Tuesday, January 12, 2021

மண்ணின் மைந்தர்களும் நாயக்கஅரசும்

பாகம் : 1
பாண்டிய மன்னனின் மனதை ஆட்கொண்ட நகரம் என்பதனாலே, பாண்டிய மன்னன் தன்னுடைய தலைநகரமாக மதுரையை 2500 வருடங்களாக தொடர்ந்து வைத்திருந்தனர்.
அப்படிப்பட்ட பாண்டிய தேசம் பாண்டியர்களின் சகோதர யுத்தத்தால் கிபி1335 முதல் 1378ஆம் வரை இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சியில் இருந்தது.
கிபி1378ல் கம்பண உடையார் என்கிற விஜயநகர இளவரசன், மதுரை சுல்தான் சிக்கந்தர் ஷாவை தோற்கடித்து வெளியேறுகிறார்
பின்பு கிபி1378 முதல் கிபி1422வரை சுமார் 44 ஆண்டுகள் மதுரை, ஒரு குழப்பமான சூழ்நிலையில் விஜயநகர அடைப்பைக்காரர்களான கவரை,கம்பளத்தாருக்கும் என்கிற நாயக்கர்(தளவாய்), பாண்டிய மன்னர்களும் தொடர் மோதலில் நிலையற்ற ஆட்சியில் இருந்தது.
பின்பு கிபி1422ல் பராக்கிரம பாண்டியன் மீண்டும் மதுரையில் பாண்டியர்களின் ஆட்சியை நிறுவினார். தொடர்ந்து மதுரையை 107வருடங்களாக ஆட்சி செய்தனர்.
அதன்பின்பு கிபி1529ல் மதுரை மாநகர் நாயக்கர் ஆட்சியில் கீழ் கொண்டு வரப்பட்டது. பாண்டிய மன்னர்கள் தங்களுடைய இருப்பை தக்க வைத்துக் கொள்ள தென்காசிக்கு சென்று “தென்காசி பாண்டியர்” என்று கிபி 1618வரை ஆட்சி செய்தனர்.
நாயக்கர் என்பது ஒரு சாதி கிடையாது, அது ஒரு தளபதி என்பதன் பட்டமாகும். இதனை தூய தமிழில் நாயகர் என்பார்கள்.
புதுக்கோட்டை பாண்டியர் கல்வெட்டுகளில் நாயகர் என்கிற பாண்டிய அதிகாரிகளை காணலாம். மேலும் நாயகர் பட்டம் இன்றும் கள்ளர்களுக்கு வழங்கப் பெருவதை புதுக்கோட்டை,தஞ்சையில் காணலாம்.
ஆக தமிழ் நாட்டில் அது நாயகர் என்றும்,
அதே தமிழ் நாட்டில் தெலுங்கு அரசர்களின் தளபதிகளாக இருந்த கவரை,கம்பளத்தார்,தொட்டியர்,பலிஜா போன்றோர் தங்களை நாயக்கர் என்று அழைத்துக் கொண்டனர்.
கர்நாடகா,ஆந்திராவில் - நாயுடு என்றும்
ஒரிசாவில் - நாயக் என்றும்
வட இந்தியாவில் - நாய்க் என்றும் வழங்கப் பெறுகிறது.
இந்திய இராணுவத்தில் நாய்க் என்கிற பதவி இன்றும் உள்ளது.
ஆக கவரை,கம்பளத்தார்,தொட்டியர் போன்றோர் நாயக்கர் என்கிற அடையாளத்தில் நின்றனர்.
அதேபோல் அவர்களுக்கு சேவகம் செய்ய அனுப்ப கவுடா என்கிற கன்னட சேவகர்கள் “அனுப்ப” என்கிற அடைமொழியை தவிர்த்து கவுண்டர் என்று சாதிச் சான்றிதழ்கள் வாங்குகிறார்கள்.
இவர்களே இன்று அலங்கா நல்லூர் என்கிற புதிய ஜல்கிக்கட்டை உருவாக்கி, அதனை நன்கு தொழில்படுத்தி வருகின்றனர்.
