Thursday, February 2, 2017

கோல்வால்கர் பற்றி ஒரு கோல்மால் கதை




சில மாதங்களுக்கு முன்பு இந்து மக்கள் கட்சியின் தலைவரான அர்ஜூன் சம்பத்தமிழகத்தில் பெரியாரின் சிலைகளை அகற்றி விட்டு அங்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைகளை அமைக்க வேண்டும் என்று பேசினார். தமிழ் மக்களின் நலன்களை பாஜக காற்றில் பறக்கவிடும் நிலையில் இவரது பேச்சு வாங்கு வங்கி அரசியலை அடிப்படையாகக் கொண்டது என்று நான் பதிவு செய்தேன்.



அதற்கு மறுப்பு தெரிவித்த ஒருவர், தேவர் ஆர்எஸ்எஸ்ஸின் இரண்டாவது தலைவரான கோல்வால்கரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டதாக கூறினார். அதற்கு ஆதாரமாக திண்ணை இணையத்தில் வெளியான கட்டுரையை காட்டினார்.

கோல்வால்கரின் 50வது பிறந்தநாள் விழா 1956-ம் ஆண்டு மதுரையில் நடந்ததாகவும் அந்த விழாவிற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தலைமை தாங்கியதாகவும் புதுவை சரவணன் என்பவர் எழுதியுள்ளார். இந்தக் கட்டுரை திண்ணை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது அப்பட்டமான பொய் ஆகும்1949-ம் ஆண்டு தலைமறைவாகும் முத்துராமலிங்கத் தேவர் 1951 ஜனவரியில் கேரளா வழியாக நாடு திரும்புகிறார். அப்போது அவரது அழகிய மீசை மழிக்கப்பட்டு பாகவதரைப் போல கூந்தலை வளர்த்திருக்கிறார். அது முதல் அவர் தலைமுடியை வெட்டவேயில்லை. இதுமுடிசூடா மன்னன் முத்துராமலிங்கத் தேவர்” புத்தகத்தில் 146வது பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.



1955-ம் ஆண்டு இறுதியில் பர்மா வாழ் தமிழர்கள் கேட்டுக் கொண்டதன் பெயரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பர்மா பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் டிசம்பர் இறுதி வாரம் முதல் பிப்ரவரியில் இரண்டு வாரங்கள் வரை இருக்கிறார். இந்தப் பயணம் முழுவதும் காணொளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.


18.02.1956-ம் தேதி அவர் விமானம் மூலமாக பர்மாவிலிருந்து கல்கத்தா வந்தடைகிறார்.

அதே ஆண்டு மே 30 முதல் ஜூன் 5-ம் தேதி வரை மதுரை தமிழ்ச் சங்கத்தின் பொன் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தேவர் அதற்கு முந்தைய நாள் அறிஞர் அண்ணாதுரை பேசிய பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கிறார்.

அதே ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி தமிழ் மொழியை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதாக தேவர் சட்டமன்றத்தில் பேசுகிறார்.

இப்படியாக 1956-ம் ஆண்டு முழுவதுமாக தேவர் கலந்துகொண்ட நிகழ்வுகள்
அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தகவல்கள் பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம் எழுதிய "பசும்பொன் சரித்திரம்" என்ற நூலில் இடம்பெறுகின்றன. இதில் கோல்வால்கரின் 50வது பிறந்தநாள் விழா மதுரையில் தேவரின் தலைமையில் நடந்திருந்தால் அது பதிவு செய்யப்படாமல் போக வாய்ப்பே இல்லை.

