Thursday, December 27, 2012

யார் இந்த பெருமாள் தேவன்?



சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு உசிலம்பட்டி அருகேயுள்ள வலங்காகுளத்தில் வாழ்ந்து வந்தவர் மெய்யத் தேவர்  (ஆதாரம் – பிறமலைக்கள்ளர் வாழ்வும் வரலாறும், பக்கம் - 279). இவருக்கு பெரிய கட்டத் தேவர், சின்னக் கட்டத் தேவர் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். 

மூத்தவரான பெரிய கட்டத் தேவருக்கு 3 குழந்தைகள் பிறக்கின்றன. 3 குழந்தைகளில் மூத்தவரான முத்துக்கண்ணன். இவர் 200 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்ச காலத்தில் பிழைப்புத் தேடி தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டிக்கு வருகிறார்.

பெருமாள் தேவனின் முன்னோர்களும் அவர்களது வாரிசுகளும்-


1.    கட்டத் தேவர்  = 1. முத்துக்கண்ணன் (மேட்டுப்பட்டி), 2. மாயாண்டி (ங்காகுளம்), 3. வீரணன் (மேட்டுப்பட்டி)
2.    முத்துக்கண்ணன் தேவர் (செல்க்கார முத்துக்கண்ணன்) = 1. முத்துக்கண்ணன், 2. மாயாண்டி, 3. வீரணன், 4. கருப்புச்சாமி
3.    வீரணத்தேவர் = 1. வெள்ளையத்தேவர் 2. பெருமாள் தேவர், 3. கிரட்டயன் வீரணன், 4. தவசி (நாட்டுக்கொட்டை தவசி)
4.    பெருமாள் தேவர் = இவருக்கு 1. பெரிய கண்ணுத் தேவர், 2. மாயக்காள், 3. பெருமாயி, 4. பழனியம்மாள், 5. கருப்பாயி, 6. பழனிச்சாமித் தேவர் என்ற 6 குழந்தைகள் பிறந்தன.
5.    பெரிய கண்ணுத் தேவர் = இவருக்கு 1. அம்மவாசித் தேவர், 2. தங்கம்மாள் என்ற 2 குழந்தைகள் பிறந்தன.

6.    அம்மவாசித் தேவர் = இவர் முதலில் வீரம்மாளையும், பின்னர் ஆண்குழந்தை இல்லை என்ற காரணத்தால் வீரம்மாளின் சகோதரி ராமுத்தாயையும் மணக்கிறார்.
இதில் வீரம்மாளுக்கு 1. கண்ணம்மாள், 2. ஜானகி, 3. ஜெயா, 4. இந்திரா, 5. செல்வி என்ற 5 பெண் குழந்தைகளும்,
ராமுத்தாய்க்கு 1. விஜயா, 2. வேண்டாமணி, 3. பெருமாள் தேவன், 4. வனராணி, 5. கண்ணன் தேவர், 6. மூர்த்தி தேவர் என்ற 6 குழந்தைகளும் பிறக்கின்றன.

மூத்த மனைவிக்கு 5 பெண்குழந்தைகளும், இளைய மனைவிக்கு 2 பெண் குழந்தைகளும் பிறந்த பின்னர் ஆண் குழந்தை இல்லை என்று உறவினர் பலராலும் பல்வேறு ஆலயங்களில் இறைவனை வேண்டிக் கொண்ட பிறகு பிறந்தவர்தான் பெருமாள் தேவன். அம்மவாசித் தேவர் தனது தாத்தாவின் நினைவாக இவருக்கு பெருமாள் தேவன் என்று பெயர் சூட்டினார்.

1972-ல் அம்மவாசித் தேவரின் வீட்டில் கால்நடை வளமும் பால் வளமும் பெருகி இருந்த காரணத்தால் வீட்டில் அனைவரும் இவரை பாலு என்றும் பாலுச்சாமி என்றே அன்போடு அழைத்து வருகின்றனர். ஆனால் பள்ளியில் கொடுக்கப்பட்ட பெயர் பெருமாள் தேவன்.

இவர் 1976ம் ஆண்டு முதல் 1980 வரை தேவதானப்பட்டி வடக்குத் தெருவில் உள்ள அரசினர் கள்ளர் துவக்கப்பள்ளியில் படித்தார். 1981ம் ஆண்டு முதல் 1988 வரை தேவதானப்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளியில் படிக்கும் காலத்தில் தேசிய சேவைத் திட்டத்தில் (என்எஸ்எஸ்) சேர்ந்து பணியாற்றியுள்ளார். 1985 ஆண்டில் சுயமாக இந்தி கற்க ஆரம்பித்தார். பள்ளியில் பயிலும் காலத்திலேயே ஓவியம் வரையும் திறமையை வளர்த்துக் கொண்டார்.