அதேபோல் இதே நாயக்கர் ஆட்சியில் பல அன்னிய குடிகள் குடியேற்றப்பட்டனர்.
தமிழ் நெசவாளர்களுக்கு பதிலாக பட்டுனூல்காரர்கள் என்கிற செளராஸ்ட்ரா வகுப்பினர் மற்றும் கன்னட தேவாங்கு ஜவுளி செட்டியார்களையும் குடியேற்றினர்.
தமிழ் ஆசாரிகளுக்கு பதிலாக விஸ்வகர்மா என்கிற தெலுங்கு கம்மாளர்களை குடியேற்றினர்.
தமிழ் பொற்கொல்லர் ஆசாரிகளுக்கு பதிலாக கோமுட்டி செட்டி,கன்னட மஞ்சப்பு செட்டிகள் குடியேற்றப்பட்டனர்.
தமிழ் வணிகர்களுக்கு பதிலாக தெலுங்கு மனை செட்டியார்கள்,ஆயிரம் வைசியர்,பாத்திர செட்டி,வளையல் செட்டி குடியேற்றினர்.
தமிழ் பண்டாரங்கள்,வேளார்கள் கோவிலை விட்டு வெளியேற்றப்பட்டு தெலுங்கு பிராமணர்கள்,விசுவ பிராமணர்கள் அமர்த்தப்பட்டனர்.
இதுபோக இதர சேவக தெலுங்கு குடிகளான முத்துராச்சா, முடிராஜூ ,முத்திரிய நாயுடு, முத்திரிய ராவ்,முத்திரிய நாயக்கர் என்பவர்களையும் குடியேற்றினர். ( தற்போது இவர்கள் தமிழ் சாதியான வலையருடன் சேர முயற்சி செய்கிறார்கள்)
மேலும்,
ஒட்டர்
சில்லவார்
தாசரி
போயர்
கம்சலா
சவளக்காரர்
ரெட்டியார்கள் (கொண்டா,காப்பு உட்பட)
காட்டு நாயக்கர் குடியேற்றப்பட்டனர்.
கள்ளர் நாடுகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் வரிவசூல் செய்ய மணிக்காரர் என்கிற ஜாதியை உருவாக்குகிறார்கள்.
போர் செய்வதற்கு தமிழ் போர்குடிகளை தவிர்த்து, சத்திரிய ராஜூ, தொகட்ட வீர சத்திரியர்,உக்கிரகுல சத்திரிய நச்யக்கர் போன்றோர் குடியமர்த்தப்படுகின்றனர்.
தொழில் சேவக ஜாதிகளாக மாதாரி,சக்கிலியர்,ஆதி ஆந்திரர்,ஆதி கன்னடர்,டொம்மர்,குடியமர்த்தப் படுகின்றனர்.
இப்படியாக மதுரை மட்டும் அல்லாமல் திருச்சி,தஞ்சை என அனைத்து தலை நகரங்களிலும் தெலுங்கு மற்றும் கன்னட குடிகளை குடியேற்றினர்.
தமிழகத்தை விஸ்வநாத நாயக்கரின் சேவகர் அரியநாத என்ற தொண்டைமண்டலமுதலியாரால் 72பாளையங்களாக பிரித்து தங்களது பிரதிநிதிகளை நியமித்தனர்.
இதனால் பல இடங்களில் மதுரை மண்ணின் மைந்தர்களான கள்ளர் நாட்டார்களின் கிளர்ச்சி ஏற்பட்டது.
நாயக்க மன்னர்கள் அவர்களை அடக்க பல இடங்களில் போர் செய்தனர். கள்ளர் நாடுகளில் இருந்து நாயக்க அரசின் மேலாண்மையை ஏற்க பல பிரதானிகளை அனுப்பினர்.
கள்ளர் நாட்டார்கள் அவர்களுடைய மேலாண்மையை ஏற்றார்களா...?
சமாதானமானார்களா...?
தோற்கடிக்கப்பட்டார்களா..?
என்பதனை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.........!
அன்புடன்
சோழபாண்டியன் சேர்வைக்காரர்
ஏழுகோட்டை நாடு