தேவரின் வாழ்க்கை வரலாற்று நூல் என்றால் அது "முடிசூடா மன்னன் முத்துராமலிங்கத் தேவர்நூலே ஆகும். அந்த நூலை எழுதிய .ஆர். பெருமாள் தனது சிறு வயது முதல் தேவருடன் இணைந்து பணியாற்றியவர் ஆவார். அவர், தேவர் தானே வாய்மொழியாகச் சொன்ன தகவல்கள், தான் நேரில் கண்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அந்த நூலை எழுதினார். ஆக தேவரின் வாழ்க்கை வரலாற்றுக்கான அடிப்படை நூலே இதுதான். இந்த நூலில் கோல்வால்கர் பற்றிய குறிப்பு இல்லை. இத்தனைக்கும் தேவரின் (இந்து) மத தொண்டு குறித்தும் இதில் ஒரு கட்டுரையும் உள்ளதுகாவ்யா சண்முகசுந்தரம், மேற்படி நூல் உட்பட 24 சிறிய பெரிய நூல்களை ஆதாரமாகக் கொண்டு "பசும்பொன் சரித்திரத்தை" எழுதியுள்ளார். இதிலும் கோல்வால்கர் பற்றிய குறிப்பு இல்லை.

தற்போது வாழும் "தேவர் தகவல் களஞ்சியம்" என்று அழைக்கப்படும் வரலாற்று ஆய்வாளர் திரு நவமணி அவர்களை தொடர்புகொண்டு விசாரித்தேன். அவரும் கோல்வால்கரின் கதை பொய் என்று கூறிவிட்டார்.
எனவேஇந்து வியாபாரிகள்தங்கள் கோல்மால் கதைகளை குப்பையில் கொட்டி விட்டு உண்மையாக மக்களுக்குத் தொண்டு செய்து அரசியல் செய்து மக்களின் மனதில் இடம் பிடிக்க  வேண்டும்.






(படத்தில் கோல்வால்கரின் முன்பாக வணங்கி கைகூப்பி நிற்கும் நபரை தேவர் 
என்கிறார்கள். முதலில் தேவர் கிராப் வெட்டி இருக்கவில்லை. இரண்டாவது தேவரின் மூக்கு இத்தனை கூர்மையானதாக இல்லை. இந்த நபரின் படம் எந்த விதத்திலும் தேவருடன் ஒத்துப் போவதில்லை.)








Friday, January 27, 2017

தனி தமிழ்க் குடியரசுகள்


சில திராவிட அறிவாளிகள், இந்திய பாசக்காரத் தம்பிகள் தனித் தமிழ்நாடு கோரிக்கை விடுத்தால் அது தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளையும் தனித்தனியாக கோர வழிவகுக்கும் என்று கிண்டலடிக்கிறார்கள்.

அவர்களின் அறிவுக்கு எட்டிய செயலைச் செய்கிறார்கள், பரவாயில்லை. அது அவர்களின் ஆழ்ந்த அரசியல் அறிவைக் காட்டுகிறது.

தமிழர்கள் இயல்பிலேயே அறநெறி, போர்நெறி, சமூகநெறி, ஒழுக்கநெறி மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் சோழர்களின் காலத்திலேயே அவர்கள் உள்ளாட்சித் தலைவர்களை தேர்வு செய்ய குடவோலை என்ற குடியாட்சி முறையை பின்பற்றி இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட அறிவிற் சிறந்த தமிழர்கள் தனித் தமிழ்நாடு என்று கிடைத்து விட்டால் அதை எப்படி சீரும் சிறப்புமாக அமைப்பார்கள்? அது ஓரு கூட்டாட்சிக் குடியரசாகவே அமையும். இருக்கின்ற 32 மாவட்டங்களும் தனித் தனி அரசுகளாகவே அமையும். இதனால் ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்ற பகுதியைச் சேர்ந்தவர்களின் விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டியிருக்காது. அத்தனை சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்படும்.

கூட்டாட்சிக் குடியரசுகளுக்கான பின்னடைவுகளும் இருக்கவே செய்யும். ஆனால் அவற்றை தங்கள் கூரிய அறிவால் சரி செய்வார். தங்க்ள சீரிய அரசியலால் உலகையே வழிநடத்துவர்.
இன்னொரு விஷயம், அப்போ து பாண்டிச்சேரியும், ஈழமும் தனிக் குடியரசுகளாக இருக்கும்.


