மத்திய அரசின் சலுகைகளை மட்டும் பெற தமிழக அரசு குற்றப்பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்டு சீர் மரபினர் சாதிச் (DNC) சான்றிதழ் வழங்கி வந்த சாதிகளுக்கு சீர் மரபு பழங்குடியினர் (DNT) சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் இன்னமும் ஆன்லைனில் இந்தச் சாதிச் சான்றிதழ் வழங்க வகை செய்யப்படவில்லை. எனவே வட்டாட்சியர்கள் இந்தச் சான்றிதழ் வழங்க மறுத்து அல்லது தாமதித்து வருகின்றனர். சில மாவட்டங்களில் சான்றிதழை கையால் எழுதிக் கொடுக்கிறார்கள். சான்றிதழ் பெற விரும்புபவர்கள் இணைக்கப்பட்டுள்ள கோப்புகளை தரவிறக்கம் செய்து சான்றிதழ் பெறலாம். வட்டாட்சியர் தாமதப் படுத்தினால் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தால் ஓரிரு நாட்களில் கொடுத்து விடுவார்கள். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களும் இந்தச் சான்றிதழைப் பெற்று வைத்துக் கொள்வது மத்திய அரசு சலுகைகளைப் பெற உதவும். இந்த உத்தரவைத் தொடர்ந்து எஸ்சி/ எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குத் தொடர முடியாது.
Monday, September 23, 2019
***இடையர் சமூகத்தை காத்த பின்னத்தேவர்***
கிபி1645ல் திருநெல்வேலியில் உள்ள புதுப்பட்டியில் உள்ள பாளையக்காரர் ஒருவரால் 1000 இடையர் சமூக குடும்பங்களை பல இன்னல்களுக்கு உட்படுத்தி ஒடுக்கி வைத்திருந்துள்ளார்
இதனை அறிந்த திருமலை நாயக்கர் பிறமலைக்கள்ளர் சமூகத்தை சேர்ந்த பின்னத்தேவரை அழைத்து அந்த பாளையக்காரரை அடக்கி அந்த 1000 இடையர் குடும்பங்களை மீட்டு வரும் படி ஆனையிடுகிறார்.
இதனை ஏற்றுக்கொண்ட பின்னத்தேவர் மதுரையில் இருந்து தனது படைகளுடன் திரு நெல்வேலியை நோக்கி படையெடுக்கிறார்.
பின்னத்தேவர் திருநெல்வேலி புதுப்பட்டியை அடைந்தவுடன் அங்கு இருந்த பாளையக்காரருடன் போரிடுகிறார், போரில் அந்த பாளையக்காரை வெற்றியும் அடைகிறார்.
பின்பு அந்த பாளைக்காரரின் ஒடுக்குதலில் இருந்த 1000 இடையர் குடும்பங்களை மீட்டு அவர்களை பாதுகாப்பாக மதுரைக்கு அழைத்து வருகிறார் பின்னத்தேவர்.
பின்னத்தேவரின் இத்தகைய வீரத்தை பார்த்த திருமலை நாயக்கர் இடையர் சமூகத்தை மீட்டதால் மதுரையை சுற்றியுள்ள இடையர் சமூகத்தவர்களின் பாடிக்காவல் உரிமையை பின்னத்தேவருக்கும் அவர்தம் வாரிசுகளுக்கும் அளிக்கிறார்.
இதன் மூலமாக பின்னத்தேவர் மதுரை இடையர் சமூகத்தவரின் அன்புக்குரிய ஆஸ்தான காவல்காரராக ஆகிறார்.
பின்னத்தேவர் குடும்பத்தினரின் இந்த காவல் உரிமை பிற்காலத்தில் பிரிட்டீஸாரால் பறிக்கப்பட்டு பிரிட்டீஸார் அவர்களுடைய நேரடி நிர்வாகத்திற்கு அந்த இடையர் கிரமாங்களை கொண்டுவந்தனர்.
குறிப்பு: குற்றப்பரம்பரை சட்டம் பிறமலைக்
கள்ளர்கள் மீது புகுத்த முக்கிய காரணம்
அவர்களது மதுரை சுற்றிய காவல்
உரிமையை பறிப்பதற்கே.........!