Sunday, November 22, 2020

ஆதித்தமிழர் 18 தொல்குடிகளின் சங்கம்


 ஆதித்தமிழர் 18 தொல்குடிகளின் சங்கம் நேற்று 21- 11-2020 திருவரங்கம் திருச்சியில் இனிதே துவக்கப்பட்டது! இது பிறப்புவழி சாதிக்கு முந்தைய நிலையையும், திணைவழி குடிகளுக்கு பிந்தைய நிலையில் உள்ள குடிகளை, 18 குடிகளாக கொண்டு உருவாக்கம் செய்து,இது அனைத்து தமிழருக்குமான அடிப்படை அமைப்பாக செயல்படும் ஒரு மன்றம் அமைக்கப்பட்டு,அனைத்து குடிகளின் குறைபாடுகளுக்கும் தீர்வை தரும் உச்சநீதி குடிகளின் மன்றமாக செயல்படும், இன்னும் நிறைய விடையத்தை பற்றிய கொள்கைகள் முன்மொழியப்பட்டு தீர்மானங்களாக ஏற்கப்பட்டது....இதை ஒவ்வொன்றாக பிறகு வெளியிடுவேன்..... இதன் முழுவிபரத்தை மாநாடு போட்டு வெளியிடுவோம்......

ரெ.ரவிராசாளியார்
நிறுவனர் & தலைவர்
ஆதித்தமிழர் 18 தொல்குடிகளின் சங்கம்
உலக மக்கள் இயற்கை வாழ்வியல் கழகம்

