Thursday, April 16, 2020

கேரளத்தின் மார்க்சிய மார்வாடிகளுக்கு வணக்கம்..


கடந்த சில தினங்களுக்கு முன்பு,கொரோனா தொற்று விடயத்தில் கேரளாவை தூக்கிப்பிடிக்கும் சிலருக்காக நான் பதிவிட்ட வீடியோ ஒன்றுக்கு,,, தரம் தாழ்ந்த பதில் ஒன்று வந்திருக்கிறது.
அதில் என்னுடைய நம்பகத்தன்மையை பலவாறு கேள்விக்குள்ளாக்கி இருப்பதாக, தனக்குத்தானே சொரிந்து சுகம் கண்டிருக்கிறார் ஒரு கேரளத்து தமிழ் மார்க்சிஸ்ட்.கேரளாவில் தமிழ் மார்க்சிஸ்ட்டா என்று கேட்டுவிடாதீர்கள்.ஈழத்தில் தமிழ் சிங்களவனே இருந்தபோது இங்கு தமிழ் மார்க்சிஸ்டுகள் இருப்பதில் வியப்பேதும் இல்லை.
அதை கம்பத்தில் வாழும் ஒரு பெரிய புரட்சியாளர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு புளங்காகிதம் அடைந்திருக்கிறார்.
நாகரீகமாக பதிவிடவும் தெரியும், நரகல் நடையில் கிழித்துக் கேப்பைய நட்டவும் தெரியும் எனக்கு.
ஆனாலும் ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் கவுரவமான ஒரு இடத்தில் இருப்பதால் பொறுமையோடு சில கேள்விகளை முன் வைக்கிறேன்...
1-கேரளாவில் வாழும் தமிழர்களுக்கு (உண்மையான) குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் வாழும் தமிழர்களுக்கு,,,
இருப்பிடச் சான்று கொடுப்பதற்கு கேட்கப்படும் ஆவணம் எது...?
2-கடந்த பத்தாண்டுகளில்
கேரளாவில் அடைக்கப்பட்ட தமிழ் பள்ளிகளின் பட்டியலை நீங்கள் தருகிறீர்களா அல்லது நாங்கள் தரட்டுமா...?
3-கேரளாவில் தமிழ்ப்பள்ளிகள் அதிகமாக இருக்கிறது என்றால்... எதற்காக உண்மையான தமிழ் மாணவர்கள், தேனி மாவட்டத்திற்கும், ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்திற்கும் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்விக்காக வரவேண்டும்...?
4-எத்தனை பெரிய கொம்பனாக இருந்தாலும், கேரள அரசு பதிவிதழில், இடுக்கி மாவட்டத்து தமிழர்கள், இன்னமும் floating labour என்று அழைக்கப்படுவது உண்மையா பொய்யா...?
5-கடந்த பத்தாண்டுகளில் கேரளத்தின் அரசுப்பணிகளில் சேர்ந்த, தமிழர்கள் எத்தனை பேர், பட்டியலில் இருக்கிறதா, நாங்கள் தரட்டுமா...?
6-இருப்பிடச் சான்று கேரளாவிலும், பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி தமிழகத்திலும் என்றால்,அரசு வேலைவாய்ப்புக்கு என்ன உத்தரவாதம்...?
7-இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் உண்மையான தமிழ் தொழிலாளர்கள், வாரிசு வேலை இல்லை என்றாகிவிட்ட பிறகு, தங்கள் பணிக்காலம் முடிந்ததும், கம்பெனியின் வீட்டில் தொடர்ந்து தங்கி கொள்ளலாமா...?
அப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எத்தனை தமிழ் தொழிலாளர்களை தங்களுடைய பணிக் காலத்திற்குப் பிறகு கம்பெனியின் வீடுகளில் குடி அமர்த்தியிருக்கிறது... பட்டியல் இருக்கிறதா...?
8-DEE---DEW---SIPW போன்ற தொழிற் சங்கங்களின் தலைவர்கள்... அதாவது AITUC---INTUC---CITU போன்ற தொழிற் சங்கங்களின் தலைவர்கள், தேயிலைத் தோட்ட முதலாளிகளை எதிர்த்துப் போராடக் கூடியவர்கள் என்றால்...
இவர்கள் எதற்காக தேயிலைத் தோட்ட முதலாளி கொடுத்த வீட்டில் தங்கி இருக்கிறார்கள்..?
9-தமிழகத்தில் குறிப்பாக ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில், சொத்துக்களை வாங்கி குவித்திருக்கும், இடுக்கி மாவட்டத்து தமிழ் அரசியல்வாதிகளுடைய பட்டியலை நீங்கள் தருகிறீர்களா, நாங்கள் தரட்டுமா...?
10-தோழர் அச்சுதானந்தன் காலத்தில், குட்டியார் வேலியில் கொடுக்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்கள், கம்பெனியின் வீடுகளில் பதுங்கி கிடக்கிறது. பட்டாக்களுக்குரிய இடம் எங்கே இருக்கிறது என்று அளந்து கொடுப்பதை எது தடுக்கிறது...?
11-வட்டவடை, கோவிலூர், மறையூர், காந்தலூர் போன்ற தமிழர்கள் நிறைந்த பகுதிகளில்,,,,
பெரிய அளவிற்கு நில ஆக்கிரமிப்பை செய்த, இடுக்கி மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகளுடைய முகத்திரையை கிழித்தெறிந்த, தேவிகுளம் சார் ஆட்சியர் திருமதி ரேணு ராஜ் அவர்களை,, ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்தது இதே தோழர் பினராயி விஜயனுடைய அரசு...!
அப்படியானால் தோழர் பினராயி விஜயன், நிர்வாகத்தின் பக்கம் நிற்கிறாரா, நில மாஃபியாக்களின் பக்கம் நிற்கிறாரா...?
12-மொழிவழி சிறுபான்மையினர் 35 விழுக்காடு வாழும் பகுதிகளில்,அந்தச் சிறுபான்மையினரின் மொழியைப் பேசக் கூடியவர்களை மட்டுமே அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். அப்படியானால் எதற்காக தேவிகுளம் தாலுகா அலுவலகத்திலும், நீதிமன்ற வளாகத்திலும், கிளைச் சிறையின் வாசலிலும், அத்தனை மலையாள ட்ரான்ஸ்லேட்டர்கள் அமர்ந்து மனு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்...?
13-இடுக்கியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தமிழகத்தில் கல்லூரிக் கல்வியை முடித்து வரும், உண்மையான தமிழ் பிள்ளைகளின், பதிவு ஏற்றுக்கொள்ளப்படுகிறதா, இல்லையா...?
14-மறையூர் பகுதியில் எவ்வித கேள்வியுமின்றி இருப்பிடச்சான்று வழங்கிய இதே மார்க்சிஸ்ட் அரசு, எதற்காக தேயிலைத் தோட்டப் பகுதிகளில் அதை வழங்க முன்வரவில்லை...?