கள்ளர்கள் மீது புகுத்த முக்கிய காரணம்
அவர்களது மதுரை சுற்றிய காவல்
உரிமையை பறிப்பதற்கே.........!
நன்றி
A SOUTH INDIAN SUB CASTE BY
DR.LOUIS DUMONT (French Anthropologist)
A SOUTH INDIAN SUB CASTE BY
DR.LOUIS DUMONT (French Anthropologist)
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு
கள்ளர்கள் போர் செய்ததற்கு ஆதாரம் உள்ளதா?
கள்ளர்கள் போர் செய்ததற்கு ஆதாரம் உள்ளதா? என ஒருவர் கேட்பது எந்த
அளவிலான மூடத்தனம், என்பதை நான் சொல்லி யாருக்கும் தெரியவேண்டிய அவசியம்
இல்லை! கீழே...தேதி வாரியாக கள்ளர்கள் போரிட்டதற்கு ஆதாரம் தந்துள்ளேன்.
மறுக்க முடிந்தால் மறுத்து பாருங்கள்!
1.அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூர் மதுரையை கொள்ளையடித்து
திரும்பும்போது கள்ளர்கள் நாகமலை கணவாயில் வழிமறித்து தாக்கியுள்ளனர்.
2. 1330-ம் ஆண்டு சுல்தானியர்கள் மதுரையை தாக்கியபோது மதுரையையும், மதுரை
மீனாட்சி அம்மன் கோவிலையும் அழிவிலிருந்து காத்தவர்கள் கள்ளர்கள்.
3. 1378-ம் ஆண்டு குமாரகம்பண்ணா, தன்னரசு கள்ளர் படையுடன் இணைந்து
சுல்தானியர்களை விரட்டி அடித்துள்ளார்.
4. 17-ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்க நாயக்கர் மதுரையை ஆண்டபொழுது பிரமலைக்
கள்ளர்கள் மதுரையை கைப்பற்றிக் கொண்டனர் என்ற விவரத்தை போர்த்துக்கீசிய
மொழியில் யேசு சபை துறவி பல்தார்-டி-கோஸ்டா எழுதியுள்ளார்.
5. 17-ம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் தன்னரசு கள்ளர்களை அடக்க முயன்று
தோற்று இறுதியில் சமரசம் செய்து கொண்டதே வரலாறு.
6. 1739-ம் ஆண்டு பிரஞ்சு கவர்னர் டியூப்ளே தன்னரசு கள்ளர்களுக்கு கடிதம்
எழுதி ஆங்கிலேயர்களுக்கு எதிரான அணியில் கூட்டணி சேரக் கேட்டுக் கொண்டார்
என்று ஆனந்தரங்க பிள்ளை நாட்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
7. 23.03.1754-ல் அப்போதைய தாலுகா தலைநகரான உசிலம்பட்டி அருகில் உள்ள
ஆனையூரில் தன்னரசு கள்ளர்கள்தான் இந்தியாவிலேயே முதன்முறையாக
வெள்ளையர்களுக்கு எதிராக வரிகொடா இயக்கத்தை துவக்கினர்.
8. 1755-ம் ஆண்டு வெள்ளையனுக்கு எதிராக பூலித்தேவன் நடத்திய போருக்கு
தன்னரசு கள்ளர்கள் படை ஆதரவு கரம் நீட்டினர்.
9. 20.05.1756-ல் கான் சாகிப் கள்ளர்களை கருவறுக்க திட்டமிட்டு தோற்றுப்போனார்.
9. 12.11.1760-ல் பீட்டர்மாட்ரின் பாதிரியார் விகேயின் பாதிரியாருக்கு
எழுதிய கடிதத்தில் கள்ளர்கள் மதுரையை தங்கள் ஆட்சியின் கீழ் வைத்து
இருந்தனர் என்று எழுதியுள்ளார்.
10.1784-ல் கள்ளர்கள் மராட்டிய தளபதி முராரிராவை கொலை செய்து விட்டு
மதுரை மாநகரை பரிபாலனம் செய்தனர்.
