Wednesday, September 25, 2019

Monday, September 23, 2019

சீர் மரபு பழங்குடியினர் சான்றிதழ்


மத்திய அரசின் சலுகைகளை மட்டும் பெற தமிழக அரசு குற்றப்பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்டு சீர் மரபினர் சாதிச் (DNC) சான்றிதழ் வழங்கி வந்த சாதிகளுக்கு சீர் மரபு பழங்குடியினர் (DNT) சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் இன்னமும் ஆன்லைனில் இந்தச் சாதிச் சான்றிதழ் வழங்க வகை செய்யப்படவில்லை. எனவே வட்டாட்சியர்கள் இந்தச் சான்றிதழ் வழங்க மறுத்து அல்லது தாமதித்து வருகின்றனர். சில மாவட்டங்களில் சான்றிதழை கையால் எழுதிக் கொடுக்கிறார்கள். சான்றிதழ் பெற விரும்புபவர்கள் இணைக்கப்பட்டுள்ள கோப்புகளை தரவிறக்கம் செய்து சான்றிதழ் பெறலாம். வட்டாட்சியர் தாமதப் படுத்தினால் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தால் ஓரிரு நாட்களில் கொடுத்து விடுவார்கள். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களும் இந்தச் சான்றிதழைப் பெற்று வைத்துக் கொள்வது மத்திய அரசு சலுகைகளைப் பெற உதவும். இந்த உத்தரவைத் தொடர்ந்து எஸ்சி/ எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குத் தொடர முடியாது.

***இடையர் சமூகத்தை காத்த பின்னத்தேவர்***


கிபி1645ல் திருநெல்வேலியில் உள்ள புதுப்பட்டியில் உள்ள பாளையக்காரர் ஒருவரால் 1000 இடையர் சமூக குடும்பங்களை பல இன்னல்களுக்கு உட்படுத்தி ஒடுக்கி வைத்திருந்துள்ளார்
இதனை அறிந்த திருமலை நாயக்கர் பிறமலைக்கள்ளர் சமூகத்தை சேர்ந்த பின்னத்தேவரை அழைத்து அந்த பாளையக்காரரை அடக்கி அந்த 1000 இடையர் குடும்பங்களை மீட்டு வரும் படி ஆனையிடுகிறார்.
இதனை ஏற்றுக்கொண்ட பின்னத்தேவர் மதுரையில் இருந்து தனது படைகளுடன் திரு நெல்வேலியை நோக்கி படையெடுக்கிறார்.
பின்னத்தேவர் திருநெல்வேலி புதுப்பட்டியை அடைந்தவுடன் அங்கு இருந்த பாளையக்காரருடன் போரிடுகிறார், போரில் அந்த பாளையக்காரை வெற்றியும் அடைகிறார்.
பின்பு அந்த பாளைக்காரரின் ஒடுக்குதலில் இருந்த 1000 இடையர் குடும்பங்களை மீட்டு அவர்களை பாதுகாப்பாக மதுரைக்கு அழைத்து வருகிறார் பின்னத்தேவர்.
பின்னத்தேவரின் இத்தகைய வீரத்தை பார்த்த திருமலை நாயக்கர் இடையர் சமூகத்தை மீட்டதால் மதுரையை சுற்றியுள்ள இடையர் சமூகத்தவர்களின் பாடிக்காவல் உரிமையை பின்னத்தேவருக்கும் அவர்தம் வாரிசுகளுக்கும் அளிக்கிறார்.
இதன் மூலமாக பின்னத்தேவர் மதுரை இடையர் சமூகத்தவரின் அன்புக்குரிய ஆஸ்தான காவல்காரராக ஆகிறார்.
பின்னத்தேவர் குடும்பத்தினரின் இந்த காவல் உரிமை பிற்காலத்தில் பிரிட்டீஸாரால் பறிக்கப்பட்டு பிரிட்டீஸார் அவர்களுடைய நேரடி நிர்வாகத்திற்கு அந்த இடையர் கிரமாங்களை கொண்டுவந்தனர்.
குறிப்பு: குற்றப்பரம்பரை சட்டம் பிறமலைக்
கள்ளர்கள் மீது புகுத்த முக்கிய காரணம்
அவர்களது மதுரை சுற்றிய காவல்
உரிமையை பறிப்பதற்கே.........!
நன்றி
A SOUTH INDIAN SUB CASTE BY
DR.LOUIS DUMONT (French Anthropologist)
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு

கள்ளர்கள் போர் செய்ததற்கு ஆதாரம் உள்ளதா?




