Sunday, September 10, 2017

ஆணவக் கொலைக்கான சூழல்


தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு ஆதிக்கச் சாதி தம்பதியினர். இவர்கள் பிழைப்புக்காக சென்னை அருகே வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள். மகள் +2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் திடீரென ஒருநாள் அந்தப் பெண் காணாமல் போகிறார். திருமணத்திற்காக எடுத்து வைத்திருந்த 10 பவுன் நகையும் வீட்டில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் ரொக்கப் பணத்தையும் காணவில்லை. அந்தப் பெண் தனது செல்போனை அணைத்து விடுகிறார். காதல் வெறி அவரை  அப்படிச் செய்ய வைக்கிறது. உண்மையாக ஒருவரை காதலிக்கும் பெண் தன் காதலை தன் பெற்றோரிடம் தெரிவித்து சம்மதம் பெற வேண்டும் அல்லது திருமணம் வேண்டாம் என்று அடம் பிடிக்க வேண்டும் அல்லவா? ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.

பெண் காணவில்லை என்றதுமே பதட்டமடைந்த அந்த ஆதிக்க சாதி தம்பதி உடனடியாக தங்களது சொந்த ஊருக்கு பயணம் செய்கிறார்கள். அந்தப் பெண் அங்கும் வரவில்லை என்று தெரிகிறது. அவரின் பெற்றோர்கள் அவரது தோழிகளை தொடர்பு கொள்கிறார்கள்.

தோழிகள், அருகேயுள்ள ஒரு ஊரைச் சேர்ந்த தலித் இளைஞன் அந்தப் பெண்ணை திருப்பூர் அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளதாக தெரிவிக்கிறார்கள். அந்தப் பெண் அந்த இளைஞனின் சிம் கார்டைத்தான் பயன்படுத்தி பேசி வருவதாக தெரிவிக்கிறார்கள். தெய்வீக காதலுக்கு துணை நிற்கும் புதுமைப் பெண்களின் வாக்குமூலம் இது.

பொதுவாக அரங்கேற்றக் காதலில் ஈடுபடும் தலித் இளைஞர்களின் தந்திரம் இதுதான். வயதுக்கு வந்த பெண்ணாக இருந்தால் அவர்களோடு காவல்நிலையத்தில் சரணடைந்து பாதுகாப்பு கேட்பார்கள். பெண் வயதுக்கு வராத நிலையில் இருந்தால் அவரை வயதுக்கு வரும் வரை ஏதாவது ஒரு இடத்தில் தற்காலிகமாக தங்க வைப்பார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிப் பட்டறை அப்படி. இதில் பெண்ணை சீரழித்தல், மிரட்டி, பேரம் பேசி பெருந்தொகை வசூலித்தல், சொத்தில் பாகம் கோருதல் போன்ற காட்சிகளும் உண்டு.

மேற்படி பெண் வயதுக்கு வர 9 மாதங்கள் உள்ளன. அவர் வயதுக்கு வந்த பின்னர் அடுத்த கட்டத்திற்கு நகர்வார்கள். அந்த அளவுக்கு அவர்களின் காதல் புனிதமானது. அந்த இளைஞர் ஒன்றும் தெரியாதவர் போல தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரில் தங்கி இருக்கிறார்.

இப்போது நம்முன் எழும் கேள்வி என்னவென்றால், அந்தப் பெண் தனக்குப் பிடித்த காதலனைத் தேடிச் சென்று விட்டாள் என்று பெற்றோர் நிம்மதியாக இருந்துவிட வேண்டுமா? அல்லது உண்மையில் அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டுமா? ஏனெனில் அவர் காதலித்தாக கூறப்படும் இளைஞர் தனது சொந்த ஊரில் எதுவும் தெரியாதது போல இருக்கிறார். அப்படியானால் அந்தப் பெண்ணுக்கு என்ன ஆனது? அவர் ஆறு, குளங்களில் விழுந்து இறந்து விட்டாரா? இல்லை அவர் எடுத்துச் சென்ற நகை, பணத்தை பறித்த திருடர்கள் அவரை கொலை செய்து விட்டார்களா? இல்லை அவரை யாரும் கடத்திச் சென்று விபச்சார விடுதியில் விற்று விட்டார்களா என்று கண்டுபிடிக்க வேண்டாமா?

