday, August 7, 2017

அரங்கேற்றக் காதலும் ஆணவக் கொலையும்





உண்மையான காதல் ஒருபுறம் இருக்க நாகரீக உலகில் அரங்கேற்றக் காதல்களை பேசாமல் இருக்க முடிவதில்லை.

உயர்ந்த சாதிப் பெண்ணை திருமணம் செய்தால் உயர்ந்துவிடுவோம் என்ற மூளைச் சலவைகளுக்கு மத்தியில், குறிவைத்து காதலித்து சொத்தில் பங்கு கேட்கும் முறையும், எந்தவொரு பெண்ணையும் (ஆண்களுக்குத் தனி திட்டம் உள்ளது) தொடர்ந்து முயற்சி செய்து காதலில் விழ வைப்பது போன்ற அரங்கேற்றக் காதல் பயிற்சி வகுப்புகளும், பின்னர் காதல் புளித்து விட்டால் வேசம் வெளுத்துவிட்டால் அரசியல் முகமூடியுடன் பேரம் பேசுவதை சோரம் போவது என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

இருந்தாலும் நாம் சொல்வதைச் சொல்லத்தானே வேண்டியுள்ளது. தலித்கள் வேற்று குலப் பெண்களை திருமணம் செய்து விட்டால் மட்டும் அவர்கள் சமநிலையை எட்டிவிட முடியாது. அடங்க மறுத்து அத்து மீறி திருப்பித் தாக்கி மட்டும் அரசியல் உரிமைகளைப் பெற்று விட முடியாது. இதில் அவர்களுக்கு மற்ற சமுதாயத்தவரின் முழு ஒத்துழைப்பும் தேவை என்பதை மறந்து விடக் கூடாது.

வன்கொடுமைச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துவதால் தலித்கள் மற்ற சாதியினரிடம் நற்பெயர் பெற முடியவில்லை. பெண்களை திட்டமிட்டு வளைத்துப் போட்டால் மட்டும் அவர்களின் ஆதரவை பெற்று விட முடியுமா என்ன? அந்தப் பெண்ணுக்கு தன்னைப் பெற்றெடுத்த பெற்றோருக்கு திருப்பிச் செய்ய எந்தக் கடமையும் இல்லை என்ற வாதிடும் முற்போக்காளர்களுக்கு மத்தியில் பெண்ணுரிமை என்று பேசி மட்டும் மற்ற சமுதாயத்தினரிடம் நன் மதிப்பை பெற்று விட முடியுமா என்ன?

இங்கே தீண்டாமையை விட கொடுமையான காணாமையால் பாதிக்கப்பட்ட நாடார் சமுதாய மக்கள் இன்று மற்ற சமுதாயத்தவரிடம் அந்தஸ்தையும் மரியாதையையும் பெற்றது எப்படி என்பதை தலித்கள் மட்டுமல்லாமல் அவர்களுக்கு கண் மூடித்தனமாக ஆதரவு தெரிவிக்கும் முற்போக்கு ஆசாமிகளும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதையெல்லாம் ஏன் பேச வேண்டியுள்ளது? இன்று காதல் திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு வழங்க காவல் துறையில் தனிப் பிரிவை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதுதான். அவ்வாறு உத்தரவிட்டால் மட்டும் போதுமா, அதை அமல்படுத்த வேண்டாமா என்று குரல் கொடுக்கிறார்கள் தலித் தலைவர்களும் முற்போக்கு வேடதாரிகளும்.

ஆனால் என்ன ஆகும். தொடர்ந்து சமுதாய பிளவுகள் நீடிக்கவே இது வழி செய்யும். ஆணவக் கொலைகள் சற்றும் குறையாது. அதன் காரணம் தமிழ்ச் சமூகத்தின் கட்டமைப்பு. அது உயர்ந்த சாதியாக இருந்தாலும் தாழ்ந்த சாதியாக இருந்தாலும் பெண் கொடுத்து பெண் எடுக்க விரும்பவில்லை என்பதுதான் தமிழ்ச் சமூகத்தின் வழக்கமாக உள்ளது. எனவே சட்டம் சட்டமாக மட்டுமே இருக்கும். மேலும் சமூக பிளவு ஏற்படவே செய்யும். 

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...