1990ம் ஆண்டு முதல் 1993 வரை உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவில் படித்து முதல் வகுப்பில் தேர்வு பெற்று பட்டம்  பெற்றார்.

பள்ளியில் படிக்கும்போது சிறந்த நினைவாற்றல் பெற்றவராக இருந்தார். ஆசிரியர் கற்பிக்கும் பாடல்களை உடனே அப்படியே திருப்பிச் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தார். இருந்தாலும் படிப்பில் நடுத்தர மாணவராகவே இருந்து வந்தார். பள்ளியில் ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்களில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். புதிர் போடுதல், விடுகதைகள் போடுதல் மற்றும் விடுவித்தல் போன்றவற்றிலும் ஆர்வம் மிக்கவராக இருந்து வந்தார்.

பள்ளி – கல்லூரிகளில் படிக்கும் காலத்தில் தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றிருக்கிறார். எந்த விஷயத்தையும் தயங்காமல் நண்பர்களிடம் வாதம் செய்யும் வழக்கம் கொண்டவராக இருந்தார். தர்க்கத்தின் மூலமாகவே தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்து வந்தார்.

1981 முதலே நூலகம் செல்ல ஆரம்பித்த இவர் பல்வேறு பத்திரிகைகளை வாசித்து வந்தார். அந்த கால கட்டங்களில் ஓவியத்தில் இருந்த ஆர்வம் காரணமாக பின்னாளில் பத்திரிகை ஓவியராக வரவேண்டும் என்று விரும்பினார். சித்திரக் கதைகள் வாசிக்க ஆரம்பித்த இவர் பின்னர் துப்பறியும் நாவல்கள், குடும்ப நாவல்கள் என்று வாசித்து வந்த இவருக்கு ஆன்மீகத்திலும் நாட்டம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நாத்திகத்தில் நம்பிக்கை கொண்ட இவர் பின்னர் ஆஸ்திகராக மாறினார். பரமஹம்சர், விவேகானந்தர், போன்றோரின் ஆன்மீக கருத்துக்களால் கவரப்பட்ட இவர் ஓஷோவின் ஆன்மீக கருத்துக்களில் முழு ஈடுபாடு காட்டினார்.

கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ஓராண்டுகாலம் வால் பெயின்டராக இருந்து வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்களை எழுதி வந்தார். பின்னர் அந்த தொழில் சரிப்பட்டு வராத காரணத்தால் மும்பை சென்றுவிட்டார்.

1995ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை மும்பையில் உள்ள மராத்திய முரசு பத்திரிகையில் துணை ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் 1996 முதல் 2001ம் ஆண்டு வரை தினபூமி பத்திரிகையில் துணை ஆசிரியர், பொறுப்பாசிரியராக இருந்து வந்தார்.
அதன் பிறகு இன்று வரை தன்னிச்சையாக மொழிபெயர்ப்பாளராகவும், விளம்பர எழுத்தாளராகவும் இருந்து வருகிறார்.  மேலும் டப்பிங் வசனங்கள், பதிவு மேற்பார்வை, விளம்பர நிறுவனங்களில் மொழி மேற்பார்வையாளராக இருந்து வருகிறார்.

2009ம் ஆண்டு முதல் மும்பையில் தாராவி பகுதியில் வசித்து வரும் சமூக சேவகரான திரு. எஸ்.ஏ. சுந்தர் அவர்கள் நடத்தும் சிட்டிஸன் ஃபோரம் மகாராஷ்டிரா என்ற சமூகநல அமைப்பில் இணைந்து சயான் கோலிவாடா பகுதி தலைவராக இருந்து சமூக சேவை செய்து வந்தார். இப்பகுதியில் ரத்ததானம், பான் கார்டு முகாம்கள் போன்றவற்றை நடத்தினார்.

