1.
நீங்கள்
முஸ்லீம்களின் மீது
வெறுப்பை
உமிழ்வது
புரிகிறது.
அதற்கு
காரணம்
முஸ்லீம்
தீவிரவாதிகள்.
தீவிரவாதிகள்
செய்யும்
செயல்களுக்கு
எல்லா
முஸ்லீம்களும் பொறுப்பேற்க
வேண்டும்
என்கிறீர்களா?
2. கடந்த
காலங்களில்
ஆட்சியாளர்களாக இருந்த
முஸ்லீம்கள்
பல
வரலாற்றுப்
பிழைகளைச்
செய்திருக்கிறார்கள்.
அதற்கெல்லாம்
தற்போதுள்ள
முஸ்லீம்கள்
பொறுப்பேற்க
வேண்டும்
என்கிறீர்களா?
3.
மேற்படி
இரண்டுக்கும்
பொறுப்பேற்றுக் கொண்டால்
முஸ்லீம்களை
என்ன
செய்வீர்கள்?
மேற்படி
முஸ்லீம்கள்
அனைவரையும்
இந்து
மதத்திற்கு
மறுமதமாற்றம்
செய்வீர்களா?
அந்த
மறுமதமாற்றத்திற்கு அவர்கள்
சம்மதிக்காவிட்டால் என்ன
செய்வீர்கள்?
மறுமதமாற்றத்திற்குப் பின்னரும் அவர்கள்
தொடர்ந்து
முஸ்லீம்களாகவே இருந்தால்
என்ன
செய்வீர்கள்?
4.
அல்லது
ஒட்டுமொத்தமாக கொன்று
குவிப்பீர்களா?
அல்லது
நாடு
கடுத்துவீர்களா?
அல்லது
அவர்களுக்கென்று ஒரு
நாட்டை
உருவாக்கிக்
கொடுப்பீர்களா?
5.
இப்படி
முஸ்லீம்களை
ஒருவழி
செய்த
பின்னர்
இந்தியாவில்
வாழும்
மற்ற
சிறுபான்மை
மதத்தவரான
கிறிஸ்தவர்,
சமணர்,
சீக்கியர்,
பௌத்தர்களை
என்ன
செய்வீர்கள்?
அவர்களுக்கும் மேற்படி
வழிமுறைகளைப்
பின்பற்றுவீர்களா?
6.
தற்போது
இந்துக்களாக
இருக்கிற
பல்வேறு
சாதிகளை
சேர்ந்த
மக்களை
என்ன
செய்வீர்கள்?
(ஏனெனில்
நீங்களும்
கடவுள்
மறுப்பாளர்களான திராவிடர்கள்
போலவே
சாதிகள்
இல்லையென்று
பிதற்றத்
துவங்கியுள்ளீர்கள்.)
அவர்கள்
அனைவரையும்
கட்டாயமாக
தங்கள்
சாதி
அடையாளங்களை
விட்டு
விட்டு
இந்து
என்று
மட்டுமே
அடையாளப்படுத்திக் கொள்ள
வேண்டும்
என்பீர்களா?
7.
இந்துக்கள்
சைவம்,
வைணவம்,
சாக்கியம்,
கௌமாரம்,
காணபத்தியம்,
சௌரம்
என்ற
பிரிவுகளை
தற்போதும்
பின்பற்றி
வருவதோடு,
எண்ணற்ற
சிறு
கடவுள்
வழிபாடுகளை
செய்து
வருகிறார்கள்.
அவர்களை
என்ன
செய்வீர்கள்?
8.
எந்த
மதமும்
வழங்காத
ஆகப்
பெரும்
சுதந்திரமான
“ஆலயத்திற்கு
வரவும்
தேவையில்லை,
கடவுளை
வழிபடவும்
தேவையில்லை”
என்ற
சுதந்திரம்
இந்து
மதத்தைப்
பின்பற்றுவோருக்கு உண்டு.
அந்த
சுதந்திரத்தை
வழங்குவீர்களா?
மாட்டீர்களா?
9.
இந்து
மதத்தைப்
பிற்றுவோர்
அனைவரும்
“நாட்டு
தற்தொண்டு”
(ராஷ்டிர
ஸ்வயம்
சேவக்)
இயக்கத்தில்
சேரவேண்டும்
என்று
கட்டாயப்படுத்துவீர்களா? அந்த இயக்கத்தில் சேர
விரும்பாத
இந்துக்களை
என்ன
செய்வீர்கள்?
பாரதிய
ஜனதா
கட்சி
போன்ற
வேறொரு
இந்து
மக்களுக்கான
கட்சிகள்
செயல்பட
அனுமதிப்பீர்களா?
அதற்கும்
ஒத்துழைப்பீர்களா?
பாரதிய
ஜனதா
கட்சிக்கும்
அது
போன்ற
ஒரு
கட்சிக்கும்
கருத்து
வேறுபாடு
ஏற்பட்டால்
என்ன
செய்வீர்கள்?
எந்தக்
கட்சிக்கு
ஒத்துழைப்பீர்கள்?
10.
இந்து
மதமும்
இந்திய
இறையாண்மை
அதிகாரமும்
இணைந்தே
இருக்க
வேண்டும்
என்பீர்களா?
இல்லை
மதம்
வேறாகவும்
இறையாண்மை
அதிகாரமும்
வேறு
வேறாக
இருக்க
வேண்டும்
என்கிறீர்களா?
(பின்
குறிப்பு,
இப்படியெல்லாம் கேள்வியெழுப்பும் என்னை
ஒரு
இந்து
என்று
நீங்கள்
ஏற்றுக்
கொள்ள
மாட்டீர்கள்.
ஏனெனில்
இந்து
மக்களுக்கான
ஏகபோக
குத்தகை
உரிமை
உங்களுக்கு
மட்டுமே
உள்ளது
என்று
நீங்கள்
நினைத்துக்
கொண்டிருக்கிறீர்கள்.
இதற்கெல்லாம்
பதில்
சொன்னால்
மேலும்
கேள்விகள்
தொடரும்.)
No comments:
Post a Comment