இந்திர_குலம்
கரியவன்@இந்திரனை தேடிய எனது பயணத்தில் முதல் வெற்றியாக சுமார் 72வருட பழமையான பத்திரத்தில், கள்ளர் சமூகத்தவர்கள் தங்களை இந்திர குலம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
கள்ளர்களில் அதுவும் குறிப்பாக பிரமலைக்கள்ளர்களில் போன தலைமுறை வரைக்கும் தனது வீட்டில் உள்ள ஒரு ஆண் குழந்தைக்கு தெய்வேந்திரன் என்கிற பெயர் சூட்டுவார்கள்.
தேவேந்திரன் என்கிற இந்திரனுடைய பெயரைத் தான் தெய்வேந்திரன் என்று வைத்துள்ளார்கள்.
கல்வெட்டுகளில் கூட தேவர் என்கிற பெயர் தெவர் என்றே இருக்கும்.
இந்திரனை பற்றி கடந்து முறை நான் பதிவு செய்ததை பார்த்து மதிப்பிற்குரிய அண்ணன் Thirumaranji அவர்கள் என்னை தொடர்பு கொண்டு தன்னிடம் ஒரு நிலப்பத்திரம் உள்ளது என்று எனக்கு அனுப்பினார்.
அதனுடைய காலம் கிபி1947ஆம் ஆண்டு, அது ஒரு நிலப்பத்திரம் திருமாறன் அண்ணன் தாயாரின் 3தலைமுறைக்கு முன்னாள் உள்ள பூர்வீக சொத்து.
அந்த பத்திரத்தில் மாயாண்டித்தேவர் இந்திரகுலம் என்று தெளிவாக உள்ளது.
இன்னும் இதற்கு முந்தைய பத்திரத்தில் இந்திர குலம் பிறமலைக் கள்ளர் சாதி என்று தெளிவாக உள்ளதாகவும், அதனை நகல் எடுத்து தருகிறேன் என்று கூறியுள்ளார்.
தொடர்ச்சியாக ஆய்வு செய்தால் சில மடையர்களின் மண்ணாங்கட்டி புனைவுகளை உடைத் தெரியலாம்.
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
Wednesday, September 11, 2019
இந்தியாவின் பூர்வகுடியான தமிழர்கள்
Richard Martin மற்றும் Tony Joseph இந்தப் பெயர் உலகில் உள்ள வரலாற்று ஆய்வாளர்களும் அறிஞர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் பெயர்கள்.
.
Professor Richard Martin மற்றும் Tony Joseph உலகப்புகழ்பெற்ற Oxford பல்கலைக்கழகத்தின் வரலாறு தொல்லியல் மற்றும் மரபணுவியல் (genetical) துறையின் பேராசிரியர்கள் . .
.
இவரின் ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் பல நாட்டவர்களின் அடிப்படை சித்தாந்தங்களை தகர்த்து எறிந்திருக்கிறது . . . .
.
.
உலகில் மனிதன் தோன்றியது எங்கே ?? ஆசியாவின் பூர்வ குடிகள் யார் ? இந்தியாவின் மற்றும் அமெரிக்காவின் ஆதி மக்கள் யார் ??
Professor Richard Martin மற்றும் Tony Joseph உலகப்புகழ்பெற்ற Oxford பல்கலைக்கழகத்தின் வரலாறு தொல்லியல் மற்றும் மரபணுவியல் (genetical) துறையின் பேராசிரியர்கள் . .
.
இவரின் ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் பல நாட்டவர்களின் அடிப்படை சித்தாந்தங்களை தகர்த்து எறிந்திருக்கிறது . . . .
.
.
உலகில் மனிதன் தோன்றியது எங்கே ?? ஆசியாவின் பூர்வ குடிகள் யார் ? இந்தியாவின் மற்றும் அமெரிக்காவின் ஆதி மக்கள் யார் ??
என்று இந்திய துணைக்கண்டம் மற்றும் ஈரான் ஈராக் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பர்மா மலேசியா நேபாளம் பங்களாதேசம் ஆகிய நாடுகளில் மக்களிடம் லட்சக்கணக்கான மரபணுக்களை ஆராய்ச்சி செய்தனர் . .