15-வட்டவடை, கோவிலூர், கொட்டகம்பூர் போன்ற தமிழ் பகுதிகளில், பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில், பத்தாண்டுகளுக்கு மேலாக மலையாள மர வியாபாரிகளால் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கும்,
இடங்கள் யாருக்கு சொந்தமானது...?
பாம்பாடும் சோலை தேசிய பூங்காவுக்கு அருகே, அத்தனை மரத்தையும் வெட்டுவதற்கு அனுமதி கொடுத்தது யார்...?
16-கொட்டகம்பூரில் தமிழர்களுடைய நிலத்தை, ஆக்கிரமித்து அழிச்சாட்டியம் செய்ததற்காக, குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்ட இதே இடதுசாரிகள் ஆதரவு பெற்ற முன்னாள் எம்.பி. யான ஜோயிஸ் ஜார்ஜை, சட்டத்தின் பிடியிலிருந்து விடுவித்தது யார்...?
17-வண்டிப்பெரியாறு பஞ்சாயத்து தலைவராக இருந்த பச்சைத் தமிழரான பாலுவை, பட்டப்பகலில் படுகொலை செய்த மார்க்சிய குண்டர்களை தண்டனை காலம் முடியும் முன்பே சுதந்திரமாக வெளியே உலவ விட்டது யார்...?
18-மார்க்சிய கம்யூனிஸ்ட்கட்சி பத்துக்கும் மேற்பட்ட கொலைகளை செய்திருக்கிறது என்று மேடையிலேயே முழங்கிய,குஞ்சித்தண்ணி எம்.எம்.மணியை, மந்திரி ஆக்கியது யார்...?
19-வண்டிப்பெரியாறு பகுதிகளிலிருந்து, பெரிய அளவிற்கு தமிழர்கள் புலம்பெயர்ந்து, தமிழகம் திரும்புவதற்கு காரணமானது யார்...?
20-தமிழகத்திலும் கேரளத்திலும் சமநேரத்தில் ரேஷன் அட்டையும், வாக்காளர் அடையாள அட்டையும் வைத்திருப்பவர்கள் யார்...?
21-தொழிலாளர் நலச் சட்டங்கள், தேயிலை தோட்டங்களில், உண்மையிலேயே அமல்படுத்தப்படுகிறது என்றால்...
பல்லாயிரக்கணக்கான தேயிலைத் தோட்ட தமிழர்கள் வாழும், மூணாறு சுற்றுவட்டாரத்தில், இன்னமும் ஏன் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை வரவில்லை...?
22-கட்டமைப்புகளில் கொடுக்கப்படும் அதிகாரம் என்பது உண்மையான அதிகாரம் அல்ல, தனி மனிதனுக்கு கொடுக்கப்படும் அதிகாரமே உண்மையான அதிகாரம் என்பதை எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறீர்கள் மார்க்சிஸ்டுகளே...?
23-கடந்த பத்தாண்டுகளில் தேவிகுளம் மற்றும் பீர்மேடு தாலுகாக்களில் குடியேறிய, மலையாள மக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா...?
குமுளியில் இருந்து வண்டிப்பெரியாறு வரை சாலையின் இரு மருங்கிலும் கட்டப்பட்ட மலையாள ஆக்கிரமிப்பு வீடுகளை போல, தமிழர்கள் கட்ட முடியுமா...?
24-1870 காலகட்டங்களில் முதல் தேயிலையை தமிழர்கள் பயிரிட்ட பார்வதி மலையை,பாராகிளைடர் பயிற்சி மையமாக கேரள அரசு மாற்றியபோது...
எங்கே போனார்கள் இந்த புரட்சியாளர்கள்...?
25-இடுக்கி மலையகத்தை உருவாக்கிய, உண்மையான தமிழர்களுக்கு, தேவிகுளத்திலும், பீர்மேட்டிலும் இருக்கும் சொத்து மதிப்பு என்னவென்று தெரியுமா...?
140 ஆண்டு கால உழைப்பில் அவர்கள் உழைத்து சேர்த்த சொத்து பட்டியலை பாருங்கள் தோழர்களே...?
இதுபோக இன்னமும் ஆயிரம் கேள்விகள் பாக்கி இருக்கிறது...
ஏதோ நாங்கள் தான் உழைக்கும் வர்க்கம், நீங்கள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள் என்று போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றுவதை எங்களாலும் செய்ய முடியும்...
மற்றபடி சோறு தின்பதற்கும், சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கும் தேனி மாவட்டம் வேண்டும்... ஆனால் விசுவாசமாக இருப்பதெல்லாம் இடுக்கி மாவட்டத்திற்குத்தான் என்றலையும், ஓய்வு நேர புரட்சியாளர்கள் தயவுசெய்து எந்த மண்ணை புகழ்கிறீர்களோ, அங்கு சென்று வாழ்வது தானே சாலச்சிறந்தது...
அதை விடுத்து நான் இங்கே தான் வாழ்வேன்... ஆனால் பக்கத்து வீட்டை கொண்டாடுவேன் என்றால்... இந்த மண்ணில் வாழ அருகதையற்ற மனிதன் நீ என்பதை மறந்து விடாதே...?
கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் ஆரிப் முகமது மட்டும் வெற்றிக்கனியை பறித்து இருக்காவிட்டால், நாடாளுமன்ற மக்களவையில் கேரளாவின் பிரதிநிதித்துவம் சந்தி சிரித்திருக்கும்... மறந்துவிட வேண்டாம்.
மேற்கு வங்கத்தில் காலங்காலமாக நிகழ்த்திய அதே கதையை இன்று கேரளாவிலும் நீங்கள் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்...
முல்லைப் பெரியாறு பிரச்சினையை தொட்டு நாங்களும் ஆரம்பித்தால் கதை நாறிவிடும் என்பதால், இந்தக் கேள்விகளோடு முடிக்கிறோம்.
இனி ஒவ்வொரு நாளும் 25 கேள்விகள் கேட்போம்...
கேரளத்தில் வாழும் தமிழ் மார்க்சிஸ்டுகளே...
தமிழகத்தில் வாழும் கேரள மார்க்சிஸ்டுகளே...
பதில் தாருங்கள்.
மற்றபடி குரோனா தடுப்பு விடயத்தில்,,, கேரளாவை விட, எங்கள் தாய் தமிழகம், சீரோடும் சிறப்போடும் கடமையாற்றி, நோய் தொற்றுக்கு, முற்றுப்புள்ளி வைக்க கடமையாற்றி கொண்டிருக்கிறது.
எங்கள் துப்புரவு பணியாளர்கள்...
எங்கள் மருத்துவ பணியாளர்கள்...
எங்கள் காவல் துறை பணியாளர்கள்...
எங்கள் உழவர்கள்....
எங்கள் சுகாதாரத்துறை அமைச்சர்...
எங்கள் மாண்புமிகு முதல்வர்...
எங்கள் அமைச்சர் பெருமக்கள்...
எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்...
எங்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள்...
என அனைவரும் தன் முனைப்போடு களத்தில் நிற்கிறோம்.
எங்கள் அரசு எங்களை காக்கும்...
சகுனிகளே சற்று விலகி நில்லுங்கள்...
ச.அன்வர்.
ஒருங்கிணைப்பாளர்.
ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.
16-04-2020
காரைக்குடி.