கள்ளர்கள் போர் செய்ததற்கு ஆதாரம் உள்ளதா? என ஒருவர் கேட்பது எந்த
அளவிலான மூடத்தனம், என்பதை நான் சொல்லி யாருக்கும் தெரியவேண்டிய அவசியம்
இல்லை! கீழே...தேதி வாரியாக கள்ளர்கள் போரிட்டதற்கு ஆதாரம் தந்துள்ளேன்.
மறுக்க முடிந்தால் மறுத்து பாருங்கள்!

1.அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூர் மதுரையை கொள்ளையடித்து
திரும்பும்போது கள்ளர்கள் நாகமலை கணவாயில் வழிமறித்து தாக்கியுள்ளனர்.

2. 1330-ம் ஆண்டு சுல்தானியர்கள் மதுரையை தாக்கியபோது மதுரையையும், மதுரை
மீனாட்சி அம்மன் கோவிலையும் அழிவிலிருந்து காத்தவர்கள் கள்ளர்கள்.

3. 1378-ம் ஆண்டு குமாரகம்பண்ணா, தன்னரசு கள்ளர் படையுடன் இணைந்து
சுல்தானியர்களை விரட்டி அடித்துள்ளார்.

4. 17-ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்க நாயக்கர் மதுரையை ஆண்டபொழுது பிரமலைக்
கள்ளர்கள் மதுரையை கைப்பற்றிக் கொண்டனர் என்ற விவரத்தை போர்த்துக்கீசிய
மொழியில் யேசு சபை துறவி பல்தார்-டி-கோஸ்டா எழுதியுள்ளார்.

5. 17-ம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் தன்னரசு கள்ளர்களை அடக்க முயன்று
தோற்று இறுதியில் சமரசம் செய்து கொண்டதே வரலாறு.

6. 1739-ம் ஆண்டு பிரஞ்சு கவர்னர் டியூப்ளே தன்னரசு கள்ளர்களுக்கு கடிதம்
எழுதி ஆங்கிலேயர்களுக்கு எதிரான அணியில் கூட்டணி சேரக் கேட்டுக் கொண்டார்
என்று ஆனந்தரங்க பிள்ளை நாட்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

7. 23.03.1754-ல் அப்போதைய தாலுகா தலைநகரான உசிலம்பட்டி அருகில் உள்ள
ஆனையூரில் தன்னரசு கள்ளர்கள்தான் இந்தியாவிலேயே முதன்முறையாக
வெள்ளையர்களுக்கு எதிராக வரிகொடா இயக்கத்தை துவக்கினர்.

8. 1755-ம் ஆண்டு வெள்ளையனுக்கு எதிராக பூலித்தேவன் நடத்திய போருக்கு
தன்னரசு கள்ளர்கள் படை ஆதரவு கரம் நீட்டினர்.

9. 20.05.1756-ல் கான் சாகிப் கள்ளர்களை கருவறுக்க திட்டமிட்டு தோற்றுப்போனார்.

9. 12.11.1760-ல் பீட்டர்மாட்ரின் பாதிரியார் விகேயின் பாதிரியாருக்கு
எழுதிய கடிதத்தில் கள்ளர்கள் மதுரையை தங்கள் ஆட்சியின் கீழ் வைத்து
இருந்தனர் என்று எழுதியுள்ளார்.

10.1784-ல் கள்ளர்கள் மராட்டிய தளபதி முராரிராவை கொலை செய்து விட்டு
மதுரை மாநகரை பரிபாலனம் செய்தனர்.