இந்தியாவில் மட்டும் 16500 க்கும் மேற்பட்ட மரபணுக்கள் ஆராய்ச்சி செய்தனர்
.
அந்த ஆராய்ச்சி முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிட்டனர்
.
அந்த ஆய்வறிக்கை தான் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பிராமணின் வயிற்றிலும் புளியை கரைத்திருக்கிறது
.
அப்படி என்ன விஷயம் ??
.
இந்தியாவுக்குள் நாடோடிகளான ஆரியர்கள் மாடுகளோடு ஈராக் ஈரான் வழியாக ஆப்கானிஸ்தானில் நுழைந்து இந்தியாவில் பரவினர் என்றும்
.
ஆரிய வருகையின் போது இந்தியாவில் சிந்துசமவெளி நாகரிகம் அழியும் தருவாயில் இருந்தது அந்த நேரத்தில் தான் ஆரியர்கள் உள்ளே வந்தார்கள் அது சரியாக ரிக் வேதம் எழுதப்பட்ட காலகட்டம்...
.
அப்போது ஒரு இனம் இங்கே வீடுகள் கட்டி நகர நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தனர்
.
அவர்கள் பூர்வகுடியான தமிழர்கள் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தும் இருக்கிறார்கள்.
.
இப்போது நமக்கு சொல்லப்பட்ட பல வரலாறுகள் பொய்யென்றாகிறது
.
அதாவது சிந்துசமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று நமக்கு சொல்லப்பட்டது பொய்.
இந்திய நிலப்பரப்பு பிரிந்தது என்றும் . .
.
இந்த மண்ணில் தமிழர்கள் தான் முதலில் இருந்தனர் என்றும்
.
அவர்கள் முப்பது அல்லது நாப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்றும் இந்த ஆராய்ச்சி திட்டவட்டமாக உரக்கச் சொல்லுகிறது
.
.
அந்த ஆராய்ச்சி முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிட்டனர்
.
அந்த ஆய்வறிக்கை தான் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பிராமணின் வயிற்றிலும் புளியை கரைத்திருக்கிறது
.
அப்படி என்ன விஷயம் ??
.
இந்தியாவுக்குள் நாடோடிகளான ஆரியர்கள் மாடுகளோடு ஈராக் ஈரான் வழியாக ஆப்கானிஸ்தானில் நுழைந்து இந்தியாவில் பரவினர் என்றும்
.
ஆரிய வருகையின் போது இந்தியாவில் சிந்துசமவெளி நாகரிகம் அழியும் தருவாயில் இருந்தது அந்த நேரத்தில் தான் ஆரியர்கள் உள்ளே வந்தார்கள் அது சரியாக ரிக் வேதம் எழுதப்பட்ட காலகட்டம்...
.
அப்போது ஒரு இனம் இங்கே வீடுகள் கட்டி நகர நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தனர்
.
அவர்கள் பூர்வகுடியான தமிழர்கள் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தும் இருக்கிறார்கள்.
.
இப்போது நமக்கு சொல்லப்பட்ட பல வரலாறுகள் பொய்யென்றாகிறது
.
அதாவது சிந்துசமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று நமக்கு சொல்லப்பட்டது பொய்.
இந்திய நிலப்பரப்பு பிரிந்தது என்றும் . .
.
இந்த மண்ணில் தமிழர்கள் தான் முதலில் இருந்தனர் என்றும்
.
அவர்கள் முப்பது அல்லது நாப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்றும் இந்த ஆராய்ச்சி திட்டவட்டமாக உரக்கச் சொல்லுகிறது
.
How genetics is settling the Aryan migration
Sunday, August 4, 2019
நாம் தமிழரில் என்ன நடக்கிறது?