Wednesday, April 15, 2020

பங்குனி அதிசயம்..!!

பங்குனி அதிசயம்..!!

பங்குனி மாசத்து அதிசயம்..? அப்படி என்ன சார் அதிசயம்... பொல்லாத அதிசயம் என்கிறீர்களா..? இருக்கு...சார்.. இருக்கு.

வேப்பம் பூ... சாலையோரங்களிலும், கிராமப்புறங்களிலும் இந்த பங்குனி மாதத்தில் பூத்துக் குலுங்கும் வேப்ப மரத்துப் பூக்கள்... அவ்வளமாக பார்வையை கவர்வதில்லை... ஆனால் அந்த வேப்பம்பூவிலிருந்து வெளிக் கிளம்பும் ஒரு வகையான வாசம்... மஞ்சளையும், சாணத்தையும் லேசாக தீயிட்டு கருக்கினால் வருமே.. அது போல ஒரு வாசம்.. அதை நுகராமல் ஒரு வேப்ப மரத்தை தாண்ட முடியாது.. பங்குனி மாதத்தில்...

இந்த வேப்பம் பூ தான் பங்குனி மாத அதிசயம்.. வருடத்தில் இந்த மாதத்தில் மட்டுமே அதிகமதிகமாய் பூக்கும்.. இப்படி பூக்கிற பொழுது முடிந்தவரை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்..

பறித்த வேப்பம் பூக்களை ஓரிரு நாள் நிழலில் காயவைத்து உலர்ந்த பிறகு டப்பாவில் நிரப்பிக் கொள்ளலாம்..

இந்த வேப்பம்பூ , ஒரிஜினல் மலைத்தேன் , முருங்கைக்கீரை , நாட்டு மாட்டுப் பால் போல அற்புதம் செய்யும் ஒரு மருந்து என்பது தான் இதன் விஷேஷமே..

வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடி வகையில் ஏதாவது ஒன்று தான் மனிதன்.. என்று சித்த வைத்தியம் சொல்கிறது. அந்த மூன்று நாடிகளையும் சமன்படுத்துகின்ற பேராற்றல் வேப்பம்பூ ஸ்பெஷல்... நாடிகள் சமன் பட்டாலே வியாதிகள் ஓடிப்போகும்தானே..?

கேன்சர் கிருமிகளை கொல்வது, குளிர்ச்சி தருவது, குடற்புண்ணை சரி செய்வது , மன நிம்மதி தருகிறது , பல் சுத்தம் , இத்யாதி...என்பதெல்லாம் தாண்டி "சுகரு "க்கு விஷமாய், எதிரியாய் இருக்கிறது வேப்பம்பூ என்பது இன்னொரு ஸ்பெஷாலிட்டி... நீரழிவின் பேரழிவு வேப்பம்பூ..