Tuesday, November 17, 2020

பத்திரம் பிழைத்திருத்தல்

 பத்திரம் பிழைத்திருத்தல்

பற்றிய தகவல்..!
கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய பிழைத்திருத்தல்
பத்திரத்தின் 20 தகவல்கள்....
1. பத்திரத்தில் ஏற்படும் எழுத்து மற்றும் வார்த்தை பிழைகள் சரிசெய்யவே பிழைத்திருத்தல் பத்திரம். அதனைச் சரிப்படுத்தும் ஆவணம் (அல்லது) சீர் செய் ஆவணம் ( RECTIFICATION DEED) என்பர்.
2. கிரயம், செடில்மெண்ட், பாகப்பிரிவினை, உயில் சாசனம், பவர் பத்திரம் அடைமானம், விடுதலை, அக்ரிமெண்ட் போன்ற அனைத்து ஆவணங்களையும் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.
3. சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம், உரிமை மாறக்கூடிய பிழைத்திருத்தல் பத்திரம் என இரண்டு வகைப் பிழைத்திருத்தல் இருக்கிறது.
4. திசைகள், ஊர்ப் பெயர், தன்னுடைய பெயர் என யாருக்கும் எந்தவித பெரிய மாற்றங்கள் இல்லாமல் தனக்கு மட்டுமே பிரச்சனையாகவே உள்ள பிழைகள் சாதாரணப் பிழைகள்.
5. பட்டாவையும், பத்திரத்தையும் காணும்போது. பட்டாவில் உள்ள பெயரும், பத்திரத்தில் உள்ள பெயரும் நேராக இல்லையென்றால் சொத்தை வாங்கப் பலர் தயங்குவர். அதனால் இந்தச் சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் போடப்படுகிறது.
6. செக்குப் பந்தியில் இன்னார் வீட்டுக்கு வடக்கே என எழுதுவதை இன்னார் வீட்டுக்கு கிழக்கே என எழுதுவது. பட்டா எண்ணைப் பத்திரத்தில் தவறாகக் குறிப்பிடுவது, சர்வே எண்ணை தவறாகக் குறிப்பிடுவது, முன்புள்ள பத்திரங்களில் எண்களைத் தற்போது எழுதும்போதும் தவறாக எழுதுவது, இன்சியல், தந்தை பெயர் தவறாக எழுதிவிடுவது. கதவு எண்கள், ஊர்ப் பெயர், தன் பெயர் ஆகியவற்றைத் தவறாக எழுதுவது.
7.கிரயப் பத்திரத்தில் வரைபடம் மேப் விடுபட்டுவிடுவது , மின் இணைப்பு எண் மாற்றி எழுதிவிட்டால், தெருப்பெயர் மாறி விட்டு இருந்தால் திசைகள், எல்லைகள் தவறுதல்கள் எல்லாம், சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் மூலம் திருத்தி விடலாம்.
8. சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரத்திற்கு முத்திரைத்தாள் கட்டணம் ரூ. 100/- மொத்த செலவும், 500 க்குள் முடியும்.
9. உரிமை மாற்றம் பிழைத்திருத்தலில் 2ஏக்கர் 1 சென்ட் என்பதை 1 ஏக்கர் 2 சென்ட் என்று எழுதி விடுவது ஆனால் 2 ஏக்கர் 1 சென்ட்டுக்கு பணம் கொடுத்து இருப்பார்கள், ஆனால் இந்தப் பிழையால் பட்டா மாறுவது தடையாகி விடும். இதனைத் திருத்துவதற்கு உரிமை மாறும் பிழைத்திருத்தல் பத்திரம் போட வேண்டும்.
10. மேற்படி பிழைத்திருத்தல் பத்திரம் எழுதும் போது சரியான அளவினை குறிப்பிட்டு அதற்கு உண்டான அன்றைய சந்தை வால்யூவை வைத்து அதற்குண்டான கட்டணம் செலுத்தினால்தான் இந்த உரிமை மாறும் பிழைத்திருத்தல் பத்திரம் போட முடியும்.
11. குறைவான சதுரஅடி நிலத்தை அதிக சதுரஅடியாக எழுதினால் அதனை தற்பொழுது திருத்தம் செய்யும்போது ஏற்கனவே சார்பதிவகத்தில் கட்டிய முத்திரைத்தாளின் தொகையை திரும்பிப் பெற்று கொள்ள முடியாது.
12. சொத்து விற்ற நபர் பிழைத்திருத்தல் போட வேண்டிய சமயத்தில் உயிருடன் இல்லை என்றால் அவருடைய வாரிசுகளை வைத்துப் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.
13. விற்ற நபருக்கு, வாரிசுகள் இல்லை என்றால் இரண்டாம் வாரிசுகள், மூன்றாம் வாரிசுகள் மூலம், பிழைத்திருத்தல் போடலாம். அதற்கும் வழி இல்லை என்றால் நீதிமன்றம் தான் நாட வேண்டும்.
14. சொத்தை விற்ற நபர் உயிருடன் இருக்கிறார், பிழைத்திருத்தல் போட வர மறுக்கிறார் என்றாலும், நீதிமன்றம் நாடி அதனைத் தீர்க்க வேண்டும்.
15. சர்வே எண், விஸ்தீரணம் , நீள அகல அளவுகள், என அனைத்துமே பிழையாக இருந்தால் , பிழை திருத்தம் பத்திரத்திற்குப் பதிலாக புதிய கிரய பத்திரம் போட வேண்டி இருக்கும்.
16. சில ஆவணங்களில் ஏற்படும் சிறு சிறு தவறுகளை உதாரணமாக சர்வே எண், மனை எண், இனிசியல் தவறுகளை பத்திரபதிவு செய்துவிட்ட பிறகு கண்டுப் பிடித்தால் அதனை அமிலம் வைத்தோ ஒயிட்னர் போட்டோ நீங்ளே திருத்தி விடுவது முற்றிலும் தவறு.
17. மனை எண் 10 யை மனை எண் 11 என்று தவறாக டைப் ஆகி இருந்தால், தாங்கள் பத்திர பதிவுக்கு பிறகு பத்திரத்தில் 10 என்று பேனாவில் போட்டாலும் பதிவு அலுவலக பராமரிப்பு ஆவணங்களில்11 என்றே இருக்கும்
18. இது போன்ற திருத்தம் சட்ட விரோத திருத்தமே இதனால் எந்தவித உரிமை மாற்றமும் வாரது. எவே நிச்சயம் பிழை திருத்தல் பத்திரம் போட வேண்டும்.
19. ஆவணங்களில் எழுதப்பட்ட ஷரத்துக்களில் சில வார்த்தைகள் அடிக்கப்பட்டு மாற்றப்பட்டு இருப்பின் அடித்தல் திருத்தல் வரி பிளவுக்கு நேராகவோ , குறுக்காகவோ இரண்டு நபர்களும் சான்று கையொப்பம் இட வேண்டும்.
20. சொத்து விபரம், சர்வே எண்ணில், வரிபிளப்பு ஏற்படுத்தி திருத்தி இருந்து அட்டேஸ்டேசன் வாங்காமல் இருந்தால் அந்த பதிவு நீதி மன்றம் செல்லாது என்றே தீர்ப்பளித்து இருக்கிறது.
நன்றி :Mr.
Murugappan Muruga

