Monday, June 5, 2017

பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொண்டவர்கள்

இரண்டு நாட்களுக்கு முன்பு விஜய் டிவியில் நீயா-நானா பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொண்டவர்கள் எதிர் நீயா-நானா பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்ககாதே என்பவர்களை வைத்து விவாதம் நடத்தி இருக்கிறார்கள். நான் காணொளியில் உள்ள வாதத்தை மட்டுமே பார்த்தேன்.
நல்லவேளையாக என்னை இந்த நிகழ்ச்சிக்கு கூப்பிடவில்லை.
கரு. பழனியப்பன் ரொம்ப புத்திசாலி போல தன்னைக் காட்டிக் கொண்டார். சாதி ஒழிப்புக்காக எத்தனை பேர் தங்கள் சாதிச் சான்றிதழை கிழித்து எறியத் தயார் என்று கேள்வி எழுப்பினால் இந்த சாதி ஒழிப்பின் உண்மைத் தன்மை வெளிப்படும். அதைச் செய்யப்போனால் அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிய வேண்டியிருக்கும். அதைச் செய்ய முடியாது. ஏன்னா தலித்தாக இருந்த அம்பேத்கரால் அந்தச் சட்டம் எழுதப்பட்டது.
அப்புறம் இந்தஅம்பேத்கர்என்ற பெயரின் பேரில் ஏன் இத்தனை பிடிமானம் என்று கேட்டால் பதில் வராது. பீம் ராவ் என்றாலே அது யார் என்று அவரை கொண்டாடுவோரில் பலருக்கும் தெரியாது.
சாதி என்றால் என்ன? சாதிப் பெயருக்கும் பட்டப் பெயருக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பது தெரியாதவர்கள் அது பற்றி விவாதித்தால் குருடர்கள் யானையை தொட்டுப்பார்த்த கதையாகத்தான் இருக்கும்.
சாதியில் பிரமலைக் கள்ளனான நான்தேவர்பட்டத்தை பயன்படுத்துகிறேன். அதேபோல சாதியில் மறவரும், அகமுடையாரும்தேவர்பட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
காடுவெட்டியார்பட்டம் கள்ளருக்கு உள்ளது, வன்னியருக்கும் உள்ளது. இந்த நாட்டின் பிரதமர்மோதிஎன்ற பட்டத்தையும் குடியரசுத் தலைவர்முகர்ஜிஎன்ற பட்டத்தையும் பயன்படுத்தும்போது, என்னை மட்டும் என் பட்டத்தை கைவிடச் சொல்லும் போது அந்த அயோக்கியத்தனத்தை என்னால் புரிந்துகொள்ள
முடியாமல் இல்லை.
நானும் நீயும் சமம், ஆனால் உன் பெயரைப் போட்டால் நான் தாழ்வாக உணர்கிறேன் என்று சொன்னால், நீ தாழ்வு மனப்பான்மை என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாய் என்று பொருள், அதற்காக நான் என் பெயரை மாற்றிக் கொள்ள முடியாது, நீதான் ஒரு நல்ல மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டும். நீ எந்தப் பெயரை வேண்டுமானாலும் போட்டுக்கொள், அது என்னை பாதிக்காது என்று சொன்னால்தான் நீ மனநோய் இல்லாதவன்.
கரு. பழனியப்பன்என்ற பெயர் இந்து என்பதை காட்டுகிறது. அவர் ஒரு பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்தவர் என்பதை காட்டுவதோடு அது என்னை சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவன் என்று சுட்டிக்காட்டுவதாக உள்ளது, எனவே அதை மாற்ற வேண்டும் என்று ஒரு முஸ்லீமோ, ஒரு கிறிஸ்தவரோ கேள்வி எழுப்பினால் அவர் மாற்றுவாரா?