அதேபோல இந்த அமைப்பின் சார்பில் மும்பை சயான் மருத்துவமனையில் சுகாதார முகாம் நடத்தப்பட்டது. இந்த அணியின் தலைவராக இருந்து இந்த முகாமை நடத்தினார். இந்த முகாம் 4 மாதங்கள் வரை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் இந்த அமைப்பு மருத்துவமனைக்குள் நோயாளிகளால் எடுத்துச் செல்லப்பட்ட 600 கிலோ அளவுள்ள புகையிலை பொருட்கள் மற்றும் போதைப் பொருட்களும் பிடிபட்டன. இந்த மருத்துவமனையில் எந்தவொரு சமூகநல அமைப்புகளாலும் ஒரு வாரத்திற்கும் மேலான திட்டங்களை நடத்த இயலவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இதே காலகட்டத்தில் மும்பையில் உள்ள நாம் தமிழர் நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட்டார். பின்னர் இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில்  மகாராஷ்டிரா மாநில பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். எஸ்ஆர்எம் பல்கலைகழகம் சிறு விண்கலம் அனுப்பியதைத் தொடர்ந்து 2012 பிப்ரவரி மாதம் ஐஜேகே கட்சியின் நிறுவனத் தலைவர் திரு பாரிவேந்தருக்கு மும்பையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை நடத்திய நிர்வாகிகள் குழுவில் முக்கிய பங்காற்றினார்.

2012 மார்ச் மாதம் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் மும்பை போலீசார் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை தடுப்புக் காவலில் வைத்தனர். இது பற்றி தகவலறிந்ததும், தனது நண்பரும் மும்பை நகர பாஜக செயலாளருமான திரு. ராஜா உடையாருடன் இணைந்து அந்த மீனவர்களை விடுவிக்க உதவி செய்தார். அதேபோல தமிழர் பிரச்சனைகளுக்காக மும்பையில் தமிழ் அமைப்புகளால் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகள் போராட்டங்களிலும் கலந்துகொண்டுள்ளார்.

எஸ்ஆர்எம் பல்கலைகழகம் இலங்கையில் தனது பல்கலை கழகத்தை ஆரம்பித்த பின்னர் இவர் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டார். 