Sunday, November 15, 2020

ராஜேந்திர சோழன் காலத்து தஞ்சை கள்ளர் வீரன்

கிபி 1015 ஆம் ஆண்டு சோழ பேரரசை மாமன்னர் ராஜேந்திர சோழத்தேவர் ஆட்சி செய்துக் கொண்டிருந்தார். அந்த கால கட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லை வாயில் மாசிலாமணி ஈசுவரர் கோயிலுக்கு அச்சரப்பாக்கம் இசக்க நறிவாளன் என்பவர் 1200 குழி நிலத்தை தானமாக அளித்தார்.

கோயிலுக்கு தானமாக அளிக்கப்பட்ட நிலத்தை அதே பகுதியில் வாழ்ந்த நிலவுடைமையாளர்களிடம் இருந்து இசக்க நறிவாளன் விலைக்கு வாங்கியுள்ளார். நிலத்தை விலைக்கு அளித்தவர்கள்:-
"தஞ்சை வீரன் சூற்றி கள்ளன்"
'தஞ்சை வீரன் நாகன் அறியான்"
"அம்பத்துழான் சதுரன் ஒற்றி"
இம்மூவர் வசம் இருந்து 1200 குழி நிலம் பெறப்பட்டு திருமுல்லைவாயில் நாதருக்கு திருப்பணியாக கொடுக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டுகளில் வரும் "தஞ்சை வீரர்கள்" தஞ்சையில் இருந்து குடிபெயர்ந்து தொண்டை மண்டலத்தில் வாழ்ந்தாலும், தங்களது பெயர்களில் தஞ்சையையும் சேர்த்தே பயன்படுத்தி வந்துள்ளனர்.
இவர்களை வீரன் என குறிப்பிடப்பட்டு இருப்பதன் மூலம் , சோழப்படையில் பணியாற்றிய முக்கிய தளபதிகள் என அறியலாம். கள்ளன் என குறிப்பிடப்பட்டு இருப்பதன் மூலம் இவர்கள் கள்ளர் மரபினர் என்பது தெளிவாகும்
தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் கள்ளர்களின் தனி படைபற்று இருந்ததை முதலாம் குலோத்துங்க சோழர் கால கல்வெட்டு " காடும் நாடும் நகரங்களும் கள்ளப் பற்றும்" என குறிப்பிடுகிறது. (கல்வெட்டு எண் : 103 of 1897)
தஞ்சையில் பெரும்பான்மையாக வசிக்கும் கள்ளர் மரபினர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலவுடைமை கொண்டவர்களாகவும், படைத் தளபதிகாளவும் இருந்துள்ளதை இக்கல்வெட்டு நமக்கு உணர்த்துகிறது.
( கல்வெட்டு எண்: 684 of 1904)
தொகுப்பு: சியாம் சுந்தர் சம்பட்டியார்