இது சித்திரை மாதத்திலும் வரும் என்றாலும்... பங்குனியில் ரொம்ப அதிகம் ..

எப்படி சாப்பிட ..? ஈ.ஸி.. அப்படியே முழுங்கலாம் ஒரு கரண்டி ... வாரத்துல ஒரு நாள்.. போதும்.. தேவைன்னா ஒரு கரண்டி வெல்லம் அதற்குப் பிறகு... தட்ஸ் ஆல்..

இல்லைன்னா பச்சடி, ரசம் , அவியல்னு ஆயிரம் மெனு "நெட்"டுல இருக்கு.. படிங்க.... எப்படியாச்சும் சாப்பிடுங்க...

நம்ம பெரியவங்க , இதை நாம சாப்பிட வேண்டும் .. நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்... சித்திரை முதல் நாளன்று வாழைப்பழத்தோடு சாப்பிட வைத்திருக்கிறார்கள்.. மெல்ல மறந்தாயிற்று அதை..

இந்த ஆண்டிலிருந்து பயங்கரமான ஆஸ்பத்திரி செலவை எப்படியாவது மல்லுக்கட்டி குறைக்க ஆசைப்படுகிறவர்கள், விரும்புகிறவர்கள் எல்லாம் பங்குனியில் வேப்பம்பூ பொக்கிஷத்தை சேகரித்து பத்திரப்படுத்துங்க பாஸு....

சொடுக்கு போடற தூரத்துல சுகாதாரம் ...என்ன ..? லேசா மெனக்கெடனும்.. அம்புட்டு தான்....

Gandhi Sampath


Monday, April 13, 2020

சிறுநீரக கல் கரைய



தார் வெட்டிய பிறகு வாழை மரத்தில் தண்டுப்பகுதியில் குழியாக வெட்டி, தூசு விழாதபடி ஒரு துணியைக் கொண்டு மூடி வைக்க வேண்டும்.
அடுத்த நாள் காலை அந்தக் குழியில் வாழை நீர் நிரம்பி இருக்கும்!
வெறும் வயிற்றில் அந்நீரை ( 300 முதல் 600 மில்லி வரை வயது, உடல் எடைக்கேற்றவாறு குடிக்கலாம்) ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி குடித்தால் எவ்வளவு பெரிய சிறுநீரக கல்லும் கரைந்து சிறுநீரில் வெளியேறிவிடும்!
மேலும், வயிற்றுப்புண், வாய்ப்புண்கள், சிறுநீரகத்தொற்றுகள் சரியாகும்!.
குறைந்தது 3 நாட்களும், அதிகபட்சமாக 5 நாட்களும் தான் இப்படி குடிக்க வேண்டும்.
தேநீர், காபி, இறைச்சி, மீன், மது ஆகியவை இந்த வாழைத் தண்ணீரை குடிக்கும் நாட்களில் சாப்பிடக்கூடாது! அதிகம் பழங்கள், நீராகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பயன்படுத்தி பார்த்து நிவாரணம் கண்ட எளிய மருத்துவம்!

கோகுலநாதன் பண்டிதன் தமிழ்சித்தர் குடி

பெ.மணியரசன் அவர்களின் சாதி சார்ந்த தமிழ்த் தேசியத்திற்கு எதிர்ப்பும், அதற்கு நமது பதில்களும்


தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்களின் சாதி சார்ந்த தமிழ்த் தேசியத்திற்கு எதிர்ப்பும், அதற்கு நமது பதில்களும்

//"சாதி வழியாகத் தமிழரை அடையாளம் காண வேண்டும் என்பவர்கள் அவ்வாறு அடையாளங்கண்டு, அனைத்து சாதித் தமிழர்களையும் ஒருங்கிணைக்க என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்? இதுவரை அவர்கள் அத்திசையில் செய்த வேலைத்திட்டம் என்ன?//

ஒருவர் தமிழரா என்பதை அடையாளம் காணத்தான் சாதி அடையாளம் அவசியமாகிறது. தமிழர்களை ஒருங்கிணைக்க சாதி அடையாளத்தை மறுக்கவோ, மறைக்கவோ தேவையில்லை. தமிழர் உணர்வு பெருகும்போது சாதி இணக்கத்தின் தேவைக்கான புரிதல் ஏற்படும். அதுவே இணக்கத்திற்கான முதல் படியாக அமையும். அதற்கெல்லாம் மேலாக தமிழுணர்வால் எழுச்சி பெறும் புதிய தலைவர்கள் மற்றவர்களோடு இணக்கமாக செல்லவே முற்படுகிறார்கள். அதற்கான செயல்கள் சிறிய அளவில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

//சாதியின் பெயரால் ஒரு தமிழ்ச்சாதி இன்னொரு தமிழ்ச்சாதியை ஆதிக்கம் செய்யும்போதும், தாக்கும்போதும் அந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண இவர்கள் வைத்திருக்கும் திட்டம் என்ன? இவர்களின் தலையீடு என்ன?//

அப்படியெல்லாம் இப்போது நடப்பதில்லை. சிறுசிறு மோதல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. காலப் போக்கில் அவற்றையெல்லாம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக சாதியே கூடாது என்பது தமிழினத்தின் அடிப்படை சமுதாய கட்டமைப்பை மறுப்பதாகும்.