ஆனால் அப்பெண்ணைப் பெற்ற பெற்றோர் என்ன செய்வது என்று தெரியாமல் பதைபதைத்து அலைந்து திரிகிறார்கள். புத்தி பேதலித்த அவர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள அந்த ஊரின் காவல் நிலையத்திற்குச் செல்கிறார்கள். ஆனால் காவல் அதிகாரிகள் நிகழ்வு சென்னை அருகே நடந்துள்ளதால் அங்கு சென்று வழக்கை புகார் செய்யுங்கள் என்று சொல்கிறார்கள்.

உடனே அந்த ஆதிக்க சாதி தம்பதியினர் சென்னை செல்கிறார்கள். ஆனால் அங்குள்ள காவல் அதிகாரிகள் பெண்ணின் சொந்த ஊரும் தேனி மாவட்டத்தில் உள்ளது, குற்றம் சாட்டப்படும் பையனும் தேனி மாவட்டத்தில் இருக்கிறான், எனவே நீங்கள் அங்கேதான் புகார் செய்ய வேண்டும் என்று சொல்லி அனுப்பி விடுகிறார்கள்.                  

இதற்கிடையில், அவர்கள் யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியாமல் உள்ளூர் ஆதிக்க சாதி பிரமுகர்களின் உதவியை நாடி அரசியல் பிரமுகர்களின் உதவியை நாடி வருகிறார்கள். இதற்கிடையில் வக்கீல்களின் உதவியும் நாடப்படுகிறது. அவர்கள் தொடர்ந்து சென்னை காவல் நிலையத்திற்கு அழுத்தம் கொடுத்த பின்னர் அந்தப் பெண் காணாமல் போன 12 வது நாளில் முதல் தகவல்  அறிக்கை பதிவு செய்யப்படுகிறது.

அதன் பின் ஒருநாள் கழித்து சென்னை காவலர் அழைத்து வரப்பட்டு அந்தப் பையன் கைது செய்யப்படுகிறார். பின்னர் அந்தப் பெண் அருகேயுள்ள ஒரு ஊரிலிருந்து மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறார்.

இதுபோன்ற பிரச்சனைகளில் என்ன நடக்கும்?

1. மீட்டுக் கொண்டு வரப்படும் பெண் தன் தாய் - தந்தை, உறவினர்களை பார்த்ததும் மனம் மாறி அவர்களுடன் சென்று விட சம்மதிக்கலாம்.
2. அப்படி மனம் மாறாதபட்சத்தில் அவர் தன் தாய் - தந்தையருடன் செல்ல மறுக்கலாம். அவ்வாறான சூழல்களில் அவர் காப்பகங்களில் ஒப்படைக்கப்படலாம். அவர் வயதுக்கு வந்த பின்னர் மேற்படி இளைஞனை திருமணம் செய்து கொள்ளலாம்.
3. பெண்ணைச் சார்ந்தவர்களைப் பொறுத்து சமூக எதிர்வினை நிகழும். அவர்கள் வலிமையற்றவர்களாக இருந்தால், சாபம் விட்டு விட்டு தலை முழுகுவார்கள்.
4. வலிமை இருந்தும் சட்டச் சிக்கலால் ஒன்றும் செய்ய முடியாதவர்கள், அவரிடம் உள்ள நகை பணத்தைப் பெற்றுக் கொண்டு, ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று எழுதி வாங்கிக் கொண்டு சென்று விடுவார்கள்.
5. எதற்கும் துணிந்தவர்கள், அந்தப் பெண்ணையோ, அந்த பையனையோ தீர்த்துக் கட்ட திட்டமிடலாம். வாய்ப்பு கிடைக்கும் போது அதை அரங்கேற்றுவார்கள்.

அப்புறம் என்ன? நமது முற்போக்கு முகமூடிகள் தொலைக்காட்சியின் முன்னே அமர்ந்து காரசாரமாக வாக்குவாதம் செய்வார்கள். தலித்களுக்கு பாதுகாப்பு இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நீட்டி முழக்குவார்கள்.

