Wednesday, July 12, 2017

தமிழ்த் தேசியத்தில் முஸ்லீம்கள்

ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் சொல்கிறார்...


நீங்கள் சாதி, இனம் தமிழ்த் தேசியம் என்ற பெயரில் திராவிடர்களைப் போலவே முஸ்லீகளை தூக்கிப் பிடிக்கிறீர்கள்...

- முஸ்லீம்களை தூக்கிப் பிடித்து அரசியல் செய்தது காந்தி கும்பல். அதன் வழியேதான் அனைத்து முற்போக்குவாதிகளும் அவர்களை தூக்கிப் பிடித்து அரசியல் செய்தனர். இதில் திராவிடர்களும் அடங்குவர்.

பெரும்பான்மை இந்துக்கள் இந்தப் போக்கை வெறுத்தனர். அந்த உணர்வை பயன்படுத்தியதுதான் பாஜக. காங்கிரஸின் மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாகவே பாஜக வெற்றி பெற்றுள்ளது. எனவே அது தான் உண்மையிலேயே இந்துக்களுக்கு செய்யக் கூடிய கட்சி என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

மக்கள் அப்படி  சிந்திக்கத் துவங்கிவிட்டால் ஆபத்து என்பதை உணர்ந்த பாஜக இஸ்லாமியர்களை ஒடுக்குவதன் மூலம் இந்துக்களை திருப்திப் படுத்தும் ஒரு வேலையைச் செய்து வருகிறது.

உண்மையில் பாஜக இந்துக்களின் ஆதரவை தொடர்ந்து பெற வேண்டுமானால் அது உண்மையிலேயே இந்துக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் தூக்கி எறிவார்கள்.

மற்றபடி தமிழ்த் தேசியத்தைப் பொறுத்த வரை அது தமிழகத்தில் வசிக்கும் அத்தனை சாதி, இன, மத பிரிவுகளை அங்கீகரித்து அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. தமிழ்த் தேசியம் எந்த மதத்தையும் தூக்கியும் பிடிக்காது, இறக்கியும் பிடிக்காது. மதத்தின் பெயரால் யார் என்ன தவறு செய்தாலும் கண்டிக்கும். தக்க நடவடிக்கை எடுக்கும்.

தமிழகத்தில் வாழும் முஸ்லீம்கள் ஒரு காலத்தில் தமிழ்ச் சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தவர்களே. எனவே அது இஸ்லாம் மதத்தை விரும்பி ஏற்ற அந்த தமிழர்களின் உணர்வை மதிக்கிறது. அதற்காக அவர்களைத் தூக்கிப் பிடிக்காது. தீவிரவாதத்தில் முஸ்லீம்கள் ஈடுபட்டு நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் அது அரசுத் துறைகள் மூலமாக தக்க நடவடிக்கை எடுக்கும். ஒரு முஸ்லீம் அவர் முஸ்லீமாக இருக்கிற காரணத்திற்காகவே அவர் மீது எந்தவித வெறுப்பை வளர்க்கவோ, ஒடுக்கவோ, துன்புறுத்தவோ செய்யாது.

காங்கிரஸ்காரர்கள், திராவிடர்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக முஸ்லீம்களை தூக்கிப் பிடித்தார்கள். தமிழ்த் தேசியவாதிகள், முஸ்லீம்கள் தமிழர்களின் வழித்தோன்றல்களாக இருப்பதால் அவர்களுக்கான பாதுகாப்பையும், மத, அரசியல் உரிமைகளையும் பாதுகாக்கவே விளைவார்கள்.

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...