//ஒடுக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளை மீட்க - தமிழர் சமத்துவத்தை உருவாக்க - தமிழ்த்தேச விடுதலையை முன்னெடுக்க - இவர்கள் இதுவரை செய்துள்ள பணிகள் என்ன?//

முளைத்து வரும்போதோ சாதனை செய்து வரவேண்டுமா? எல்லாத் தமிழர்களையும் சமமாகப் பார்க்கும்போது அவரவர் உரிமைகள் அவரவருக்குக் கொடுக்கப்படும். அதையெல்லாம் நிரூபிக்க அரசியல் பலம் வேண்டும். இந்தக் கேள்வி ஏற்கனவே நிறுவப்பட்ட சாதி மறுப்பு தமிழ்த் தேசியவாதிகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்.

//தமிழர் ஒற்றுமைக்கும், தமிழர் உரிமைக்குமான இவ்வேலைகளில் எல்லாம் அவர்கள் ஈடுபட்டால் "சாதிவாதம்" பேசமாட்டார்கள்.//

தமிழர் ஒற்றுமைக்கும் உரிமைக்கும் சாதி வேறுபாடு தடையாக இருக்கப் போவதில்லை. ஒரே மாதிரியாக இல்லாத விரல்கள் ஒன்றிணைந்து கச்சிதமாக செயல்படுவதைப் போல தமிழ்ச் சமுதாயங்களும் இணைந்து செயல்படும்.

//பொழுதுபோக்குத் தமிழ்த்தேசிய வாதிகளின் புதுப்புது கண்டுபிடிப்புகளில் நாம் அக்கறை செலுத்த வேண்டியதில்லை.//

சாதி மறுப்பு தமிழ்த் தேசியவாதிகள்தான் பொழுதுபோக்கு தமிழ்த் தேசியவாதிகள். அவர்கள் திராவிடத்தின் நீட்சியாக உள்ளனரே தவிர தமிழ்த் தேசியவாதிகளாக இல்லை.

//இன்று சாதி நிலைத் திருப்பதற்குக் காரணம், பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வும் - அதனடிப்படையில் சில பலன்களும் இருப்பதால்தான். எனவே, சாதியை ஏற்றுக் கொண்டால் தமிழர்களுக்குள்ளேயே உயர்வு தாழ்வு பார்க்கிறார்கள் என்று பொருள். சாதி அடிப்படையிலேயே பலன் பெற விரும்புகிறார்கள் என்று பொருள்!//

சாதி உயர்வு தாழ்வுக்கும் சாதிகளுக்கும் தொடர்பில்லை. சாதிய உயர்வு-தாழ்வு என்பது கற்பிதமானது. மனுதர்ம வர்ணாசிரம தர்மத்தின்படியானது. அது பொய்யானது. ஆனால், சாதி என்பது உண்மையானது. எனவே இந்த வேறுபாட்டைப் புரிந்தாலே உயர்வு தாழ்வு எண்ணம் மறைந்து விடும்.

//யார் தமிழர் என்பதற்கு அவர்களின் தாய்மொழி முதல் அடையாளம். அடுத்து தமிழைப் பொது மொழியாக - ஆட்சி மொழியாக - கல்வி மொழியாக ஏற்றுக் கொண்டு நீண்ட காலமாக மரபுவழித் தாயகமாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் பிறமொழி பேசுவோரும் தமிழ் மக்களே!//

இதை ஏற்க முடியாது. இந்தக் கருத்தின்படி கருணாநிதியும் ஸ்டாலினும் தமிழர் ஆகிவிடுவார். அவர்களை தமிழர் ஆக்கிவிட்டு தமிழ்த் தேசியம் பேச வேண்டிய அவசியமே இல்லை. தமிழகத்தில் தமிழ் பேசி வாழ்வோர் தமிழ்நாட்டுக் குடிகளாக மட்டுமே கருதப்படுவர். அவர்களை தமிழராக கருத முடியாது.

//தமிழ்த் தேசவிடுதலை இலக்கோ, அதற்கான செயல்பாட்டு ஒப்படைப்போ (அர்ப்பணிப்போ) இல்லாதவர்கள் ஒய்யாரமாக ஓய்வுநேரத்தில் பேசும் சாதி வழித் தமிழ்த்தேசியம் உண்மையான தமிழ்த் தேசியம் அன்று!"//

தமிழ்த் தேசிய விடுதலை என்பது இந்திய ஒன்றியத்திலிருந்து விடுதலை பெறுவது என்றால் அது பிரிவினைவாதம், சட்ட விரோதமானது. அதைப் பேசக் கூடாது, பேச முடியாது. ஆனால், இந்திய ஒன்றியத்திற்குள்ளாக மாநில உரிமைகளை பெறுவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு அது சாத்தியமில்லாதபோது இந்திய ஒன்றியத்தின் தவறுகளை சர்வதேச மன்றத்தில் வைத்து சுயநிர்ணய உரிமை கோரலாம். அதற்கும் சாதி சார்ந்த தமிழ்த் தேசியமே அடிப்படையானது. சாதியை மறைக்க, ஒழிக்கச் சொல்லும் எந்தவிதமான கருத்தியலும் தமிழர்களுக்கு எதிரானதே.