Saturday, December 22, 2012

பாட்டா பாட்டிகளின் பாலுணர்வுகளும் செயற்பாடுகளும்


Old-coupleபாலியல், பாலுறவு, பாலியல் உணர்வுகள், பாலியல் செயற்பாடுகளில் திருப்தி மற்றும் திருப்தியின்மை போன்றவை எமது சமூகத்தில் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. நாலு பேர் மத்தியில் பேசுவதற்கு அசூசைப்படுகிறோம். தூஸணை வார்த்தைகள் போல உச்சரிக்க சங்கோசப்படுகிறோம்.
பாலுணர்வானது உயிரினங்களின் வாழ்வின் தொடர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் இன்றிமையாத அம்சமாக விளங்குகிறது. இருந்தபோதும் அவற்றைப் பேசா மொழிகளால் மறுதலிக்கிறோம்.
அதிலும் முக்கியமாக வயது முதிர்ந்தவர்களின் பாலியல் உணர்வு பற்றிய எண்ணமே எமது சமூகத்தில் அறவே கிடையாது எனலாம். பாட்டா பாட்டியுடன் நெருங்கிப் பேசினால் கிழட்டு வயதில் செல்லம் கொஞ்சிறார் என நக்கல் அடிக்கிறோம்.
அம்மப்பாவிற்கு தலையிடி என்பதால் ஆதூரத்துடன் நெற்றியைத் வருடிவிடும் அம்மம்மாவின் செயல் பிள்ளைகளுக்குச் சினமாக இருக்கிறது.
‘தேவார திருவாசகம் ஓதிக் கொண்டு அல்லது வேதமொழிகளைப் படித்துக் கொண்டு மூலையில் கிடக்க வேண்டிய ஜன்மங்கள் அவர்கள்’ போன்ற எண்ணமே மேலோங்கியிருக்கிறது.
ஆனால் மேலை நாடுகளில் முதியவர்களின் பாலியல் உணர்வுகள், ஈடுபாடுகள் பற்றிய ஆரோக்கியமான ஆய்வுகளும் விவாதங்களும் நடைபெறவே செய்கின்றன.
அப்படியான ஒரு ஆய்வு The University of California, San Diego School of Medicine and Veterans Affairs ல் நடைபெற்றது.
பாலியல் ரீதியான திருப்தியை அவர்களில் கண்டறிவதற்கானது இந்த ஆய்வு 806 வயோதிபப் பெண்களின் 40 வருட மருத்துவப் பதிவேடுகளை ஆதாரமாகக் கொண்டு செய்யப்பட்டது. அவர்களுடைய சராசரி வயது 67 ஆக இருந்தது. 63 சதவிகிதமானவர்களுக்கு மாதவிடாய் நின்று விட்டது.
ஆச்சரியப்பட வைக்கும் சில முடிவுகள்
அந்தக் கிழங்களில் பாலியல் பற்றிய ஆய்வா எனக் கேட்பவர்கள் மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படும்படியாக சில முடிவுகள் இருந்தன.
கணவன் பாலியல் ரீதியான ஆர்வமும்; செயற்திறனும் உள்ளவராயின், அவர்களில் 50 சதவிகிதமானவர்கள் கடந்த 4 வாரங்களிடையே உடலுறவு வைத்ததாகக் கூறினர்.
அவர்களில் 67 சதவிகிதமானவர்கள் உடலுறவின் உச்ச கட்டத்தை எட்டியதுடன் அதில் திருப்தியும் அடைந்தனர். கணவனின் விந்து வெளியேற்றம் தங்களது உச்சகட்டத்திற்கு முதலே நிகழ்ந்துவிடுகிறது என பெரும்பாலான இளம் பெண்கள் கவலைப்படும் இன்றைய நிலையில் 67 சதவிகிதமான முதிய பெண்கள் திருப்தியடைந்தமை ஆச்சரியப்பட வைத்தது.
அவ்வாறு திருப்தியடைபவர்கள் பலர் இருந்தபோதும் 40 சதவிகிதமான பெண்கள் தங்களுக்கு ஒருபோதும் பாலியல் ஆர்வம் இருக்கவில்லை என எதிர்மாறாகக் கூறினார்கள். மேலும் 20 சதவிகிதமான பெண்கள் தங்களுக்கு மிகக் குறைந்தளவே ஆர்வம் இருந்தது என்றார்கள்.
80 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் 50 சதவிகிதமானவர்கள்; தங்களுக்கும் கூட அடிக்கடி பாலியல் உந்தல், உறுப்பில் ஈரலிப்புத்தன்மை, உச்சகட்ட உணர்வு ஏற்பட்டதாகக் கூறினர். இருந்தபோதும் பாலியல் ஆர்வம் குறைவாகவே இருந்ததாகக் கூறினர்.
ஆனால் சாதாரண பெண்களில் பாலியல் ஆர்வமே உடலுறவிற்கு இட்டுச் செல்கிறது என்பதை நாம் அறிவோம். ஆர்வம் இல்லாதபோதும் இவர்கள் உடலுறவு கொள்வதற்கு காரணம் என்ன?
தனது கணவன் அல்லது பாலியல் பங்காளியுடனான உறவை உறுதிப்படுத்தவும் தொடருவதற்காகவுமே அவ்வாறு ஆர்வம் இல்லாதபோதும் கூட உறவு கொள்கிறார்கள் என ஆய்வாளர்கள் எண்ணினார்கள்.