தமிழர்கள் காதலுக்கும், கலப்புத் திருமணத்திற்கும் எந்தக் காலத்திலும் எதிர்ப்பு தெரிவித்தது கிடையாது. ஆனால் அதே தமிழர்கள் திருமண உறவை ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்லி இருக்கிறார்கள். திருமணத்தோடு ஒரு குடும்பம் நிலை பெற்று விடுவதில்லை. அது ஒரு புதிய தொடக்கமாகும். அந்த புதிய குடும்பத்திற்கு இருதரப்பினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவையாக உள்ளது.

இதில் ஒரு தரப்பினர் ஒத்துழைக்கா விட்டாலும் அந்தக் குடும்பம் முழுமையான ஒன்றாக இருக்காது. திருமணத்திற்குப் பின் அந்தத் தம்பதிக்கு குழந்தை பிறக்கும். அப்போது அவர்களுக்கு இரு தரப்பினரும் உதவியும் உளவியல் ஆதரவும் தேவை. காதலித்து திருமணம் செய்து கொண்டு நகரங்களில் தனியாக வாழும் தம்பதியினர் இதுபோன்ற நிகழ்வுகளின்போது படும்பாடு சொல்லி மாளாது.

நான் மும்பையில் வசிக்கும்போது இப்படி ஒரு காதல் தம்பதியினருக்கு உதவும் நிலை ஏற்பட்டது. பெரிதாக வசதியில்லாத அந்த தம்பதிக்கு ஆதரவுக்கு யாரும் இல்லை. இளம் வயதினரான அவர்களுக்கு பிரச்சனைகளை சமாளிக்கும் பக்குவமும் இல்லை. மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்து விட்டது. செவிலியர் திட்டியதால் அந்தப் பெண் மருத்துவமனையை விட்டு வெளியேறி விடுகிறார். மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடலை தர மறுக்கிறார்கள். அப்போதுதான் எனது உதவி நாடப்பட்டது.

அதன் பின்னர் நான் மருத்துவர்களைச் சந்தித்துப் பேசினேன். பின்னர் அவர்கள் குழந்தையின் உடலை வழங்க சம்மதித்தார்கள். பின்னர் இறப்புச் சான்றிதழ் பெற்று, டாக்ஸி பிடித்து, சுடு காட்டில் பணம் செலுத்தி ரசீது பெற்று அந்த குழந்தையின் உடலை புதைத்தது எனது இறுதி வரை நின்று அந்த வேலையை முடிக்க வேண்டியதாயிற்று. இது ஒரு எடுத்துக் காட்டுதான். காதலித்து திருமணம் செய்த ஒரு இளைஞனால் அந்த பெண்ணுக்கு மருத்துவம் செய்ய முடியாத நிலையில் அவர் பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்த நிகழ்வுகளும் உண்டு.

இவ்வாறு குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் இளம் தம்பதிக்கு குழந்தைப் பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு என எல்லா சூழல்களிலும் மற்றவர்களின் உதவி தேவையாக உள்ளது. அந்த மற்றவர் யாரோ  ஒருவராக இருப்பதை விட உறவினராக இருப்பது நலமாக இருக்கிறது. அதனால்தான் தமிழர்கள் திருமண உறவை ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொன்னார்கள்.

இயற்கையான காதல், கலப்புத் திருமணத்தை ஏற்கும் தமிழர்கள் அரங்கேற்றக் காதலை, கலப்புத் திருமண பிரச்சாரத்தை கடுமையாக எதிர்க்க வேண்டும். ஏனெனில் இது அரசியல் காரணங்களுக்காகச் செய்யப்படுகிறது. இது தமிழர்களின் சமூக கட்டமைப்பை சிதைக்கச் செய்யப்படுகிறது. சமூகங்கள் சிறப்பாக இருக்க, குடும்ப அமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும். குடும்ப அமைப்பு சிறப்பாக இருந்தால் தமிழர்களை வீழ்த்த முடியாது. எனவேதான் முற்போக்கு முகமூடிகள் சௌகரியமாக மேற்படி பின்விளைவுகள் பற்றி பேச மாட்டார்கள். அவர்களின் வேலை பெண்ணை சுதந்திரமாக்குவது மட்டும்தான். அப்புறம் அவர்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன? அவர்களுக்கு சமூகமும் அரசாங்கமும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூக்குரலிடுவார்கள்.
------------------------------------------------------------------------------------------------------


No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...