பதிவாளர்: Ganthi Ganesh
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு நாதக வில் வந்தோம் (கட்சி ஆரம்பித்த நாட்கள் முதல்).. அதற்கு முன் எங்களுக்கு அண்ணன் சீமான் அரசியல் வகுப்பு எடுத்தது கிடையாது. இந்த காலத்திற்கு தமிழ்தேசிய தத்துவத்தின் தேவை கருதி கோபத்தால் ஒன்றிணைந்தோம்.. நாதக என்ற ஒன்று ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே புதுக்கோட்டை சுப.முத்துக்குமார் அண்ணனும் (திருட்டுப்பய ஆட்டை துரை அந்த குடும்பத்தில் இருந்த ஒருவரையும் ஆட்டையை போட்டது பலர் அறியாதது) அவர் நட்பு வட்டமும் எனக்கு பழக்கம்.. நாதக வில் இணைவதற்கு அவர் முக்கியமானவர்.
நாங்கள் பொதுவுடைமை அரசியல் பேசுபவர்கள், சுப.முத்துகுமார் அண்ணன் அந்த காலத்தில் இருந்தே தீவிர தமிழ்தேசியம் பேசுபவர். நாங்கள் எவ்வாறு அரசியலை பார்ப்போம், நாதக வில் நடந்து கொண்டிருக்கும் அரசியலை எவ்வாறு பார்ப்போம் என்பதை நன்கு அரசியல் அறிந்தவர்களும், அண்ணன் சுப.முத்துகுமார் நட்பு வட்டமும் அறியும்.
கட்சியில் இருந்த போதும் பல விடயங்களில் அண்ணன் சீமானுடன் உடன்பாடு இல்லை.. சகிப்புதன்மையிலேயே பல வருடங்கள் கடந்தவர்கள் நானும் என் நண்பர்களும்..
-> "பேச்சு என்பது ராணுவத்தின் ஒரு படைபிரிவு" என மேதகு.வே.பிரபாகரன் சொன்னதாக எதையாவது சொல்வதை சுற்றி இருப்போர் கைதட்டினாலும், அது என்னவோ கூட்டத்தின் நடுவே எங்களை மட்டும் முகம் சுழிக்க வைத்தது..
-> அண்ணன் சீமான் ஒரு தீர்க்கதரிசி, அனைத்தும் அறிந்தவர், தமிழினத்தின் கடைசி நம்பிக்கை போன்ற சொல்லாடல்கள் அதிகமாகியது.. நாம் எதிர்பார்த்து வந்த அரசியல் இதுவல்ல ..
-> அண்ணன் சீமான் "தலைமை ஒருங்கிணைப்பாளர்".. அதன் அதிகார எல்லைகள் எவ்வாறானவை? என அவரிடம் கேட்டால் அவருக்கே தெரியாது என்பதுதான் உண்மை.. அதுமட்டுமல்ல, தலைவர், செயலளார், பொருளாளர் என எந்த பொறுப்பிற்கும் வேலைகள் என்ன என கேட்டால் அவருக்கு தெரியாது.. இதைத்தான் அங்கு நிர்வாகம் என்பது இல்லை என்கிறோம்..
-> "என் பேச்சுக்களை பவன் கல்யான் கேட்டுவிட்டுத்தான் தூங்குவர், ஜெர்மனி அமைச்சரவையில் பேசுவார்கள்" என தனக்கான அரசியலில் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் தற்புகழ்ச்சி கொள்வது.. அது பார்ப்பதற்கு அப்பட்டமான சினிமா வசனம் போன்றே இருக்கும்.. சுற்றி இருப்பவர்கள் எதையாவது சொல்லி புகழ் போதைக்காக ஊசி போட்டுவிட்டால் மேடையில் அதையும் சரியான தரவுகள் இல்லாமல் பேசுவது..
-> உலகத்திலேயே நீங்கள் மட்டும்தான் அசிங்கம் அசிங்கமாக பேசுவீங்க அண்ணே, அதனால் உங்களுக்கு மட்டுமே தலைவனாகும் தகுதி உள்ளது என சுற்றி இருக்கும் அல்லக்கை எவனோ ஊசி போட்டுவிட்டான் போல.. அதை தலைமை பண்பாக இன்னும் நினைத்து கொண்டிருக்கிறார்... 5 ஆம் வகுப்பு கூட வராத சிறுவன் அண்ணன் சீமானை விட அசிங்கம் அசிங்கமாக பேசுவான், கோபபடுவான்.. அவனை தலைவனாக ஏற்று கொள்ளலாமா? இது தகுதியும் கிடையாது, பெருமை கொள்ளவும் எதுவும் கிடையாது.. ஆனால் அதைதான் அண்ணன் மூலதனமாக கொண்டிருக்கிறார்.