Monday, April 6, 2020

நான்காம் தமிழ் சங்கத்தில் தேவர்களின் பங்கு :-

கிட்டதட்ட இராயிரம் ஆண்டுகளுக்குப்பின் கிபி 1901ல் பாலவனத்தம் ஜமீன்தார் பாண்டித்துரை தேவர் அவர்கள் மதுரை தமிழ் சங்கம் எனும் பெயரில் நான்காம் தமிழ் சங்கத்தை தொடங்கினார். தமிழ் சங்க உருவாக்கத்திலும் செயல்பாட்டிலும் தங்களது உழைப்பையும் செல்வத்தையும் செலவிட்ட தேவர்கள் பலர்.
மதுரை தமிழ் சங்கத்தின் தலைமைக்குழுவில்:-
ஸ்ரீமான் பாண்டித்துரை தேவர் ( பாலவனத்தம் ஜமீன்தார்)
ஸ்ரீமான் சாமினாத விஜயத்தேவர் ( பாப்பாநாடு ஜமீன்தார்)
ஸ்ரீமான் ராஜராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி( ராமநாதபுரம் மன்னர்)
மதுரை தமிழ் சங்கத்திற்கு பொருளுதவி செய்த புரவலர்கள்:-
ஸ்ரீமான் பாண்டித்துரை தேவர் ( பாலவனத்தம் ஜமீன்தார்)
மாட்சிமை தங்கிய பாஸ்கர சேதுபதி அவர்கள்(ராமநாதபுர மன்னர்)
ஸ்ரீமான் ராஜராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி( ராமநாதபுரம் மன்னர்)
மாட்சிமை தங்கிய புதுக்கோட்டை மகாராஜா மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்
ஸ்ரீமான் V.T.S சேவுக பாண்டித்தேவர் ( சேத்தூர் ஜமீன்தார்)
ஸ்ரீமான் ராமச்சந்திரத்தேவர் அவர்கள்
ஸ்ரீமான் சுப்பிரமணிய தீர்த்தபதி ( சிங்கம்பட்டி ஜமீன்தார்)
சங்கத்தின் விருத்திக்கான காரியங்கள் நடத்தி வருபவர்கள்:-
ஸ்ரீமான் ராஜராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி( ராமநாதபுரம் மன்னர்)
ஸ்ரீமான் கோபாலசாமி ரகுநாத ராசாளியார்( அரித்துவாரமங்கல நிலக்கிழார்)
தமிழ்ச்சங்கத்தில் ஆராய்ச்சி நூல்கள், கட்டுரைகள் , பழைய நூல்கள் ஆகியவற்றை இயற்றியவர்கள் :-
ஸ்ரீமான் கோபாலசாமி ரகுநாத ராசாளியார்( தஞ்சை அரித்துவாரமங்கல நிலக்கிழார்)
திரு.K கிருஷ்ணசாமித்தேவர், மிராசுதார், அவளிவனல்லூர், அரித்துவாரமங்கலம்
திரு.இராமசாமி வன்னியர், மிராசுதார், புலவர்நத்தம், தஞ்சை
திரு.பம்பையா சேதுராயர், நற்றமிழ் தமிழ்ச்சங்கம், இளங்காடு
திரு.ந.மு. வேங்கடசாமி நாட்டார், தமிழ்ப்பண்டிதர், திருச்சி
திரு.முத்துவிஜயரகுநாத வழுவாடித்தேவர்( சேந்தங்குடி ஜமீன்தார்)
திரு.சாமிநாத விஜயத்தேவர் ( பாப்பாநாடு ஜமீன்தார்)
திரு.இராமலிங்க விஜயத்தேவர்( பாப்பாநாடு இளைய ஜமீன்தார்)
திரு.ராஜமன்னார்சாமி நாடாள்வார், சீராளூர், தஞ்சை
திரு.வெங்கடாசல ரகுநாத ராஜாளியார், மிராசுதார், தஞ்சை
திரு. V. அப்பாசாமி வாண்டையார், மிராசுதார், பூண்டி, தஞ்சை
திரு. ஜனகராஜத் தேவர், மதுரை
திரு.T.V. உமாமகேசுவரம் பிள்ளை, தஞ்சை
காட்டுமிராண்டிக் கூட்டத்தின் மறுபக்கம்....
நூல்: கருணாமிர்தசாகரம் (கிபி 1917ல் எழுதப்பட்டது)
குறிப்பு திரு. இராமசாமி வன்னியர் என்பார் வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர்
திரு. Tv. உமாமகேசுவரம் பிள்ளை என்பார் பிள்ளை பட்டம் கொண்ட அகமுடையார்