Thursday, January 26, 2017

போர்க்குடிகளின் சிறப்பு


சில குடிகள் உயிரை பாதுகாப்பதையும் உடலை பாதுகாப்பதையுமே அடிப்படை தந்திரமாக, நோ க்கமாக கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் போர்க்குடிகளின் அடிப்படை கொள்கையே இனத்திற்காக, நாட்டிற்காக உயிரையும் உடலையும் துறக்கத் தயாராக இருப்பதாகும். அந்த நிலையின் அடிப்படையில் பிறப்பதே வீரமாகும்.

இந்த நெறிகளின் அடிப்படையில் வந்தவர்களே சிறந்த ஆட்சியாளர்களாக இருக்க முடியும். இல்லாவிட்டால், உடலை, உயிரை, உடைமையை பாதுகாப்பதற்காக ஆட்சியாளர்கள் நாட்டையும் இனத்தையும் காட்டிக் கொடுப்பார்கள். அதையே நாம் கடந்த காலங்களில் கண்டோம்.

அதற்காக போர்க்குடிகள் அத்தனைபேரும் உத்தம புத்திரர்கள் என்று நான் சொல்லவில்லை. அங்கயும் எல்லாவித மனிதர்களும் இருக்கவே செய்வார்கள். அவர்களில் சிறப்பானவர்களை கண்டறிந்து ஆட்சியில் அமர்த்துவதே நாட்டிற்கு நல்லது.

சிறந்த ஆட்சியாளர்களாக இல்லாதபட்சத்தில் அவர்களை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். அவர்களால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் முடியாது.

Tuesday, January 24, 2017

அரசியலில் ஏன் நல்லவர்கள் இல்லை அல்லது குறைவாக இருக்கிறார்கள்

அரசியல் என்பதே வெட்டிவேலை என்று கருதப்படுகிறது. அதோடு அது ஒரு எதிர்கால உறுதியற்ற கடினமான, செலவு மிகுந்த வேலையாகவும் உள்ளது. கூடுதல் நிர்வாகத் திறன் தேவைப்படக் கூடியது.

எனவே நல்லவர்கள் அல்லது தங்களை நல்லவர்கள் என்று நினைப்பவர்கள், சொல்லிக்கொள்பவர்கள் துணிந்து இந்த வேலையில் இறங்குவதில்லை. அதோடு அவர்கள் வருகின்ற இழப்புகளையும் தோல்விகளையும் சந்தித்து நிலைத்து நிற்க விரும்புவதில்லை.

அதற்கெல்லாம் மேலாக போட்டியாளர்கள் ஏற்படுத்தும் இடையூறுகள், தொந்தரவுகளை சமாளித்து நிற்பதில்லை.

உண்மையில், அரசியல் எளிதானது. ஏனெனில் தீய அரசியல்வாதிகள் எதையும் திட்டமிட்டு செய்வதில்லை. எனவேதான் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றாலும் கூட மக்களின் மனதில் இடம் பிடிக்க முடியாமல் போகிறது.

எனவே நல்லவர்கள் நேரம் ஒதுக்கி, நிதி திரட்டி, நிலைத்து நின்று திட்டமிட்டு அரசியல் செய்தால் மேற்படி தீய அரசியல்வாதிகளை எளிதாக வென்று விடலாம். அதோடு மக்களின் மனதில் இடம் பிடித்து விடலாம். அவ்வாறெல்லாம் செய்ய முடியாது என்றால் தயவுசெய்து நல்லவன் என்று சொல்லிக் கொண்டு அரசியல் பேசாதீர்கள்.

வேறு என்ன செய்யலாம்? உங்களுக்கு நல்லவர்களாக தோன்றும் அரசியல்வாதியுடன் இணைந்து நேரம் ஒதுக்கி, பொருளும் ஒதுக்கி செயல்படுங்கள். அதுவே நல்ல அரசியலுக்கு வழிவகுக்கும். இவற்றுக்கெல்லாம் மேலாக பொறுமை மிகவும் அவசியம்.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து.

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...