-> அண்ணன் சீமானிடம் பாதிக்கபட்டவன் ஒரு குற்றசாட்டை சொன்னால், அதை விசாரிக்காமல் பாதிக்கபட்டவனையே நக்கல் செய்யும் பழக்கம் உள்ளது.. யார் அவரிடம் நிறைய நேரம் பேசுகிறார்களோ அவர்களே சரியானவர்கள் நல்லவர்கள் என எடுத்து கொள்வார் (இது மனித இயல்பு, தலைவனின் இயல்பு அல்ல).. திமுகவில் இதைவிட உள்கட்சி முரண்பாடுகள் உள்ளது, ஆனால் அண்ணாத்துரை இருபக்கமும் அனுசரித்து நடப்பார்.. அல்லகக்கை சொல்வதை எல்லாம் நம்பி பாதிக்கபட்டவனையே நக்கல் செய்ய மாட்டார்..
-> அண்ணன் சீமான் மீது ஜாதி அரசியல் குற்றசாட்டு வைப்பவன் நிச்சயம் ஒரு ஜாதி வெறியனாகத்தான் இருப்பான்.. அண்ணன் சீமானிடம் ஜாதிய பற்றோ வெறியோ இல்லை என 200% உறுதியாக சொல்ல முடியும்.. அவர் நல்ல சமூகத்தை படைக்க வேண்டும் என எண்ணத்துடன் இருக்கிறார்.. அவரின் பேச்சால் கொண்டு சென்றுகொண்டிருக்கிறார்.. எவரும் பசியுடன் இருக்க வேண்டுமே என நினைக்கக் மாட்டார்... இதை தாண்டிய எதுவும் அண்ணன் சீமானுக்கு ஒத்து வரவில்லை.. நிர்வாகத்தில் தோற்றுவிட்டார்..
-------------------------
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.
-------------------------
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.
"தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்" என அண்ணனிடம் நமது முப்பாட்டன் சொல்லி இருக்கிறார் என சொல்ல போனால், "அந்த முப்பாட்டன் என்ன எனக்கே அறிவுரை சொல்றானா? இங்க வந்து வேலை பார்க்க சொல்லு அவனை, ஆயிரெத்தெட்டு வேலை இருக்கு இங்க, அதையெல்லாம் பார்த்துகிட்டு இருக்க நேரமில்லை" என சொல்வார் என்ற நம்பிக்கையில் அவரிடம் சொல்ல முடியவில்லை..
----------------
ஒரு அரசியல் கட்சி என இருந்தால் பல குற்றசாட்டுகள் வரும்.. அதில் மாற்று கருத்தில்லை... அது பண மோசடி சம்பந்தப்ட்டதோ, பாலியல் சம்பந்தபட்டதாகவோ இருக்கலாம்.. தனிபட்டு என்னை போன்று சிந்திப்பவர்கள் ஊழல் குற்றசாட்டுகளை முதன்மையாக கொள்ளமாட்டார்கள்.. கருத்தியல் ரீதியாக வென்றுவிட்டோமா என்ற பார்வை மட்டுமே இருக்கும்.. ஆகையால் நாதக ஆட்சிக்கு வந்தால் இதுவரை உலகம் கண்டிராத ஊழல் இருக்கும்.. ஆனால் அப்படி இருந்தாலும் கருத்தியலை நிர்வகத்தின் மூலம் நிலை நிறுத்திவிடுவார்களா? என்றால் அதற்க்கு 0% கூட வாய்ப்பு இல்லை என தெரிந்தும் முட்டு கொடுக்க விரும்பினால் திமுகவையோ, அதிமுகவையோ, பாஜகவையோ விமர்சிக்கும் தகுதியை இழக்கிறோம்..