Sunday, April 5, 2020

பட்டியல் இனம் கடந்து வந்த பாதை

சமூகத்தில் நசுக்கப்பட்ட மக்களாகவும்,தீண்டாமைக்கு ஆளான மக்களாகவும்,பொருளாதாரத்தில் கடைநிலையிலும்,நிலமுல்லா ஏழைகளாகவும் இருந்த சமூங்களை இந்தியா முழுவதும் கணக்கெடுத்து Government of India 1935 actன் படி, கிபி1936ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசரால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
அதில் அப்போதைய ஆந்திரா,கேரளா,தமிழ்நாடு(பெங்களூர் உட்பட) உள்ளடங்கிய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் 74சாதிகளை பட்டியல் இனமாக அடையாளப்படுத்தப்பட்டனர்.
As per Government of India 1935, list of schedule castes:-
1. ஆதி ஆந்திரா
2. ஆதி திராவிடா
3. ஆதி கர்நாடாகா
4. அஜிலா
5. அருந்ததியர்
6. பைரா
7. பகுடா
8. பண்டி
9. பரிகி
10. பட்டடா
11. பவுரி
12. பெல்லரா
13. சசாதி
14. சக்கிலியன்
15. சளுவாடி
16. சேமர்
17. சண்டாலா
18. சேருமான்
19. தந்தாசி
20. தேவேந்திர குலத்தான்
21. சேசி
22. காதகலி
23. காதாரி
24. காட்டா
25. பயகரி
26. கசங்கி
27. ஹட்டி
28. ஹசலா
29. ஹோலியா
30. ஜக்கலி
31. ஜம்புவலு
32. கல்லடி
33. கணக்கன்
34. கொடலோ
35. கூசா
36. குடும்பன்
37. குறவன்
38. மாதாரி
39. மடிகா
40. மய்லா
41, மலா
42. மலா தாஸா
43. மதங்கி
44. மொஹெர்
45. முச்சி
46. முண்டாலா
47. நலகியாவா
48. நாயாடி
49. பகடை
50. மயிலா
51. பைதி
52. பைண்டா
53. பகி
54. பள்ளன்
55. பம்படா
56. பாமிதி
57. பஞ்சமா
58. பணியன்
59. பறையன்
60. பரவன்
61. புலையன்
62. புதிரை வண்ணான்
63. இராணியர்
64. ரெல்லி
65. சமகரா
66. சபரி
67. செம்மான்
68. தோட்டி
69. திருவள்ளுவர்
70. வள்ளுவன்
72. வால்மிகி
73. வேட்டுவன்
74. பண்ணியாண்டி
இதில் தேவேந்திர குலத்தான்,கணக்கன்,குடும்பன்,குறவன்,பள்ளன்,பறையன்,புலையன்,புதிரை வண்ணான்,வள்ளுவன்,திருவள்ளுவர்,வேட்டுவன்,பரவன் உட்பட 12 தமிழ் சாதிகள் மட்டுமே தமிழகத்தில் பட்டியல் இனமாக 1936ல் அறிவிக்கப்பட்டது.
அதன் பின்பு மொழிவாரி மாநிலம் பிரிக்கும் சமயத்தில், மாநிலங்களில் மொழி வாரி மக்களை பிரிக்கும் போது அதில் உள்ள பட்டியல் இனத்தவர்களை சரிசெய்து அதில் சில சாதிகளை சேர்த்து 1956 திருத்தப்பட்ட தாழ்த்தப்பட்டோர் சட்டத்தின் மூலமாக வெளியிடப்பட்டது.
As per 1956 Schedule caste amendment act list:-
1. ஆதி ஆந்திரா
2. ஆதி திராவிடா
3. ஆதி கர்நாடாகா
4. அஜிலா
5. அருந்ததியர்
6. பைரா
7. பகுடா
8. பண்டி
9. பெல்லாரா
10. சக்கிலியன்
11. சலவாடி
12. சேமர் (அ) முச்சி
13. சண்டாலா
14. சேருமான்
15. தேவேந்திர குலத்தான்
16. டொம், டொம்பரா,பைதி (அ) பனோ
17. கதகலி
18. காட்டா
19. கசங்கி
20. ஹோலியா
21. ஜக்கிலி
22. ஜம்புவலு
23. கடையன்
24. கல்லடி
25. கரிம்பலன்
26. கூசா
27. குடும்பன்
28. குறவன்
29. மாதாரி
30. மடிகா
31. மயிலா
32. மலா
33. மாவிலன்
34. மொகிர்
35. நலகியவா
36. நாயாடி
37. முண்டலா
38. பகடை
39. பள்ளன்
40. பாம்படா
41. பஞ்சமா
42. பண்ணியாண்டி
43. பறையன்
44. புதிரை வண்ணான்
45. இராணியார்
46. சமகரா
47. செம்பான்
48. தோட்டி
49. திருவள்ளுவர்
50. வள்ளுவர்
51. சபரி
52. சம்பான்
கோவை மற்றும் சேலத்தில் வாழும்:-
53. பண்ணாடி
54. வாதிரியான்
மலபார் அதாவது தமிழக- கேரள எல்லையில் வாழும்:-
55. கவரா
56. மலையன்
57. பாணன்
58. புலைய வேட்டுவன்
தமிழக- கேரள எல்லையான நீலகிரி:-
59. கணக்கன் (அ) படமா
தமிழக - கர்னாடகா எல்லை மாவட்டங்களில் வாழும்:-
60. பதடா
61. ஹஸ்லா
62. நல்காடியா
63. பரவன்
தஞ்சாவூரில் மட்டும் வாழும்:-
64. கோலியன்
65. வேட்டையன்
என 65 தென்னிந்திய சாதிகளில் ஏற்கனவே இருந்த 12சாதிகளோடு புதிதாக சேலம் மற்றும் கோவையில் வாழும் பண்ணாடி,வாதிரியானும் கன்னியாகுமரியில் வாழும் பாணன்,கடையன் தஞ்சையில் வாழும் வேட்டையன் மற்றும் கடையப் உட்பட மொத்தம் 18சாதிகள் பட்டியல் இனத்தில் கொண்டு வரப்பட்டனர்.
மீண்டும் 1976ல் சட்டத்திருத்தம் கொண்டு வந்து மீண்டும் பட்டியலில் தமிழகத்தில் சில சாதிகளை உள்ளே கொண்டு வரப்பட்டனர்.
1. ஆதி ஆந்திரா
2. ஆதி திராவிடா
3. ஆதி கர்நாடாகா
4. அஜிலா
5. அருந்ததியர்
6. பைரா
7. பகுடா
8. பண்டி
9. பெல்லாரா
10. சக்கிலியன்
11. சலவாடி
12. சேமர் (அ) முச்சி
13. சண்டாலா
14. சேருமான்
15. தேவேந்திர குலத்தான்
16. டொம், டொம்பரா,பைதி (அ) பனோ
17. கதகலி
18. காட்டா
19. கசங்கி
20. ஹோலியா
21. ஜக்கிலி
22. ஜம்புவலு
23. கடையன்
24. கல்லடி
25. கரிம்பலன்
26. கூசா
27. குடும்பன்
28. குறவன் சித்தனார்
29. மாதாரி
30. மடிகா
31. மயிலா
32. மலா
33. மாவிலன்
34. மொகிர்
35. நலகியவா
36. நாயாடி
37. முண்டலா
38. பகடை
39. பள்ளன்
40. பாம்படா
41. பஞ்சமா
42. பண்ணியாண்டி
43. பறையன்,பறையர்,சாம்பவார்
44. புதிரை வண்ணான்
45. இராணியார்
46. சமகரா
47. செம்பான்
48. தோட்டி
49. திருவள்ளுவர்
50. வள்ளுவர்
51. சபரி
52. மண்ணன்
53. கூத்தன்,கூடன்
54. பள்ளுவன்
55. பரவன் (குமரி,நெல்லை,செங்கோட்டை)
56. பரதர் ( குமரி,நெல்லை,செங்கோட்டை)
57. புலையர்,சேருமார்
58. சாம்பான்
59. செம்மான்
60. தண்டன்
61. வள்ளோன்
62. வண்ணான் ( குமரி,நெல்லை,செங்கோட்டை)
63. வாதிரியான்
64. வேலின்
65. வள்ளுவன்
66. திருவள்ளுவர்
67. வேடன்
68. வேட்டையன்
69. வேட்டுவன் ( குமரி,நெல்லை,செங்கோட்டை)
70. பாணன்
71. பஞ்சமா
72. பண்ணாடி
73. பண்ணியாண்டி
74. பதியன்
75. படணன்
இதில் புதிதாக குமரியைச் சேர்ந்த பரதர்,வண்ணான்,பாணன்,வேட்டுவன்,பள்ளுவன் மேலும் சேர்க்கப்பட்டனர்.
குறிப்புகள்:-
1. பட்டியல் இனத்தில் மொத்தம் 75சாதிகளில் 25சாதிகள் மட்டுமே தமிழ் மொழி பேசுபவர்கள் மீதம் உள்ளவர்கள் கன்னடம்,தெலுங்கு,மலையாளம் பேசுபவர்கள். இதனால் தமிழகத்தின் பட்டியல் இனச்சலுகையை பிற மாநிலத்தவர்களே சுவைத்து வருகின்றனர். மேலும் இந்த சலுகையில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்து மேலும் பட்டியல் சலுகைகளை தமிழர்களிடம் இருந்து இன்னும் எடுக்கப்பட்டது.
2. பண்ணாடி,பரதர்,குமரி வண்ணார்,வேட்டுவர்,வேடர், தஞ்சை வேட்டையன்,சேலம் வாதிரியான் போன்றோர் பிற்காலத்தில் இணைக்கப்பட்டனர்.
3. 1956ல் சேலம்,கோவை வாதிரியான் என்ற சாதியை இணைத்து பின்பு அவர்களுக்கு சம்பந்தம் இல்லாத தூத்துக்குடி,இராம் நாடு வாதிரியார்களை எந்தவொரு நிபந்தனையில்லாமல் 1976ல் தமிழகம் முழுவதும் வாதிரியார்கள் பட்டியல் இனத்தில் கொண்டு வரப்பட்டனர்.
4. குமரி பகுதிகளில் அதிகமாக பட்டியல் இனம் அடையாளம் காணப்பட்டதற்கு தமிழ் சேரர்களை வீழ்த்திய கேரள நம்பூதிரிகளும் அவர்களைச் சார்ந்த நாயர் மற்றும் அரச மரபினரே இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.
Source
MINISTRY OF SOCIAL JUSTICE AND EMPOWERMENT (INDIA)
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு









ஆர்எஸ்எஸை உருவாக்கிய ஹெட்கேவார் தெலுங்கு பிராமணர்



ஆர்எஸ்எஸை உருவாக்கிய கேசவ் பலிராம் ஹெட்கேவார் தெலங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட தெலுங்கு பிராமணர் ஆவார்.
ஆதாரம் வேண்டுமல்லவா?
கீழே கொடுத்துள்ள விக்கிபீடியா இணைப்பில் அவரது சாதி "தெலுகு தேஷாஸ்த ரிக்வேதி பிராமிண்" என்றும், அவரது பூர்வீகம் இன்றைய தெலங்கானா, நிஜாமாபாத் மாவட்டம் கண்ட்குர்த்தி கிராமம் என்று சொல்கிறது.
https://en.wikipedia.org/wiki/K._B._Hedgewar?fbclid=IwAR187vCEQDO3hZrBjRTHl5C8--2XeSDGzKI-XQaZHd3FqWUhDFWeoADxV78
கீழே கொடுத்துள்ள இணைப்பில் ஆர்எஸ்எஸின் ஒரு பிரிவான "இந்திரபிரஸ்தா விஷ்வ சம்வத் கேந்திர" அமைப்பின் தலைவரும் ஆர்எஸ்எஸ் பற்றி 2 புத்தகங்களை எழுதியவருமான அருண் ஆனந்த் எழுதிய கட்டுரை உள்ளது. இதில் அவரது பூர்வீகம் தெலங்கானா, கண்ட்குர்த்தி கிராமம் என்று சொல்லப்பட்டுள்ளது.
https://theprint.in/india/rss-founder-hedgewar-was-with-congress-and-other-facts-you-didnt-know/387491/?fbclid=IwAR1Ci-e7XwJAGqEfrhjSs_dUrCc-X06_RswaffD2-TqaOWFN_jVA_NTv050
கீழே கொடுத்துள்ளது ஆர்எஸ்எஸ் வெளியிட்டுள்ள காணொளி. இதில் அவரின் பூர்வீகம் ஆந்திரா என்கிறது.
https://www.youtube.com/watch?v=exx9luza06Y

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...