ஏதோ ஒரு காலத்தில், ஏதோ ஒரு விபத்தில் அல்லது திட்டமிட்ட சதியில் நீ கால்களை இழந்து விட்டாய். அதற்காக நீ சக்கர நாற்காலியை பயன்படுத்துகிறாய் அல்லது கைக் கட்டைகளை பயன்படுத்துகிறாய். ஆனால் எனக்கு அந்த விபத்து நடக்க வில்லை. அதுபோன்ற திட்டமிட்ட சதி என்னை பாதிக்க வில்லை. அதற்காக
நான் கால்களுடன் இருப்பது உன்னை பாதிக்கிறது என்றால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. கால்களோடு இருப்பது என் குற்றம் கிடையாது.
சமூக நீதிஎன்பது பொருளாதர நிலை தவிர, மனதளவில் எல்லாரும் சமம் என்ற மனநிலையை எட்டுவதாகும்.
தன்னை உயர்ந்தவன் என்று நினைத்துக் கொண்டிருந்தவன், தாழ்ந்தவன் என்று சொல்லப்பட்டு வந்தவனை தனக்குச் சமமாக நினைக்கத் துவங்கினாலும் கூட, தாழ்ந்தவன் என்று சொல்லப்பட்டவன் தொடர்ந்து தன்னை தாழ்ந்தவன் என்று ஏதாவது ஒரு விதத்தில் நினைத்துக் கொண்டிருந்தால் அதற்கு தாழ்ந்தவனை தனக்கு சமமாக கருதியவன் பொறுப்பேற்க முடியாது. இது அவன் தவறும் கிடையாது.
அதேபோல தன்னை தாழ்ந்தவன் என்று நினைத்துக் கொண்டிருந்தவன், உயர்ந்தவன் என்று சொல்லப்பட்டு வந்தவனை தனக்குச் சமமாக நினைக்கத் துவங்கினாலும் கூட, உயர்ந்தவன் என்று சொல்லப்பட்டவன் தொடர்ந்து தன்னை உயர்ந்தவன் என்று ஏதாவது ஒரு விதத்தில் நினைத்துக் கொண்டிருந்தால் அதற்கு உயர்ந்தவனை
தனக்கு சமமாக கருதியவன் பொறுப்பேற்க முடியாது. இது அவன் தவறும் கிடையாது.
கரு. பழனியப்பன் ஒரு தெலுங்கர் என்று சந்தேகிக்கிறேன்.
மேற்கு தமிழகத்தில் நாயக்கர் தோட்டம் இருக்கிறது, கவுண்டர் தோட்டம் இருக்கிறது என்று சொல்லும் அவர் சக்கிலியர் தோட்டம் இல்லையே என்று கேள்வி எழுப்புகிறார்.
அவை நாகரீகம் கருதி பேசும் தமிழர்கள் சக்கலியரைஅருந்ததியர்என்றே குறிப்பிடுவர். ஆனால் இங்கே கரு. பழனியப்பன் நேரடியாக அவர்களை இழிவாக குறிப்பிடக் கூடிய சக்கிலியர் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.
தமிழர் மீது சாதி ஒழிப்பு என்ற இன ஒழிப்புக் கருத்தை திணித்து வருவது தெலுங்கர் முதலான அந்நியர்களே. ஆனால் தற்போது தமிழர்கள் விழித்துக் கொண்டார்கள். அவர்கள் மீது போலியான கருத்துக்களை திணிக்க முடியாது.
மேற்படி திருவாளர் கரு. பழனியப்பன்சோ கால்டுஆதிக்க சாதியைச் சேர்ந்த தமிழராக இருந்தால் அவர் மீது தலித் போராளிகள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழாக வழக்குத் தொடுக்க வேண்டும்.
தெலுங்கராக இருந்தால் வழக்கம்போல நம்ம புரட்சியாளர்கள் அவரைக் கண்டுகொள்ள மாட்டார்கள். எது உண்மை என்பது தெரியாமலா போகும்? காத்திருப்போம்.


No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...