----------------
ஒரு அரசியல் கட்சி என இருந்தால் பல குற்றசாட்டுகள் வரும்.. அதில் மாற்று கருத்தில்லை... அது பண மோசடி சம்பந்தப்ட்டதோ, பாலியல் சம்பந்தபட்டதாகவோ இருக்கலாம்.. தனிபட்டு என்னை போன்று சிந்திப்பவர்கள் ஊழல் குற்றசாட்டுகளை முதன்மையாக கொள்ளமாட்டார்கள்.. கருத்தியல் ரீதியாக வென்றுவிட்டோமா என்ற பார்வை மட்டுமே இருக்கும்.. ஆகையால் நாதக ஆட்சிக்கு வந்தால் இதுவரை உலகம் கண்டிராத ஊழல் இருக்கும்.. ஆனால் அப்படி இருந்தாலும் கருத்தியலை நிர்வகத்தின் மூலம் நிலை நிறுத்திவிடுவார்களா? என்றால் அதற்க்கு 0% கூட வாய்ப்பு இல்லை என தெரிந்தும் முட்டு கொடுக்க விரும்பினால் திமுகவையோ, அதிமுகவையோ, பாஜகவையோ விமர்சிக்கும் தகுதியை இழக்கிறோம்..
ஆரம்ப காலங்களில் அரசியல் அனுபவத்துடன் நாதக வில் இருந்த ஒவ்வொரு மாவட்ட ஆளுமைகளும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சென்றிருக்கிறார்கள்.. கார்ப்பரேட் நிறுவனங்களில் கூட அட்ரசன் என்ற பெயரில் விசாரணை நடத்தி அதுக்கு தீர்வை கொடுப்பார்கள்.. ஆனால் இங்கு அதற்க்கு வாய்ப்பு இல்லை.. சுத்தி இருக்குற ஏதாவது அல்லக்கை "அண்ணே அவன் துரோகிண்ணே, உங்களை திட்டுறான் அண்ணே" என வழக்கமான டெம்ப்ளேட்டை போடுவான்.. அப்படியா தம்பி "போறவன் போகட்டும், நாம மட்டுமே இருந்து நிர்வாகம் செய்து கொள்வோம் தம்பி" என நிர்வாகம் கொஞ்சம் கூட எட்டி பார்க்காத பேச்சைத்தான் பேசுவார்..
பாகிஸ்தானை பழி தீர்க்க வேண்டும் என்றால் கிர்க்கெட் போட்டியில் வென்றாக வேண்டும் என்பது போல.. கட்சிக்கு முரணாக யாராவது இருந்தால் "குரூப்பாக அட்டாக்" செய்து நட்பு பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டும் (இவனுக வயசுக்கு வந்தவனுக என நினைத்து கொண்டு இருந்தேன்).. மற்றும் மற்றவர்களையும் நீக்க சொல்லி நிர்பந்திக்க வேண்டும்.. என்னையும் நிர்பந்தித்து இருக்கிறார்கள்.. ஆனால் அரசியல் கருத்து வேறுபாடால் நட்பை துண்டிக்க வேண்டிய அவசியம் என்ன என கேட்டிருக்கிறேன்.. எனக்கு திமுக, அதிமுக, திராவிட இயக்கங்கள், கம்யூனிச இயக்கங்கள், தமிழ் தேசிய இயக்கங்கள், நாதக மீது பற்று கொண்டோர் வெறுப்பு கொண்டோர் என எவரும் என் தனிப்பட்ட வாழ்வில் நண்பர்கள்தான்.. இவர்கள் நட்பு பட்டியலில் இருந்து நீங்கவில்லை என்றால் "யாரும் இவன் கூட பேச கூடாது, பழக் கூடாது, அன்னம் தண்ணி பொழங்க கூடாது" என குரூப்பா வந்து அட்டாக் பண்ணுவானுக.. நம்மிடம் இருக்கும் குறைகளை சொல்லி ஒருவன் பதுதி போட்டால் அதுக்கு "லைக்" போட கூடாதாம் (எவ்வளவு பெரிய பிரச்சினை!!!!!)