Sunday, October 4, 2020

கள்ளர் போர்முறை


கள்ளர் என்ற பெயர் கள்ளர் சமூகத்துக்கு எதனால்?
___________
போரில் திருடுவது திருட்டுச் சமூகம் அல்ல. போர் சமூகம்.
வடுகப்புத்தி என்ன பன்னும்னா தமிழர்களின் முழு வரலாற்றை வெளிப்படுத்தாமல் தாங்கள் தமிழ்நாட்டை ஆண்டதில் இருந்து தமிழ்குடிகளின் வரலாற்றைத் தோண்டும். வடுகர்கள் காலத்தில் ஒரு தமிழ்க்குடி செய்த தொழிலை தமிழர்களின் குலத்தொழில் போல் சித்தரித்து தங்கள் ஆட்சியில் இருந்து செய்யப்பட்ட மாற்றங்களை தமிழர்களின் ஆரம்பக்காலம் தொட்டு செய்துவருவதாக பூச்சாண்டி காட்டி தமிழரின் மொத்த வரலாறே அதுதான் எனத் திரித்துக்காட்டும்.
இந்த முறையைப்பயன்படுத்தி தான்
1. ஆகவர் போர்முறை கள்ளரை திருட்டுக்கூட்டம் என்றும்
2. பார்ப்பார் பறையரை பறையடிப்பவன் என்றும்
3. மருத நிலப்பள்ளரை பண்ணை அடிமை என்றும்
4. போர்கலை பயிற்றுனர் சான்றாரை பணையேறி என்றும் கூறி திரித்தது.
இதுக்கு முன்னர் போட்ட பதிவுகளில் பறையர் பார்ப்பனர் என்றும் சான்றார் போர் கலைப் பயிற்றுனர் என்றும் அவர்கள் வடுகர் காலத்தில் முறையே பறை அடிப்போராக்கியும் பணையேறிகளாக்கியதையும் பதிவிட்டிருப்பேன். இப்போது கள்ளர் சமூகத்துக்கான மானுடவியல் காரணியை சொல்லியாக வேண்டும்.
கள்ளர் என்ற சமூகம் திருட்டுச் சமூகம் என்று சொல்வது போலியான காரணம். கள்ளர் சமூகம் உருவாக்கப்பட்ட போர் காரணியை தற்போது நடந்த போர்களோடு ஒப்பிட்டால் கள்ளர் சமூகம் உருவாக்கப்பட்டதற்கான காரணி புரியும்.
1. ஆனையிறவு இரண்டாம் முற்றுகையின் போது வதிரையண் ஃபாக்சு நடவடிக்கைக்காக பால்ராஜ் தலைமையில் புலிப்படை நீரில் இறக்கிவிடப்படுகிறது. சிங்களர் படை எண்ணிக்கை அதிகம். தமிழர்களின் புலிப்படை எண்ணிக்கை குறைவு. அதாவது 300 படத்தைப் போல. இந்நேரத்தில் புலிகள் செய்ய வேண்டியது சிங்களரின் படைத் தளவாடங்களை எல்லாம் கவர்வது. தங்களுடையாக்குவது. இப்போது இந்த கவர்தலை திருட்டுத்தொழில் எனலாமா?
2. மருதநாயகத்தின் போர் நுட்பங்களில் சில. போர்தொடுக்கும் முன்னர் எதிரி நாட்டின் சந்தை, நீர்நிலைகள், உணவு உற்பத்தி செய்யும் இடங்கள் அனைத்தையும் சூறையாடி அங்குள்ள பொருட்களை கவர்ந்து எதிரியின் பொருளாதார பலத்தை வீழ்த்துவது. அதுக்குப்பிறகு தான் போரே நடக்கும். இது போர் நுட்பமா? திருட்டுத்தொழிலா?
3. ஆனால் மருதநாயகத்தால் ஆப்பநாட்டு கொண்டயங்கோட்டை மறவர் சமூகத்தில் வந்த புலித்தேவனை மட்டும் எளிதில் வீழ்த்த முடியவில்லை. ஏன் எனத் தெரியுமா? புலித்தேவன் இந்த போர் நுட்பத்தை வழி வழியாக செய்துவந்த ஆநிரை மீட்கும் மறவர் வழிவந்த அரசன். அதனால் தன்னிடம் உள்ள பொருளாதார வளங்களை எதிரி திருடாமல் காக்கவும். எதிரி திருடிய பொருட்களை மீட்கவும் தெரிந்தவன். ஏன் புலித்தேவனே ஆநிரை கவர்ந்து எதிரியின் பொருளாதார பலத்தை வீழ்த்திய வரலாறுண்டு. அதனால் புலித்தேவன் என்ன திருடனா?