இந்திர_குலம்


கரியவன்@இந்திரனை தேடிய எனது பயணத்தில் முதல் வெற்றியாக சுமார் 72வருட பழமையான பத்திரத்தில், கள்ளர் சமூகத்தவர்கள் தங்களை இந்திர குலம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
கள்ளர்களில் அதுவும் குறிப்பாக பிரமலைக்கள்ளர்களில் போன தலைமுறை வரைக்கும் தனது வீட்டில் உள்ள ஒரு ஆண் குழந்தைக்கு தெய்வேந்திரன் என்கிற பெயர் சூட்டுவார்கள்.
தேவேந்திரன் என்கிற இந்திரனுடைய பெயரைத் தான் தெய்வேந்திரன் என்று வைத்துள்ளார்கள்.
கல்வெட்டுகளில் கூட தேவர் என்கிற பெயர் தெவர் என்றே இருக்கும்.
இந்திரனை பற்றி கடந்து முறை நான் பதிவு செய்ததை பார்த்து மதிப்பிற்குரிய அண்ணன் Thirumaranji அவர்கள் என்னை தொடர்பு கொண்டு தன்னிடம் ஒரு நிலப்பத்திரம் உள்ளது என்று எனக்கு அனுப்பினார்.
அதனுடைய காலம் கிபி1947ஆம் ஆண்டு, அது ஒரு நிலப்பத்திரம் திருமாறன் அண்ணன் தாயாரின் 3தலைமுறைக்கு முன்னாள் உள்ள பூர்வீக சொத்து.
அந்த பத்திரத்தில் மாயாண்டித்தேவர் இந்திரகுலம் என்று தெளிவாக உள்ளது.
இன்னும் இதற்கு முந்தைய பத்திரத்தில் இந்திர குலம் பிறமலைக் கள்ளர் சாதி என்று தெளிவாக உள்ளதாகவும், அதனை நகல் எடுத்து தருகிறேன் என்று கூறியுள்ளார்.
தொடர்ச்சியாக ஆய்வு செய்தால் சில மடையர்களின் மண்ணாங்கட்டி புனைவுகளை உடைத் தெரியலாம்.
நன்றி
மதிப்பிற்குரிய அண்ணன்
Thiru Maran
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு



Wednesday, September 11, 2019

இந்தியாவின் பூர்வகுடியான தமிழர்கள்

Richard Martin மற்றும் Tony Joseph இந்தப் பெயர் உலகில் உள்ள வரலாற்று ஆய்வாளர்களும் அறிஞர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் பெயர்கள்.
.
Professor Richard Martin மற்றும் Tony Joseph உலகப்புகழ்பெற்ற Oxford பல்கலைக்கழகத்தின் வரலாறு தொல்லியல் மற்றும் மரபணுவியல் (genetical) துறையின் பேராசிரியர்கள் . .
.
இவரின் ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் பல நாட்டவர்களின் அடிப்படை சித்தாந்தங்களை தகர்த்து எறிந்திருக்கிறது . . . .
.
.
உலகில் மனிதன் தோன்றியது எங்கே ?? ஆசியாவின் பூர்வ குடிகள் யார் ? இந்தியாவின் மற்றும் அமெரிக்காவின் ஆதி மக்கள் யார் ??
என்று இந்திய துணைக்கண்டம் மற்றும் ஈரான் ஈராக் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பர்மா மலேசியா நேபாளம் பங்களாதேசம் ஆகிய நாடுகளில் மக்களிடம் லட்சக்கணக்கான மரபணுக்களை ஆராய்ச்சி செய்தனர் . .
இந்தியாவில் மட்டும் 16500 க்கும் மேற்பட்ட மரபணுக்கள் ஆராய்ச்சி செய்தனர்
.
அந்த ஆராய்ச்சி முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிட்டனர்
.
அந்த ஆய்வறிக்கை தான் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பிராமணின் வயிற்றிலும் புளியை கரைத்திருக்கிறது
.
அப்படி என்ன விஷயம் ??
.
இந்தியாவுக்குள் நாடோடிகளான ஆரியர்கள் மாடுகளோடு ஈராக் ஈரான் வழியாக ஆப்கானிஸ்தானில் நுழைந்து இந்தியாவில் பரவினர் என்றும்
.
ஆரிய வருகையின் போது இந்தியாவில் சிந்துசமவெளி நாகரிகம் அழியும் தருவாயில் இருந்தது அந்த நேரத்தில் தான் ஆரியர்கள் உள்ளே வந்தார்கள் அது சரியாக ரிக் வேதம் எழுதப்பட்ட காலகட்டம்...
.
அப்போது ஒரு இனம் இங்கே வீடுகள் கட்டி நகர நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தனர்
.
அவர்கள் பூர்வகுடியான தமிழர்கள் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தும் இருக்கிறார்கள்.
.
இப்போது நமக்கு சொல்லப்பட்ட பல வரலாறுகள் பொய்யென்றாகிறது
.
அதாவது சிந்துசமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று நமக்கு சொல்லப்பட்டது பொய்.
இந்திய நிலப்பரப்பு பிரிந்தது என்றும் . .
.
இந்த மண்ணில் தமிழர்கள் தான் முதலில் இருந்தனர் என்றும்
.
அவர்கள் முப்பது அல்லது நாப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்றும் இந்த ஆராய்ச்சி திட்டவட்டமாக உரக்கச் சொல்லுகிறது
.
How genetics is settling the Aryan migration

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...