பொதுவாக வயது முதிரும்போது பாலியல் திருப்தி ஏற்படுவது குறைவு என்றே நம்பப்படுகிறது. ஆனால் இந்த ஆய்வானது வயது முதிர முதிர பாலியல் திருப்தி அதிகம் ஏற்படுவதாகக் கூறுகிறது. அதிலும் 80 வயதிற்கு மேட்பட்டவர்களில் கிட்டதட்ட எப்பொழுதும் ஏற்படுவதாகக் கூறுகிறது.
மிக முக்கியமான விடயம் பாலியல் திருப்தியடைவதற்கு புணர்ச்சி எப்பொழுதும் அவசியமாக இருந்திருக்கவில்லை. தொடுகை, அன்பாகத் தட்டிக்கொடுத்தல், சரசலீலை, போன்ற எல்லாவித உள்ளார்ந்த நெருக்க நிலைகளும் திருப்தியை அவர்களுக்குக் கொடுத்தன.
இதிலிருந்து தெரிவதென்ன? உணர்வுரீதியான மற்றும் உடல் ரீதியான நெருக்கமானது பாலுறவின் உச்சநிலையை அனுபவிப்பதை விட முக்கியமானதாக இருக்கலாம்.
எனவே பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுகிறார்களா, செயற்பாட்டில் குறைபாடுகள் இருக்கின்றனவா போன்றவற்றை ஆராயும் அணுகுமுறைக்குப் பதிலாக அவர்களின் உளத் திருப்தி மையமாக கொண்ட அணுகுமுறையே அதிக நன்மை பயப்பதாக இருக்கலாம்.
மற்றொரு ஆய்வு
2007ல் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வும் வயதானவர்களின் பாலியல் செயற்பாடுகள் தொடர்வதை உறுதிப்படுத்தியது. 57 வயதிற்கும் 85 வயதிற்கும் இடைப்பட்ட 3000 வயோதிப அமெரிக்கப் பெண்களில் ¾ பங்கினர் ஏதாவது ஒரு வகை பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தியது.
பெண்களில் மட்டுமின்றி ஆண்களும் முதிரும்போது
உடல் உள ரீதியான பாலியல் ஆற்றாமைகள் அதிகரிக்கின்றன, முன்னரைபோல அடிக்கடி ஈடுபட முடிவதில்லை ஆயினும் பாலியல் உணர்வும் ஆர்வமும் குறைவதில்லை. பாலியல் பங்காளி இன்னமும் உயிருடன் இருப்பதுடன், செயற்திறன் குறையாதிருந்தால் பாலியல் செயற்பாடுகள் குறைவதில்லை என்றது.
ஆற்றாமைகள் அதிகரிக்கின்றன
இவர்களது பாலியல் செயற்பாட்டு முறைகளாவன ஏனைய வயதினர் செய்வதை ஒத்ததே. பெரும்பாலனவர்கள் வழமையான யோனியுறவு கொண்டார்கள். சிலர் மாறி மாறி வாய் புணர்ச்சி செய்தார்கள். இன்னமும் சிலர் தற்புணர்ச்சி (masturbation) செய்ததும் உண்டு.
செய்ய வேண்டியது என்ன?
எமது சமூகம் இனப்பாகுபாடு இன ஒடுக்குமுறை ஆகியவை பற்றி வாய் கிழியப் பேசுகிறது. ஆனால் முதியவர்களின் பாலியல் உணர்வுகளை மதிப்பதில்லை. ஜடங்கள் போலவே கணிக்கிறார்கள். சருமம் சுருங்கியபோதும் அவர்களது உணர்வுகளும் மனமும் அன்றலர்ந்த மலர்போல மென்மையாகவே இருப்பதை உணர்வதில்லை. அவர்களது பாலியல் உணர்வுகளைப் புரிவதில்லை.
அவர்களது பாலியல் உணர்வுகள் மற்றும் செயற்பாடுகள் ஆகியவற்றிற்கு அங்கீகாரமும் ஆதரவும் வழங்குவதில்லை. அல்லது அவை பற்றி சிந்திக்கவோ பேசவோ முயல்வதில்லை. அதற்கான சந்தர்ப்ப வாய்ப்புகளை அவர்களுக்கு அளிப்பதில்லை. உங்கள் குழந்தையை இரவில் அவர்களுடன் தூங்கவிட்டால் உங்களால் சுகம் காண முடியும். ஆனால் பாட்டன் பாட்டிகளுக்கு பேசவும், தழுவவும் அருகிருக்கவும் தனிமையானது எட்டாக் கனியாகிவிடும்.
இது தவறான அணுகுமுறை. அவர்களின் உணர்வுகளை மதியுங்கள். அவர்கள் அவ்வாறு ஈடுபடுவதற்கான சூழலானது எமது கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் குறைவு. கூட்டுக் குடும்பமாக இல்லாவிடினும், முதிர்ந்த பெற்றோர் பிள்ளைகளது வீட்டில் தங்கியிருப்பதற்கான தேவைகள் அதிகரிக்கின்றன.
இத்தகைய நிலையில் அவர்களது தனிப்பட்ட உணர்வுகளுக்கும் செயற்பாட்டிற்கும் உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள். அவ் விடயத்தில் அவர்களது செயற்பாடுகளை ஏளனமாகப் பார்ப்பதையும், குற்றம் குறை சொல்வதையும் நிறுத்துங்கள். இது பற்றிய வெளிப்படையான கலந்துரையாடலை சம்பந்தப்பட்டவருடன்
தனிப்பட்ட முறையில் ஆரம்பியுங்கள். அவர்களது வாழ்வில் வசந்தம் மீண்டும் மலரட்டும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), MCGP (col)
குடும்ப மருத்துவர்