சங்காலத்தில் இருந்து (தமிழகம் முழுவதும்) மறவர் பாளையங்களின் காலம் வரை (புலித்தேவன் கீழிருந்த பாளையங்கள் மட்டும்) தமிழர் மரபில் ஆநிரை, யானை, எதிரி நாட்டின் பொருளாதார பலத்தை கவர்வதற்கென்றே தனி நுட்பங்களை தெரிந்த ஒரு போர் சமூகத்தை உருவாக்கி வைத்திருந்தனர் தமிழர். அதுதான் கள்ளர் சமூகம். ஆனால் வந்தேறி வடுகன் ஆட்சியில் தமிழ் வேந்தனான மும்முடிப் பாண்டியன் (சேர சோழ பாண்டிய நாடுகளை ஆழ்பவன்) வீழ்த்தப்படுகிறான்.
அதனால் தமிழகம் எங்கும் அரசமரபினர் தேடித்தேடி வீழ்த்தப்படுகின்றனர். இப்போது ஆநிரை கவர்தல், எதிரியின் பொருளாதாரத்தை வீழ்த்துதல் போன்ற நுட்பமான போர்முறைகளை செய்து வந்த சமூகம் என்னாகும்?
1. ஒன்று புதிய ஆட்சியாளர்களை எதிர்க்கும்.
2. அல்லது அவர்களுக்கு பணியும்.
3. அல்லது பக்கத்தில் இருக்கும் தமிழர் நாடுகளிலும் குட்டிக் கிராமங்களிலும் புகுந்து சூரையாடும்.
4. இல்லையெனில் சில கூட்டங்கள் புதியவர்களை எதிர்த்தும் சில கூட்டங்கள் ஆதரிக்கவும் செய்யும்.
நான்காவது காரணம் தான் வடுகர் ஆட்சிக்காலங்களில் நடக்கிறது.
புலித்தேவன் பரம்பரையும் வடுக கெட்டிபொம்முவும் பரம்பரைப் பகைவர். தென்பாண்டி நாட்டின் கீழக்குக் கடற்கரை பரதவ அரசியான டான் குரூசு பாண்டிமாதேவி படை மறவரும் ஈழ மறவரும் விசுவநாத நாயுடுவை ஓட விட்டு அடித்தவர்கள்.
ஆனால் இந்த வரலாற்றை மறைத்து சங்ககாலம் முதல் மறவர் பாளையங்களின் காலம் வரை அங்கீகரிக்கப்பட்ட ஆகவர் போர்தொழிலை செய்து வந்தோரை திருடரெனவும் அவர்களுக்கு தாங்கள் தான் ஆட்சியைக் கொடுத்து ஆள வைத்ததாகவும் சொல்லி வரலாற்றைத் திரிக்கிறது வடுகர் கூட்டம்.
______________
சங்ககாலத்தில் தமிழகத்தில் இருந்த கள்ளர் போர்முறைகள்
1. ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்
ஏவல் இளையர் தலைவன் மேவார்
அருஙு குறும்பு எறிந்த ஆற்றலொடு - அகநானூறு 342
விளக்கம்: ஆநிரை கவரும் பொருட்டு ஆகொள்ளுக்கு சிறந்த பெயரைப் பெற்ற மூதூரின் கள்வர் பெருமகன் என்பவன் ஏவிவிட இளையர் படைத் தலைவன் எதிரியின் குறும்பு ஆடுகளை கவர்கிறான். இதனால் எதிரியின் பொருளாதார பலம் அழிய கள்வர் படை வென்றது.
2. ஆயிடை அத்தக் கள்வர் ஆதொழு அறுத்தெனப்
பிற்படு பூசலின் வழிவழ யோடி - அகநானூறு 7
ஆநிரை கவர்ந்து கள்ளர் சென்றுவிட அவரை துரத்திச் சென்று ஆநிரை மீட்கும் மறவர் போல் பின்னே சென்றதாக உவமை சொல்கிறது.
இதுதான் கள்ளரின் போர்முறை. 2500 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் கள்ளரின் போர்முறை காரணமாக அவர்களுக்கு வந்த பெயர்கள் தான் கள்வர், கள்ளர். இதை திருட்டுத்தொழில் செய்த கள்ளர் என்று திரித்துக் கூறும் வடுக வந்தேறி பாசிசுடுக்களை நம்பினால் தமிழர் வீழப்போவது உறுதி.
கள்ளருக்கு வடுக வந்தேறி ஒன்றும் ஆட்சியைக் கொடுக்கவில்லை.
________________
கீழுள்ளது வடுக வந்தேறியான இராஜா நாயுடு போரில் ஆநிரை கவரும் போர்குடிக் கள்ளரை திருட்டுத் தொழில் செய்பவர் எனப் போட்டுள்ள பதிவு. இந்த வடுகனுக்கு காவ்லதுறையில் இருக்கும் கள்ளர் சமூகத்தின் சதவீதத்தை காட்டினால் தான் வாயடைப்பான் போலும்.
//*களவு தொழிலை செய்து வந்த தேவர் சமுகத்தை அடிக்கியதொடு மட்டும் இல்லாமல் அவர்களை ஆள செய்த பெருமை .//