தோழர் ஆர்த்திக் தமிழன், எத்தனை பேர் IT வேலையை விட்டுவிட்டு எந்த சம்பளமும் வாங்காமல் அல்லது பண மோசடி செய்யாமல் இதுவரை கட்சியில் முழுநேர அரசியல் வேலை பார்த்து கொண்டு இருப்பது? கொஞ்சம் பட்டியல் கொடுக்கக் முடியுமா?? தஞ்சாவூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது கல்வெட்டில் எழுதி வைக்க வசதியாக இருக்கும்.. அல்லது நாங்கள் சித்தாந்த ரீதியாக செய்து கொண்டிருக்கும் வேலைகளை உங்களிடம் காட்டி அப்ரூவல் வாங்கிவிட்டுத்தான் தொடர வேண்டுமா?? மாணவர் உதயகுமார், சாதிக்பாட்சா உள்ளிட்டோரும் தனிபட்ட குடும்ப பிரச்சினையில்தான் இறந்தார்கள்.. ஏன் வன்மம் கொண்டு கட்சியையே குற்றம் சொல்கிறீர்கள்??
தன் இருப்புக்கு ஆபத்தாக உணரும் திருட்டுப்பயல்கள் என்னைபற்றி கதைகளை அடித்துவிட்டு கொண்டே இருப்பார்கள்.. அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை என கருதுகிறேன்.. கதைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டால் என்னிடம் சொல்லவும், நானும் ஏதாவது தருகிறேன்.. எனக்கு துரோகி, அப்படி இப்படி என என்ன சான்றிதழ் வேண்டுமானாலும் கொடுங்கள்.. தயவு செய்து "இவன் நல்லவன்" என சான்றிதழ் கொடுத்துவிடாதீர்கள்.. அப்பறம் உன் "அட்டாக் டீம்" ல நானும் இருகிறேன் என நினைத்து மக்களுக்கு எதிரி என நினைத்துவிட போகிறார்கள்..
-----
குறிப்பு: இந்த திருட்டுப்பய "ஆட்டை" துரைமுருகன், எனக்கு 7 வருடங்களுக்கு முன் 4000 ரூபாய் தரனும்.. பல முறை கேட்டு சலித்துவிட்டது.. அவன் சட்ட ரீதியா என் மீது நடவடிக்கை எடுத்தால், அதை விட புண்ணியம் எனக்கு வேறெதுவும் இல்லை..
-----
குறிப்பு: இந்த திருட்டுப்பய "ஆட்டை" துரைமுருகன், எனக்கு 7 வருடங்களுக்கு முன் 4000 ரூபாய் தரனும்.. பல முறை கேட்டு சலித்துவிட்டது.. அவன் சட்ட ரீதியா என் மீது நடவடிக்கை எடுத்தால், அதை விட புண்ணியம் எனக்கு வேறெதுவும் இல்லை..
(சீக்கிரம் ஸ்கிரீன்சாட்டை எடுத்து அண்ணனுக்கு அனுப்பிவிட்டு கடமையை பாருங்கடா)
.
.
Tuesday, July 23, 2019
போஸ் டிவிக்கு அளித்த பேட்டி
தேவர் அன்றே சொன்னார் திராவிடத்தின் எழுச்சி தமிழர்களின் வீழ்ச்சி: பெருமாள் தேவன் கள்ளர் சட்ட பேரவை
https://www.youtube.com/watch?v=ov_h1nkDBSU
உலக வங்கியின் சேவகனா மத்திய அரசு?
சாதியில்லை
- சாதி உண்டு தமிழக திராவிட அரசியல்: பொருமாள்தேவன்
https://www.youtube.com/watch?v=dOTjWDTQY-Q
Subscribe to:
Posts (Atom)
நேதாஜி இளைஞரணி
கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...
-
விழிப்புணர்வு_பதிவு ...! ----------------------------------------------------------------------- உலகெங்கும் பரந்து வாழும் கள்ளர் சமூகம் ...
-
- மனிதர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் உருவானார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வி ...
-
புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கிய தொண்டைமான் மன்னர்கள் கிபி 1639 முதல் 1948 வரை ஆட்சி செய்தார்கள். சர்தார் வல்லபாய் படேலின் வேண்டுகோளை...











