Monday, July 18, 2022
Monday, June 6, 2022
சீர்மரபினர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்
சீர்மரபினர் மாணவர் விடுதிகளை பிற்படுத்தப் பட்டோர் விடுதிகளாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேனிமாவட்ட சீர்மரபினர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.
Monday, May 16, 2022
சாதியை/ அடையாளத்தை ஒழிப்பது எப்படி?
1. முதலில் விருப்பம் உள்ளவர்களின் அடையாள அழிப்புக்கான சட்டத்தை உருவாக்க வேண்டும்.
2. தமிழகத்தை நான்கு மண்டலங்களாகப் பிரித்து சமத்துவபுரம் போன்ற சாதி ஒழிப்பு நகரங்களை உருவாக்க வேண்டும்.
3. சாதியை ஒழிக்க விரும்புபவர்களை அங்கு குடியேற்ற வேண்டும்.
4. அவர்கள் தங்கள் உறவினர்களுக்குள் பெண் கொடுக்கக் கூடாது. ரத்த உறவு அல்லாவருக்குத்தான் பெண் கொடுக்க வேண்டும்.
5. அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளின் அறிவுக் கூர்மை, திறமை போன்றவற்றை நிரூபிக்க வேண்டும்.
6. அவர்களின் வாரிசுகள் சிறந்த விளையாட்டு வீரர்களாக, தொழிலதிபர்களாக, விஞ்ஞானிகளாக, தலைவர்களாக வருவதை நிரூபிக்க வேண்டும்.
7. அவ்வாறு செய்ய முடிந்தால் அதன் பின்னர் பொது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தவேண்டும்.
8. வாக்கெடுப்பில் வெற்றிபெற்றால் அதே திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தி சாதியை ஒழிக்கலாம்.
9. அதன் பின்னர் எல்லாருடைய நிறம், தோற்றத்தை ஒரே மாதிரியாக உருவாக்க வேண்டும்.
10. யாரும் எந்தவிதக் குறியீடும் கொண்ட பெயர்களை வைத்துக் கொள்ளக் கூடாது. அதாவது ஒருவரின் பெயர் 1ஏபி என்பதுபோல இருக்க வேண்டும்.
இதன் மூலம் நான்கு தலைமுறைகளுக்குள் அடையாளமற்ற மனிதக் கூட்டத்தை உருவாக்கி விடலாம்.
Monday, January 24, 2022
அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்
வேலுநாச்சியார், மருது பாண்டியர், வ.உ..சி. ஆகியோர் பிரபலமில்லாதவர்கள் என்று கூறி குடியரசுத் தினவிழா அணிவகுப்பில் தமிழக அரசு வாகனத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பாக அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
Sunday, November 28, 2021
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
நேற்று (28-11-2021) உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழச்சி நடைபெற்றது. 1990-93 காலத்தில் படித்த நண்பர்கள் சந்தித்து உரையாடினோம்.
Tuesday, November 23, 2021
தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கத்தின் மாநில உயர்மட்ட குழு ஆலோசகராக நியமனம்
தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கத்தின் மாநில உயர்மட்ட குழு ஆலோசகராக என்னை நியமித்திருக்கும் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் இயன்றவரை சிறப்பாக செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
Monday, November 15, 2021
இடுக்கி அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம்
முல்லைப் பெரியாறு அணைந்து விடும் என்று சொல்லி கேரளா அணையில் தண்ணீரை தேக்க விடாமல் தடுத்து வருகிறது. கேரள அரசியல்வாதிகள் தண்ணீரைத் தேக்கினால் அணை உடைந்து விடும் என்று புரளியைக் கிளப்பி வருகின்றனர். தண்ணீரை தேக்குவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மட்டுமே தண்ணீர் எடுக்க வேண்டும் என்பதில்லை, இடுக்கி அணையிலிருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வரலாம் என்று ஓய்வு பெற்ற பொறியாளரான ரா. வேலுச்சாமி கூறியுள்ளார். அவர் இந்தத் தகவலை என்னிடம் கூறியதும் நான் இது பற்றி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட பொதுச் செயலாளரான எஸ். ஆர். சக்கரவர்தியிடம் தெரிவித்தேன். உடனே அவரை என்னிடம் பேசச் சொல்லுங்கள் என்றார். தேனி வந்த வேலுச்சாமியும் தமிழ்த் தேசிய ஆர்வலர் கோவை கண்ணனும் எஸ்.ஆர். சக்கரவர்த்தியை சந்தித்து திட்டம் பற்றி விவரித்தனர். உடனே அவர் இது பற்றி தேனி மாவட்ட ஆட்சியரிடம் பேசினார். அவர் திட்டம் எவ்வளவு சாத்தியமானது என்பது பற்றி முல்லை பெரியாறு பொதுப்பணித் துறை தலைமை அதிகாரியிடம் பேசச் சொன்னார். திட்டம் பற்றி விசாரித்த அதிகாரிகள் திட்டம் சாத்தியமான ஒன்றுதான் என்று கூறினார்கள். இதைத் தொடர்ந்து இதனை ஒரு மனுவாக தன்னிடம் கொடுக்குமாறு தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நேற்று (15-11-2021) மாவட்ட ஆட்சியரிடம் திட்டம் பற்றிய மனுக் கொடுக்கப்பட்டது. அவர் இதனை தமிழக அரசுக்குத் தெரிவிப்பதாக கூறினார். பின்னர், பத்திரிகையாளர்களை சந்தித்த வேலுசாமி திட்டம் பற்றி விவரித்தார். திட்டத்தின்படி இடுக்கி அணையின் அடிமட்ட அளவிலிருந்து சுமார் 15 கிமீ சுரங்கப் பாதை அமைத்து கூடலூர் மொட்டையாண்டி கோவில் அருகே தண்ணீரைக் கொண்டு வந்து பதினெட்டாம் கால்வாய் வழியாக வைகை அணைக்கு தண்ணீரை கொண்டு வந்து விடலாம். இதில் கேரள அரசு தனக்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்கவும் செய்யலாம். ஏற்கனவே கேரள அரசு 1500 கோடி செலவில் புதிய அணையைக் கட்டுவது பற்றிப் பேசி வருகிறது. ஆனால் இந்தத் திட்டத்தை 500 கோடி செலவில் செய்து விடலாம் என்று வேலுச்சாமி கூறினார்.
நேதாஜி இளைஞரணி
கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...
-
விழிப்புணர்வு_பதிவு ...! ----------------------------------------------------------------------- உலகெங்கும் பரந்து வாழும் கள்ளர் சமூகம் ...
-
- மனிதர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் உருவானார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வி ...
-
சிவகங்கையில் இருந்து கிழக்குபக்கமாக , சிவகங்கை மாவட்டம் , ராமநாதபுரம் மாவட்டம் , புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவி காணப்படும் கள்ளர...