நன்றி http://www.eelamview.com/2012/12/22/old-couple-sexuality/

Wednesday, December 5, 2012

தமிழர்களின் பன்முகத் தோல்விக்கு திராவிடர்களின் பிரச்சார வெற்றியே காரணம்






திராவிடர்கள் தங்களுடைய கருத்துத்தான் தமிழர்களின் கருத்து என்பதை தங்கள் பிரச்சாரத்தின் மூலம் நம்ப வைத்தனர். அது தமிழர்களின் தோல்விகளுக்கு அடிப்படை காரணமாக அமைந்தது.

இதில் முதலில் வருவது கடவுள் மறுப்பு. இது கருத்தளவில் தோல்வி பெற்றாலும். அதுதான் சிறந்த கருத்து என்ற நிலை பெற்றது. சாதி ஒழிப்பு பட்டப் பெயர்களை பயன்படுத்துவதை தவிர்த்தல். இதனால் தமிழர் இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களால் சாதியை விடவும் முடியவில்லை. சாதியில் இருக்க வேண்டும் என்பதை வெளிப்படையாகச் சொல்லவும் முடியவில்லை.

இதனை பயன்படுத்திய திராவிடத்தார் தமிழர் என்ற முகமூடியை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றினர். அல்லது தமிழர் அல்லாதோர் ஆட்சியை கைப்பற்றுவது பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதுவே தமிழர் அதிகாரம் பறிபோக காரணமாக அமைந்தது. இது ஈழப்படுகொலையை வேடிக்கை பார்த்தல், நதிநீர் உரிமையை விட்டுக் கொடுத்தல் போன்றவற்று காரணமாக அமைந்தது.

திராவிடர்கள் மறைமுகமாக கம்யூனிஸத்தை பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் பொது உடமையே தமிழருக்கான இலக்கு என்பதை மறைமுகமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் இவர்கள் ஜனநாயகத்தையே தூக்கி எறிகிறார்கள். இதையும் வெளிப்படையாக பேசுவதில்லை. தேர்தல் அரசியலை வெறுக்கிறார்கள். ஆனால் ஜனநாயத்திற்கு மாற்று என்னவென்று சொல்ல மறுக்கிறார்கள். இவர்கள் தங்கள் கருத்துக்களை தான்தோன்றித் தனமாக நிறைவேற்றவே விரும்புகிறார்களே ஒழிய மக்களிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டு அதன் மூலம் சமூக மாற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்புவதில்லை.

ஏற்கனவே திராவிடத்தை நமது கருத்து என்று நம்பியது போதும். தமிழர்களே திராவிடத்திடம் எச்சரிக்கையாக இருங்கள்.

நன்றி, படம் எடுக்க உதவிய தளம் - http://www.electionnow.tv

Tuesday, December 4, 2012

தேவர் குருபூஜையில் ஒரு இஸ்லாமிய பெரியவர்

வருடம் தோறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையில் ஒரு இஸ்லாமிய பெரியவரைப் பார்க்கலாம். அவரின் பெயர் ஏ.ஓ. முகமது இப்ராஹிம். 86 வயதாகும் இவர் அருப்புக்கோட்டை நல்லூர் பள்ளிவாசல் ரோட்டில் வசிப்பவர் ஆவார். 

இவர் தேவருடன் 15 ஆண்டுகள் அரசியல் சமுதாயப்பணிகள் செய்தவர் ஆவார். இவர் பாரத தாயின் வீரத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற சிறு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தில் தேவர் மீசையை எடுத்ததற்கான காரணத்தை எழுதியுள்ளார். ஒருமுறை தேவரைப் பார்த்த ஒரு பெண் தேவரின் மீசை எவ்வளவு அழகாக இருகிறது என்று தேவரின் காதுபட பேசுகிறார். 

அதைக் கேட்ட தினமே தேவர் தன் தோற்றம் எந்த பெண்ணையும் கவரும்படி இருக்கக் கூடாது என்று கூறி மீசையை எடுத்து விட்டார் என்ற தகவலை இவர் பதிவு செய்திருக்கிறார். 


இவர், சாதி மத வேறுபாடு இல்லாமல் இருந்த மக்களை காங்கிரஸ் எவ்வாறு சாதி மதத்திற்குள் தள்ளியது என்று காங்கிரஸின் அரசியலை சாடுகிறார். 

இவரது பேட்டியை பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

-----------------------------------------------------------------
பசும்பொன்னில் அந்த பெரியவருடன் நான் எடுத்துகொண்ட படம்

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...