http://naickernaidu.blogspot.in/2012/04/blog-post.html 


Friday, October 2, 2020

இட ஒதுக்கீட்டு உரிமை ஆர்ப்பாட்டம்

 இன்று (02-10-2020) தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில்  சீர்மரபினர் நலச்சத்தின் சார்பில் விகிதாச்சார இட ஒதுக்கீட்டு உரிமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பழகன், மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி, தேவதானப்பட்டி பகுதி பொறுப்பாளர்கள் அ.பெருமாள் தேவன், ஆர்.கே. தங்கராஜா, மணிகண்டன், சுபாஷ், ரத்தினசாமி, செல்வபாண்டி, சரவணன், சரத்குமார், பாண்டிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





Saturday, September 5, 2020

திருச்சி கள்ளர் பற்று




பிரஞ்சு படைகள் பாண்டிச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு படையெடுத்து வந்த போது, அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது விசங்கி நாட்டு திருச்சி கள்ளர்கள்.


பிரஞ்சு படையை தமிழகத்தை விரட்டிய பங்கில் அதிகம் போற்றக்கூடியதும் கூட, அப்படிப்பட்ட கள்ளர் பற்று, பிரஞ்சு படைகளை தாக்கி அவர்களிடம் இருந்து மீட்ட பொருட்களின் மதிப்பு


2,00,000 பிரஞ்சு பணம்.


ஆனால் இதனை பிரஞ்சு அரசு, கவர்ந்ததாக கூறியுள்ளது. அவர்கள் செய்தால் படையெடுப்பு, அதை எதிர்கொண்டு போர் செய்த மன்னின் மைந்தர்கள் கொள்ளையர்கள்........


நன்றி

Dairy of ananda ranga Pillai


அன்புடன்

சோழபாண்டியன்

ஏழுகோட்டை நாடு 

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...